தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய உறுப்பினர்கள் தெரிவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 2013-2014ஆம் வருடத்திற்கான புதிய நிருவாக நடைமுறை தெரிவுக் கூட்டம் (24.03.2013) கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சித் தலைமை செயலகத்தில் நடாத்தப்பட்டுள்ளது. அண்மையில் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய அமைப்பாளர், பிரதிச் செயலாளர் உள்ளிட்ட சில உறுப்பினர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளின் அடிப்படையில்; கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜாவுக்கு பதிலாக பஞ்சலிங்கம் தவேந்திரராஜா ,பிரதிச் செயலாளர்-நிர்வாகமாக முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வராக கடமையாற்றிய ஆ.ஜோர்ச் பிள்ளை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதாகவும் எதிர்வரும் தொகுதிவாரி முறை உள்ளுராட்சி தேர்தலில் அதிகாரங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமதாக்கிக் கொள்வதற்காக பல புதிய முகங்களை தேர்தலில் களம் இறக்க உள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் முதலாவதாக நடாத்தப்பட்ட மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 08 பிரதேச சபைகளில் தனித்து படகுச் சின்னத்தில் நின்றும் மாநகர சபையினை ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியுடன் இணைந்து நின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி அமைத்து நிருவாகங்களை மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
3/29/2013
| |