இவ் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மூன்று இல்லங்கள் கலந்து கொண்டன. இதில் முதலாம் இடமாக கம்பன் இல்லமும், இரண்டாம் இடங்களாக வள்ளுவர் இல்லமும் பாரதி இல்லமும் வெற்றிகளைப் பொற்றுக்கொண்டன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் N.குணலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இவ் விளையாட்டு விழாவிற்கு வலய உடற்கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் பெற்றோர்கள், பொதுமக்கள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.