2/16/2013

| |

ஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்கத் தயாராக உள்ளது

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் பிறந்தவுடன் இலங்கைக்கு அநாவசியமான பிரச்சினைகளை உண்டுபண்ணுவதில் தீவிர மாக செயற்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இந்தத் தடவையும் அதே பல்லவியை மீண்டும் பாட ஆரம்பித்துவிட்டார்.
கடந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையில், இலங்கை யுத்தம் முடிவடைந்த கடைசி நாட்களில் அரசாங்கப் படைகள் மனித உரிமை மீறல்களையும், யுத்தக் குற்றங்களையும் புரிந்து அப்பாவி தமிழ் மக்களுக்கு கொடு மைகளைப் புரிந்ததாக நவநீதம்பிள்ளை அம்மையார் குற்றம் சாட் டினார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாடு முடிவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கம் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அவதானமாக மீளாய்வு செய்து யுத்தக் குற்றச் செயல்களில் எவராவது ஈடுபட்டிருந்தால் சம் பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்ட பூர்வமாக வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
அத்துடன் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக் களை இப்போது அவர்களின் சொந்த வசிப்பிடங்களில் மீள்குடி யேற்றுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் பூர்த்தி செய்து அவர்களில் பெரும்பாலானோருக்கு தங்கள் சொந்த ஊர்களி லேயே வசதியாக வீடுகளில் வாழ்வதற்கும் அரசாங்கம் நடவடி க்கை எடுத்துள்ளது.
யுத்தத்தின் போது தங்கள் உறவுகளை இழந்து, சொத்துக்கள், உடமைக ளையும் இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த பல்லாயிரக்கணக் கான மக்களுக்கும் அரசாங்கம் ஏற்கனவே திருப்திகரமான வாழ் வாதார திட்டங்களை செய்து முடித்துள்ளது.
இன்று வடக்கு, கிழக்கில் ஒருவர் கூட வறுமை நிலையினால் பாதி க்கப்படாமல் இருப்பதற்கு அரசாங்கத்தின் இந்த நற்பணியே பிர தான காரணமாகும். அதுமட்டுமன்றி யுத்தத்தின் போது ஆயுதங்க ளுடனும் நிராயுதபாணிகளாகவும் இராணுவத்தினரிடம் சரணடை ந்த 11,500 எல்.ரி.ரி.ஈ. போராளிகளில் 500 பேரைத் தவிர அனைவ ரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு பெற்ற 11,000 பேர் ஏற்கனவே தொழில் வாய்ப்புக்களை பெற் றுள்ளார்கள். அவர்களில் சிலர் அரசாங்கம் பெற்றுக்கொடுத்த இலகு அடிப்படையிலான வங்கிக் கடன் மூலம் சுயதொழில் முயற்சிக ளையும் ஆரம்பித்து இன்று நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
விடுவிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளிகளில் 3,500 பேர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பு பெற் றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அன்று துப்பாக்கித் தாங்கி யுத் தத்தில் ஈடுபட்டவர்கள். ஆனால் இன்று இவர்கள் துப்பாக்கியை கைவிட்டு, மண்வெட்டியை தங்களின் ஆயுதமாக கொண்டு விவ சாயத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் நீர்வளம் குறைந்த பகுதிக ளில் இந்த 3,500 முன்னாள் போராளிகள் சேனைப்பயிர்ச் செய்கையை வெற்றிகரமான முறையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் இவர்கள் சோளம், பயறு, உழுந்து, கச்சான் போன்ற உப உணவுப் பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய்து அதன் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை சிவில் பாதுகாப்புத் திணை க்களத்தின் நிதியில் சேர்த்துவிடுகிறார்கள்.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதான அதிகாரியான ரியல் எட் மிரல் ஆனந்த பீரிஸ் இந்த முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகளை அன்புகாட்டி பராமரிக்கிறார். இவர்கள் அனைவரும் அரசாங்க சேவையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மாதாந்தம் 19,500 ரூபா சம் பளமாக கொடுக்கப்படுவதுடன் இவர்கள் ஒவ்வொருவம் ஓய்வூதி யம் பெறுவதற்கும் தகுதி பெற்றுள்ளார்கள்.
இவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 400 முன்னாள் பெண் போரா ளிகள் பாலர் பாடசாலை ஆசிரியைகளாக தெரிவு செய்யப்பட்டு இப் போது முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சுமார் 7,000 சிறுவர் சிறுமியருக்கு அரசாங்கத்தின் அனுசரணையுடன் இல வசமாக பாலர் வகுப்புக்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இரு க்கிறார்கள்.
இவ்விதம் அரசாங்கம் யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்குள் நாட் டில் 30 ஆண்டுகால யுத்தமொன்று நடைபெற்றதா என்று இங்கு வரும் வெளிநாட்டவர்கள் விந்தையடையக்கூடிய வகையில் நாட் டில் அபிவிருத்திப் பணிகளை வடக்கு, கிழக்கு மாகாணம் உட்பட நாடெங்கிலும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இந்தளவிற்கு நாட்டில் சகஜ நிலையும் மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் தழைத்தோங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நவநீதம்பிள்ளை அம்மையார் அநாவசியமாக எங்கள் நாட்டுக்கு எதி ராக ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை சுமத்தி அரசாங்கத்தையும் நாட்டு மக்களையும் துன்புறுத்தி வருவது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
நவநீதம்பிள்ளை அம்மையாரின் இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரி வித்த ஊடக தகவல்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அவர்கள், ஜெனீவாவில் எந்தச் சவாலையும் எதிர்கொள்ள இல ங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறதென்று திட்டவட்டமாக அறி வித்திருப்பது எமக்கு மன ஆறுதலை அளிக்கிறது.
இதேவேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் அறிக்கையை வரவேற்று இந்த அம்மையார் சொல் அளவில் அல்ல இதனை செயற்படுத்திக் காட்ட வேண்டும் என்று நாட்டுக்கு தீங்கிழைக்கக் கூடிய கருத்தொன்றை வெளியிட் டுள்ளார்கள்.
அரசியலில் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் நாம் அனை வரும் தேசப்பற்றுடன் அந்நிய அச்சுறுத்தல்களுக்கு இடமளிக்கலா காது என்பதை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஞாப கப்படுத்த விரும்புகிறோம்.