இது அதிர்வு வெளியிட்டுள்ள பொய் செய்தி
விரிவான செய்திகள்
எல்லா இடத்திலும் எரிகாயத்துடன் உடல்கள்: போர்குற்ற ஆதாரமா ?
09 March, 2013 by admin
சமீபத்தில் பாலச்சந்திரன் கொலைதொடர்பான விவரண காணொளி ஒன்றை ஒளிபரப்பியவேளை, இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இப்புகைப்படம் முள்ளிவாய்க்காலுக்கு அருகில் எடுக்கப்பட்டதா இல்லை பிறிதொரு இடத்தில் எடுக்கப்பட்டதா என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இருப்பினும் பல உடல்கள் எரிந்து கருகிய நிலையில் காணப்படுகிறது. இப் புகைப்படத்தை இந்தியத் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது போக, குறிப்பிட்ட படத்தை பேஃஸ் புக் மற்றும் டிவீட்டர் மூலமாகவும் சிலர் வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இப் புகைப்படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எதனையும் உறுதியாகச் சொல்லமுடியாத நிலை காணப்படுகிறது. (புகைப்படம் இணைப்பு)
இப் புகைப்படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எதனையும் உறுதியாகச் சொல்லமுடியாத நிலை காணப்படுகிறது. (புகைப்படம் இணைப்பு)
அதிர்வு இணையத்தளம் வெளியிட்டுள்ள மேலேயுள்ள படம் கொங்கோ எனும் ஆபிரிக்க நாட்டில் தென்-கிவு எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற எண்ணை தாங்கி லொறி ஒன்று தீப்பிடித்து கொண்ட போது இடம்பெற்ற மிகப்பெரியவிபத்தின் போது இறந்தவர்களின் படமாகும்.இவ்விபத்து ஜூலை 4ம் திகதி 2010ம் ஆண்டு இடம்பெற்றது இதில் 260பேர் பரிதாபமாக கருகி மாண்டனர்.
கீழே அதிர்வு இணையத்தளம் (இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டதாக அது எந்த தொலைக்காட்சி என்று குறிப்பிடாமல் ) இலங்கையில் நடந்தயுத்த குற்ற ஆதாரங்களாக சோடித்து தனது காப்புரிமை முத்திரையும் பதித்து வெளியிட்ட படத்தின் உண்மையான படத்தினையும் அதுசம்பந்தமான வேறு படங்களையும் உண்மை வாசகர்களுக்காக வெளியிடுகின்றோம்.அத்தோடு கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்க்காலுக்குஇடம்பெயர்த்து பொய்யான செய்திகளை வெளியிட்டிருக்கின்ற அதிர்வு இணையத்தளம் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்று தயவுடன் கேட்டுகொள்கின்றேன்.
எம்.ஆர்.ஸ்டாலின்