சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநாட்டின் நினைவுக் காட்சியகக் கட்டுமானத்தின் துவக்க விழா 23ஆம் நாள் மாஸ்கோவில் நடைபெற்றது. ரஷியாவில் பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷீ ச்சிந்பீங்கும் ரஷியாவின் துணைத் தலைமை அமைச்சர் ஓல்கா கலோதெஸும் இவ்விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். 85 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் புரட்சிகரப் பணி மிகவும் சிக்கலான நிலைமைக்குள்ளாகியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 140 பிரதிநிதிகள் இன்னல்களைச் சமாளித்து, மாஸ்கோவுக்கு வந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநாட்டை நடத்தினர். இந்த மாநாடு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி, சீனாவின் புரட்சிகரம் மற்றும் சீன மக்களின் விடுதலை இலட்சியத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷீ ச்சிந்பீங் தெரிவித்தார். இந்த நினைவுக் காட்சியகம் சீன-ரஷிய பாரம்பரிய நட்புறவை முன்னேற்றுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.