2/02/2013

| |

மட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்

Copy of 31.01.2013-BATTI LAND MEETINGமட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பொருளதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் நேற்று(30.1.2013) புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பொருளதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும்இ கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்இ கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பாகவும் வட்டார ரீதியான எல்லை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.