மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வட்டார முறையின் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளன என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
"உள்ளூராட்சி சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புதிய திருத்தத்தின் அடிப்படையில் வட்டார முறையிலேயே ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களும் நடத்தப்படும்" என பிரதித் தேர்தல் ஆணையாளர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலான அறிவிப்பை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அதுவரையில் தேர்தல் திணைக்களத்தினால் தேர்தல் தொடர்பிலான எந்தவித முடிவுகளையும் எடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு மற்றும் எருவில்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளன.
இந்த ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலமும் கடந்த 17.3.2012ஆம் திகதியுடன் முடிவடைந்தன. எனினும் மேலும் ஒரு வருடத்திற்கு இதன் பதவிக் காலம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நீடிக்கப்பட்டன.
இதற்கமைய இந்த ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் கடந்த மார்ச் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் கீழும் ஏனைய எட்டு பிரதேச சபைகளும் பிரதேச செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, எல்லை நிர்ணய குழுவின் நியமனத்தின் பின்னரே இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க தெரிவித்தார்.
தற்போது எல்லை நிர்ணய குழுக்களினை நியமிப்பதற்கான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த பணிகள் எதிர்வரும் ஜூலை மாத்திற்கு முன்னர் நிறைவடையவுள்ளன . இதனை தொடர்ந்து ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.
"உள்ளூராட்சி சட்டமூலத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திருத்தச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன" என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதனால் வட்டார முறையிலேயே தேர்தலை நடத்த முடியும். வட்டார முறையில் தேர்தலை நடத்துவது என்றால், எல்லை நிர்ணய குழுக்களினை நியமிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.