மட்டக்களப்பு மாவட்டம் இரண்டு பெரும் பகுதிகளாகக் காணப்படுகின்றது என்பது யாவரும் அறிந்தவிடையம் அவைதான் படுவான்கரை மற்றும் எழுவான்கரை என்பதாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதிதான் கடந்த காலங்களில் அதிகளவான இடர்களையும் இன்னல்களையும் சந்தித்த வந்துள்ளது என்பதுவும் யாவரும் அறிந்த விடயமே.
இவை ஒருபுறமிருக்க இப்பகுதியிலுள்ள மாணவர்களும் கல்வியில் தேற்சிபெற்று பல்கலைக்கழகம் செல்வது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு குக் கிராமமே களுமுந்தன்வெளிக் கிராமம் ஆகும்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு குக் கிராமமே களுமுந்தன்வெளிக் கிராமம் ஆகும்.
இக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து கடந்த காலத்தில் ஏற்பட்ட இடர்களையெல்லாம் சந்தித்து சாதாரணதரம் சித்தியெய்தி உயர்தரம் கற்று அதில் சிறந்த பெறுபேறு பெற்று தற்போது கலைப்பிரிவில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பாலசுந்தரம்-தற்கரன் எற்ற மாணவன்.
இவரின் வெற்றிப்படி பற்றி அம்மாணவனிடம் கேட்டபோது.
நான் முதற்கண் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்.எனது குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளது. எனது அண்ணா யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் சிற்பம் மற்றும் ஒவியக் கலைஞர் பாடநெறியினைக் இரண்டாம் வருடத்தில் கற்று வருகின்றார்.
மது பெற்றோர் மிகவும் கஷ்ட்டுப்பட்டு எம்மை கற்பித்து வருகின்றார்கள் நானும் எனது அண்ணாவும் மிகவும் சிறந்தமுறையில் சித்திரம் வரைவோம் எனது தனிப்பட்ட திறமையாலும் எம்மைக் கற்பித்த ஆசான்களின் வழிநடாத்தலிலும் எமது உறவினர்களின் ஒத்துழைப்புடன் எங்களது குடும்பத்தில் இரண்டுபேர் பர்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப் பட்டுள்ளோம்.
எனது தந்தை ஒரு கூலித் தொழிலாழி நானும் எனது அண்ணாவும் குடிசை வீட்டில் குப்பி விளக்கில்தான் படித்து பாஸ்பண்ணியுள்ளோம்.
எமக்கு எமது பெற்றோர் வீடு கட்டாமல், பொருள், பண்டங்கள் தேடாமல் ஏனைய சொகுசு வசத்திகள் தேடாமல் எம்மைக் கற்பிக்கின்றார்கள் அதற்கு மீண்டும் மீண்டு எமது பெற்றோருக்கும் ஆசியரியர்களுக்கும் உறவினர்களுக்கும் நன்றி செலுத்துகின்றேனர்
பல்கலைக் கழகத்திற்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி அமைச்சினால் தலைமைத்துவப் பயிற்றிக்காக எனக்கும் அழைப்பு வந்துள்ளது. அதற்காகவேண்டி இன்று திருகோணமலைக்குச் செல்கின்றேன் எனக் கூறினார்.
இவர்போன்ற ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கும், கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கு ஏற்ற உதவிகளையும் வசதிகளையும் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உதவ வரும் பட்சத்தில் நமது சமூதாயம் மிகவிரைவில் பாரியதொரு மாற்றத்தினை அடைந்து விடும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.