தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா கடசியில் இருந்து நீக்கப்பட்டள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் யாப்பு விதிகளை மீறி செயற்பட்டதாலும், கட்சியின் அதிகாரத்தினை துஸ்ப்பிரயோகம் செய்தமை தொடர்பாகவுதம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து பரிசீலனை செய்த தலைவர்பணிக்குழு உறுப்பினர்களிடம் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா அவர்களினால் உரிய முறையில் பதிலளிக்க முடியாமையினை அடுத்து அவர் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டள்ளார் அத்துடன் கட்சியின் முன்னாள் செயலாளர் எ.கைலேஸ்வரராஜா மற்றும் வரதராஜன் ஆகியோரும் ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் அடிப்படை அங்கத்துவத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதிகாரத்தை துஸ்ப்பிரயோகம் செய்த உறுப்பினர்களையும் மக்கள் பிரதிகளையும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து துணிகரமாக நீக்கியமை குறிப்பிடத்தக்கது.