இலங்கையில் வேடுவர்களின் பாரம்பரிய வதிவிடங்கள் சிங்கள குடியேற்றவாசிகளால் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், தமது பாரம்பரிய காடுகளில் தமது தேவைகளுக்காக வேட்டையாடுவதற்கு வேடுவர்கள் தடுக்கப்படுவதாகவும், தமது உறைவிடங்களான காடுகளை அவர்கள் இழந்துள்ளதாகவும் கூறுகிற அந்த அமைப்பு, இது குறித்து இலங்கை அரசாங்கங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறுகிறது.
இலங்கையில் தற்போதைய நிலைமைகளில் வேடுவ இனத்தவர்கள், வழமையான காடுகளை இழத்தல், பாரம்பரிய வதிவிட உரிமை, வேட்டையாடுவதற்கான உரிமை அகியவற்றை இழத்தல் என்பவற்றுடன், தமிழ் பகுதிகளில் வாழும் வேடுவர்கள் போரினால் ஏற்பட்ட பல பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாகக் கூறுகிறார், வேடுவர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட மானுடவியல் ஆய்வாளர் விஜய் எட்வின்.