கல்லடி புதிய பாலத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி
289 மீற்றர் நீளமும் 14மீற்றர் அகலமும் கொண்ட கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைபவ ரீதியாக இன்று 04.30 மணியளவில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மிக நீளமான இரும்புப் பாலம் என்று அழைக்கப்படும் கல்லடி பாலம் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது.
50 வருட கால உத்தரவாதத்தின் பேரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம்90 ஆண்டுகளுக்கு மேல் பாவனையிலுள்ளது.
இது சேதமடைந்து வருவதனாலேயே அதன் அருகில் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.