மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்திச்சேனை பகுதியில் உழவுயந்திரம் ஒன்றில் மோதுண்டு இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் பருத்திச்சேனை வண்டர்மூலை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்த மணியம் என்பவரே உயிரிழந்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மோட்டார் சை;க்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த உழவுயந்திரத்துக்கு வழி விடுவதற்காக மோட்டார் சைக்கிளை ஓரமாக கொண்டு சென்ற போது சைக்கிள் கவிழ்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
அந்தநேரத்தில் எதிர்பாராமல் பின்னால் வந்து கொண்டிருந்த உழவுயந்திரம் அவரின் தலை மீது ஏறியதால் தலை நசுங்கி ஸ்தலத்திலேயே அவர் உயிரிந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தாண்டியடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் உழவுயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணையை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.