வடமாநிலங்களைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வு மாணவர்கள் 19 பேர் தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு ஆய்வுக்காக வந்திருந்தனர். அவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள இன புத்த பிக்கு மாணவரும் ஒருவர்.
இந்நிலையில், இன்று (16.03.2013) காலை நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி, மதிமுகவினர் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர், புத்த பிக்கு மீது தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தடுத்த மற்றவர்கள், புத்தபிக்குவை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தொல்லியல் துறை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் தமிழ் அமைப்புகள் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இதன்பின்னர் காவல் துறை, போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 12 பேரைக் கைது செய்து அரண்மனை காவல் நிலையத்தில் வைத்தனர்.