மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச சபைக்கான புதிய கட்டடத்திற்கு நேற்று(07.02.2013) முன்னாள் முதல்வரும், மாகாணசபை உறுப்பினரும் ஜானாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் ரூபா.27,131,000 மதிப்பீட்டில் அமைக்கவிருக்கும் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் K.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக ஜானாதிபதியின் ஆலோசகர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் இந் நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள்,கிராம மட்டத்திலான பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.