ஹெலிகொப்டரில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அமைச்சர் பஷீர் சேகுதாவூத்; பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா உள்ளிட்ட அதிதிகள் வரவேற்றனர்.
இதன்போது குறித்த பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், அவர்களுடைய குறை-நிறைகளையும் கேட்டறிந்து விலங்கியல் ஆய்வுகூடத்தையும் பார்வையிட்டார்.