3/20/2013

| |

மட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முடிவடைந்தது

கடந்த 17.3.2013 ஞாயிற்றக்கிழமை நள்ளிரவு 12மணியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஒன்பது உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை அந்த உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பொறுப்பேற்று நடாத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி என்.சத்தியானந்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஒன்பது உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் கடந்த 17.3.2012 ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஒருவருடத்திற்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு நீடித்திருந்தது.
நீடிக்கப்பட்ட ஆட்சிக்காலம் கடந்த 17.3.2013ம் திகதி நள்ளிரவு 12மணியுடன் நிறைவடைந்ததால் இந்த உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிப்பொறுப்பு தற்போது அதன் செயலாளர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் நடவடிக்கை மாநகர சபையின் ஆணையாளரிடமும், ஏனைய எட்டு பிரதேச சபைகளின் நடவடிக்கை அதன் செயலாளர்களிடத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி என்.சத்தியானந்தி தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பான எந்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு 17.3.2012 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலின் படி இந்த உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் ஆணையாளரிடமும், செயலாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளுராட்சி மன்றங்களின் ஆயட்காலம் நான்கு வருடங்களை கொண்ட நிலையில் மேலும் ஒருவருடம் நீடிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆட்சி செய்திருந்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் எறாவூர் நகர சபைகள், ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை தவிர ஏனைய 9 உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆட்சிக்காலம்