பர்மாவின் மையப்பகுதியில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் வெடித்த வன்செயல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மெயிக்டிலா நகரில் முஸ்லிம்களின் கட்டிடங்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மேற்குப் பகுதியில் பௌத்தர்களுக்கும், றொகிஞ்ஞா முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த வருடம் மோதல்கள் நடந்தது முதல் இந்தப் பகுதியிலும் பதற்றம் அதிகரித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.