ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐரோ ப்பிய நாடுகள் சமர்ப்பித்து, எமது நாட்டு மக்களின் இறைமைக் கும், சுயாதிபத்தியத்திற்கும் அழுத்தங்களை கொண்டு வருவதற்கு முய ற்சிகள் எடுத்து வருகின்ற போதிலும் குற்றப் பிரேரணையின் விளைவு கள் எவ்விதம் இருந்தாலும் அது எங்கள் நாட்டின் இறைமையை எவ் விதத்திலும் பாதிக்கப்போவதில்லை என்ற நம்பிக்கை நம்நாட்டு மக் களுக்கு இருந்துவருகிறது.
இலங்கையை 1505ம் ஆண்டு முதல் ஆக்கிரமித்த ஐரோப்பிய ஏகாதிபத் திய நாடுகள் தொடர்ந்தும் இலங்கையில் தலையீடு செய்து, எமது நாட் டில் பொருளாதார மற்றும் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு எடுக் கும் முயற்சியாகவே இந்த ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட் டத்தில் மேற்கத்திய நாடுகள் நடந்து கொள்கின்றன என்று அரசியல் அவதானிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
1505ம் ஆண்டில் இலங்கை என்ற இந்து சமுத்திரத்தில் இருக்கும் வாச னைத் திரவியங்களின் வளமும், இரத்தினக்கற்களின் வளமும் இருக் கும் சிறிய தீவை மேற்கத்திய நாடுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. முதலில் போர்த்துக்கேயர் 1505ம் ஆண்டில் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். போர்த்துக் கேயர் இலங்கைக்கு வரும் போது இல ங்கையை ஆக்கிரமிக்க வேண்டுமென்ற எண்ணம் அவர்களிடம் இரு க்கவில்லை. அவர்கள் எங்கள் நாட்டில் இருந்து இரத்தினக்கற்களையும், வாசனைத்திரவியங்களையும் எடுத்துச் செல்லும் வர்த்தக நோக்கத்துட னேயே இங்கு வருகை தந்தனர்.
இலங்கையில் தற்போது இருப்பவர்களைப் போன்று அன்றும் தேசத்துரோக கும்பல்கள் இருந்தன. இந்தத் தேசத்துரோகிகள் போர்த்துக்கேயரின் மது போத்தல்களுக்கும், அவர்கள் வாரி வழங்கிய வெள்ளி காசுக்கும் அடி மையாகி, எங்கள் நாட்டை போர்த்துக்கேயர் ஆக்கிரமிப்பதற்கு அடித் தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்கள் உள்ளூரில் உள்ள சிற்றரசர் களை காட்டிக் கொடுத்து, போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செலுத்துவதற்கு உதவும் துரோகச் செயலில் ஈடுபட்டனர்.
போர்த்துக்கேயரை விரட்டியடித்துவிட்டு, ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற் றினார்கள். இறுதியாக அவர்களையும் விரட்டிவிட்டு, இலங்கையில் அடியெடுத்து வைத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் இருந்த தேசத்துரோக எட்டப்பர்களின் உதவியுடன் படிப்படியாக நாட் டின் நாலா பக்கங்களையும் கைப்பற்றி இறுதியில் 1815ம் ஆண்டு கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றி இலங்கை முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.
இவ்விதம் வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகள் இலங்கை மீது தனது படை பலத்தைக் காட்டி, ஆக்கிரமித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது நாட்டின் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுடைய மக்கள் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுத்தம் செய்தனர். இந்த யுத்தத்தில் நம் நாட்டு வீரர்களின் வீரத்துடன் இந்த வெளிநாட்டு இராணுவத்திற்கு நேரு க்கு நேர் நின்று யுத்தம் செய்யும் வலு இல்லாதிருந்தது. அவர்கள் தங் கள் பீரங்கிகளை பயன்படுத்தி, எமது நாட்டின் வீர மைந்தர்களை போர் முனையில் வீர மரணத்தை தழுவச் செய்தனர்.
இன்றும் அதே பாணியில் மேற்கத்திய நாடுகள் தென்னிலங்கையில் தோன் றிய மண்வாசனையுடைய எங்கள் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுக்கு எதிராகவும், இராஜதந்திர ரீதியிலான யுத்தத்தை ஆரம்பித்து, அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த எத்தனிக்கின்றன. இந்த மேற்குல நாடுகளின் எந்த முயற்சிகளையும் தோற்கடிக்கக்கூடிய வகையில் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து அவரது கரங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் தலைவன் மக்கள் ஆதரவை இழந்திருந்தால் மாத்திரமே வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கு அந்நாட்டின் அரசாங்கத்தையும் அந்தத் தலைவனையும் பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயே ஈராக், லிபியா போன்ற மேலும் பல அரபு நாடுகளின் அரசாங்கங்களை அமெரிக்கா வும் அதன் நேச நாடுகளும் கடந்த காலத்தில் பதவியிழக்கச் செய் ததை நாம் அவதானித்திருக்கிறோம். இலங்கையில் இருப்பதை போன்று மக்கள் பேராதரவைப் பெற்ற அரசாங்கத்தையோ, அரசாங்கத் தலை வரையோ இந்த வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகளால் எதுவுமே செய்ய முடியாது. அவை அவ்வப்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத் தக் குற்றச்சாட்டுகள் போன்ற போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கைக்கு சிறு அச்சுறுத்தல்களை மாத்திரமே செய்ய முடியும். அதை விடுத்து இந்த வல்லரசு நாடுகளினால் எதையுமே செய்ய முடியாது.
இலங்கை வாழ் இனங்களுக்கிடையில் என்றுமே கருத்து மோதல்களோ, சண்டை சச்சரவுகளோ, யுத்தங்களோ நடைபெறவில்லை என்பதற்கு எமது வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. எல்லாளன், துட்டகை முனு யுத்தம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நடந்த யுத்தமல்ல. இலங்கை மன்னான துட்டகைமுனு வெளிநாட்டில் இருந்த வந்து எங்கள் நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செலுத்திய எல்லாளனு டன் சண்டையிட்டு அந்த மன்னனை மரணிக்கச் செய்த யுத்தமே எல்லாளன் துட்டகைமுனு யுத்தமாகும்.
அது போன்று 13ம் நூற்றாண்டில் இருந்து எங்கள் நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டு சேனைகளுடன் நாம் சண்டையிட்டிருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் நாம் தோல்வியடைந்து அநுராதபுரம் இராஜதானியை இழந்து பொலன்னறுவைக்கும் பின்னர் அங்கிருந்து தம்புள்ளை போன்ற மற்ற நகரங்களுக்கும் பின்வாங்கினோம். இதனையே வரலாறு எடுத்துக் கட்டுகிறது.
இன்றைய மேற்கத்திய வல்லரசுகள் மீண்டும் இலங்கையை அடிபணிய வைக்க வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்துடன் ஜெனீவா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் குள்ளத்தனமாக நம்நாட்டுக்கு எதி ராக செயற்பட்டாலும் அந்த முயற்சிகளை எங்கள் நாட்டு மக்கள் ஐக் கியமாக ஒரே குரலில் எதிர்த்து, ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத் தும் போது, அந்த மேற்கத்திய வல்லரசுகளுக்கு வாலைச் சுருட்டிக் கொண்டு, அடங்கிப் போவதைவிட வேறு வழியிருக்காது.