மட்டக்களப்பு மாவட்டத்தின் வேளாண்மை அறுவடை முடிவடைந்த வயல்களை நோக்கி வெளிநாட்டு கொக்குகள் வந்த வண்ணம் உள்ளன.படுவான்கரை பிரதேசத்தின் வட்டிக்குளத்தில் கொக்குகள் மேயும் காட்சிகளே இவை.காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப வெளிநாட்டு கொக்குகள் மட்டக்களப்புக்கு படையெடுத்துவரும் நிலையில் அவை தங்கி நிற்கும் பகுதியினை அழகுபடுத்த எதுவித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக குருக்கள்மடம் சரணாலய பகுதி தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே உள்ளது.