இலங்கையில் இலங்கை முஸ்லிம்களின் பண்டய வரலாற்றைப் பாதுகாத்து பேணும் நோக்கில் காத்தான்குடியில் அரும் காட்சியகம் ஒன்றை நிறுவு வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் ஓர் அங்கமாக கடந்த (பெப்ரவரி) 1ம், 2ம், 3ம் திகதிகளில் காத்தான்குடியில் தேசிய கலாசாரக் கண்காட்சி ஒன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப் பட்டது.
கிழக்கு மாகாணத்தில் அனைவராலும் திரும்பிப் பார்க்கப்படுகின்ற காத்தான்குடியின் பிரதான வீதியில் பஸ்மலா சதுக்கத்தின் முன்பாக அமைந்துள்ள மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இக்கலாசாரக் கண்காட்சி நடைபெற்றது. இலங்கை முஸ்லிம்களின் தொன்மை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டன.
கிழக்காசியாவிலேயே முஸ்லிகள் செறிந்து வாழுகின்ற காத்தான்குடியின் பல சிறப்பம்சங்களை இதன் மூலம் அறிந்து கொண்டனர்.
இக்கண்காட்சி காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. இக்கண்காட்சி ஏற் பாட்டில் ஒன்பது குழுக்கள் ஈடுப டுத்தப்பட்டிருந்தன.
இதன் ஆரம்ப வைபவம் பெப்ரவரி 1ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு விழாவின் ஏற்பாட்டுக்குழு தலைவரும் காத்தான்குடி பிரதேச செயலாளருமான எஸ்.எச். முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் தேசிய மரபுரிமை கள் அமைச்சர் டாக்டர் ஜெகத்பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பொரு ளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.
எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன், மட்டக்களப்பு மாவட்ட அரசா ங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத் தான்குடி நகர சபை தலைவர் எஸ்.
எச். அஸ்பர், கிழக்கு மாகாண கலா சார திணைக்கள அலுவல்கள் பணிப் பாளர் வெலிக்கல உட்பட முக்கியஸ்தர்கள், அதிகாரிகள், பிர முகர்கள் கலந்து கொண்டனர். இக் கண்காட்சியின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று உற்பத்தி வள ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத் கலந்து கொண்டு வைப ரீதியாக கண்காட்சியை திறந்து வைத்ததுடன் பார்வையிட்டார்.
அதே போன்று விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம கேயும் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் வருகை தந்து பார்வை யிட்டார்.
இக்கலாசார கண்காட்சியை கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் உட்பட பொது மக்களுமாக இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக இதன் ஏற்பாட்டுக்குழு தலைவரும் காத்தான்குடி பிரதேச செயலாளருமான எஸ்.எச். முஸம்மில் தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய் ந்த இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய கலாசாரத்தின் அடிப்படையில் இக் கண்காட்சி நடைபெற்றது.