2/28/2013

| |

கிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாவட்ட ரீதியில் 450 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு இந்த ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற 10,000 பட்டதாரிகளின் விண்ணப்பங்களிலிருந்து 6,800 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியிருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

இலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையில் நடந்துவரும் இலங்கை தொடர்பான விவாதம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது.
இதில் திமுக, அதிமுக, பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இலங்கை அரசு தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து பேசினார்கள்.
குறிப்பாக, ஐநா மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை இந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
இவர்களின் இந்த கோரிக்கைகள் விமர்சனங்களுக்கு பதிலளித்த இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள், ''இலங்கையில் நடந்தவிடயங்களுக்கான பொறுப்பு கூறல் நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளை இந்த பொறுப்புக்கூறல் என்பது ஒரு நாட்டிற்கு உள்ளிருந்தே வருவது தான் சரியானது என்பது எனது கருத்து. அது தான் எதிர்பார்க்கும் பலன் தரும் என்பதும் எனது நம்பிக்கை. இந்தமாதிரியான அணுகுமுறை தான் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்ல, மற்ற தரப்பாராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்கும்'' என்றார்.
ஐநா தீர்மானம்
ஐநாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்பதை அறிவிக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை குறித்து பதிலளித்த சல்மான் குர்ஷித், ''இந்த முறை நாம் எடுக்கவிருக்கும் இறுதி முடிவு என்னவென்று நான் இப்போதே அறிவிக்க முடியாது. நான் உங்களுக்கு இப்போது சொல்வது என்னவென்றால், இந்த தீர்மானத்தை கொண்டுவரும் நாடுகள், இலங்கை அரசுடன் பேசிய பிறகு, இலங்கை அரசில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால், அத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு மற்ற நாடுகளை ஒப்புக்கொள்ளச் செய்யுமானால் நாங்கள் ஒருவிதாமான முடிவுக்கு வருவோம். மாறாக, இலங்கையில் நிலைமைகள் முன்னேறவில்லை என்கிற முடிவு எட்டப்படுமானால் நாங்கள் வேறுவிதமான முடிவுக்கு வருவோம் என்பதை மட்டும் உங்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்றார்.
இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் உருவான இலங்கையின் பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று இலங்கை அதிபரின் சகோதரரே பகிரங்கமாக கூறியிருப்பது குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்கிற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சல்மான் குர்ஷித், ''இலங்கை அரசானது பதிமூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு அதிகமாக சென்று செயலாற்றவேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலை. அதை தொடர்ந்தும் வலியுறுத்துவோம். பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்துசெய்யவேண்டும் என்று இலங்கையில் கோரிக்கைகள் வெளிப்படுவது குறித்து இலங்கை அரசிடம் நாங்கள் பேசியபோது அந்த விவாதங்கள் ஜனநாயக நாட்டில் வெளிப்படும் பலதரப்பு கருத்துக்களின் ஒரு பகுதியே தவிர அது அரசின் இறுதியான கொள்கை முடிவல்ல என்று எங்களுக்கு சொல்லப்பட்டது.'' என்றார்.
சர்வதேச ராஜீய அரசியலில் அனுமதிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டு, நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் விதத்தில் இலங்கை அரசுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கமுடியுமோ அவ்வளவு அழுத்தங்களை இந்தியா கொடுக்கும் என்று கூறிய சல்மான் குர்ஷித், இலங்கையுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் கருத்து வேறுபாடுகள், மனக்குறைகள், கடும் விமர்சனங்கள் இருந்தாலும் இலங்கையை இந்தியாவின் எதிரி நாடு என்று தம்மால் கருத முடியாது அப்படி கூறமுடியாது என்றும் அறிவித்தார்.
»»  (மேலும்)

| |

'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்

மஹிந்த சமரசிங்க ( ஆவணப்படம்)ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும் அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ளார்.
புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தரப்புவாதங்களை முன்வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மனித உரிமைகள் நிலமைகள் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் தீர்மானம் தமது அபிப்பிராயப்படி தேவையற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் போருக்கு பின்னர் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை மிகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் எஞ்சியுள்ள தரப்பினர், சில மேற்கு நாடுகளில் இலங்கைக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களது தவறான தகவல்களுக்கு சர்வதேச சமூகத்தில் சில பிரிவுகள் எடுபட்டுவிட்டதாகவும் கூறியுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அதனால், இலங்கை பக்கசார்பான, சமநிலையற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு
இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இறுதிப் போர் நிகழ்வுகள் குறித்தும், சானல்4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தின் உண்மைத்தன்மை பற்றியும், ஏனைய பல விடயங்கள் குறித்தும் இலங்கை இராணுவ தளபதியால் நியமிக்கப்பட்ட ஒரு விசாரணை மன்றம் ஆராய்ந்து தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறது என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அந்த விசாரணை மன்றம் தற்போது தனது இரண்டாவது கட்ட நடவடிக்கையாக, சானல் 4 ஆவணப்படம் குறித்த புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை மாணவர்கள் படுகொலை மற்றும் ஏசிஎஃப் கொலைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அதற்கு சிரேஷ்ட அரச சடத்தரணிகளின் குழு ஒன்று உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால சிபாரிசுகள் குறித்த விடயத்தில், அவற்றில் சில ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணிகள் குறித்த பிரச்சினைகளின் தீர்வுக்காக காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் குறைக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் நடமாட்டத் தடை எதுவும் கிடையாது என்றும், வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு, வழமை நிலைமைக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், 75 வீதமான கண்ணிவெடிகளை இலங்கை இராணுவம் அகற்றிவிடதாகவும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் விடுதலைப்புலிகளை இலக்கு வைப்பதற்கான ஒரு ஏற்பாடு அல்ல என்றும் அது முன்னாள் போராளிகளுக்கான நல ஏற்பாடு என்றும் அவர் அங்கு தனது நீண்ட உரையில் கூறியுள்ளார்.
»»  (மேலும்)

2/27/2013

| |

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்

image.jpeg
இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இளம் உள்ளங்களுக்கான ஆன்மீக சுகம் எனும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை வேலைத்திட்டத்தின் ஊர்வலமொன்று இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு, ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், மாவட்டத்திலுள்ள இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த சமயங்களைச் சேர்;ந்த மத பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி திருமதி எஸ்.கலாராணி, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் உட்பட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள், இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்டத்தின் ஊர்வலம், நந்தகோபன் மண்டபம் வரை சென்றது. இதையடுத்து இளைஞர் யுவதிகளுக்கான ஆன்மீக உரைகளும் சமயப் பிரமுகர்களினால் நிகழத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
»»  (மேலும்)

| |

சனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்

ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் சனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ள ‘போர் தவிர்ப்பு வலயம்’ விவரணப்படத்தை திரையிடுவதற்கு இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை படையினர் போர்க் குற்றங்கள் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டும் வகையிலும், பிரபாகரனின் மகன் படையினரிடம் சரணடைந்துள்ளது போன்றும் சித்தரிக்கும் வகையில் சனல்-4 தொலைக்காட்சி புதிய வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, மற்றும் எப்.ஐ.எப்.டி.எச். ஆகிய மனித உரிமை அமைப்புகள் தயாராகி வருகின்றன. இந்த ஆவணப்படம் உறுதிப்படுத்தப்படாத, ஆதாரமற்ற, நம்பகமற்ற காட்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இதனை ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிட எடுக்கும் முயற்சியானது ஐ.நா.வின் சட்டங்களை மீறும் செயல் எனவும் ரவிநாத் ஆரியசிங்க தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியானது அரசியல் நோக்கத்துடன் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒரு சதித்திட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடொன்றின் நன்மதிப்பைக் குறைக்கும் நோக்கில் இவ்வாறான போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் ரவிநாத் ஆரியசிங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டு ள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவும் ஐ.நா. உறுப்புரிமையை மீறும் செயல்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பின்றி, நடுநிலைமையாகச் செயற்பட்டு, என்ன நோக்கத்துக்காக மனித உரிமைகள் பேரவை உருவா க்கப்பட்டதோ அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். உறுப்பு நாடொன்றுக்கு எதிராக, அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆதாரமற்ற, அரசியல் நோக்கத்துடன் முன் னெடுக்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு மனித உரிமைகள் பேரவை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரவிநாத் ஆரியசிங்க தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு மட்டத்திலான முயற்சிகளை எடுத்திருக்கும் நிலையில், அவற்றைக் குழப்பும் வகையில் புலி ஆதரவு சக்திக ளும், அரசசார்பற்ற நிறுவனங்களும் செய ற்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கை தொடர்பான நல்லெண்ணத்தை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக சீர்குலைக்கும் என்பதையும் ரவிநாத் ஆரியசிங்க தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளிலுள்ள புலி புகலிடக் கோரிக்கையாளர்கள் போலியாகத் தயாரிக்கப்பட்ட இவ்வாறான ஆவணப் படங்களை வெளியிட்டு அதன்மூலம் நன்மையடைவதற்கு முயற்சிப்பதுடன், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுக ளையும் குறைத்து மதிப்பிடுவதற்கு முய ற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். இவ்வாறான போலியான ஆவணங்க ளைத் திரையிடுவதற்கு ஐ.நா. கட்டட வளாகத்தைப் பயன்படுத்துவ தற்கு அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அவ்வாறு இடமளிப்பதானது ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தை மீறும் செய லாக அமைந்துவிடும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

2/26/2013

| |

முடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்?தோழமையுடன் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கு..

வணக்கம்.
40வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை முடித்துக்கொண்டு நாமொரு பொது உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த வேண்டுகோளைப் பொதுவில் வைக்க விரும்புகின்றோம்.
40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு நாம் விரும்புவதையும், இலங்கைக்கு சந்திப்புத் தொடர் எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அரசியல் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாரிஸ் - 38வது இலக்கியச் சந்திப்பிலேயே வெளிப்படுத்தியிருந்தோம் என்பது அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நீங்கள்அறிந்ததே. எனினும் அது குறித்த முடிவை கனடா - 39வது சந்திப்பில் எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.
கனடா சந்திப்பில் 40வது சந்திப்பை தீர்மானிக்கும் நிகழ்ச்சி நிரல் வந்தபோது நீங்களும் லண்டனுக்கு 40வது சந்திப்பை மின்னஞ்சல் மூலம் கோரியிருப்பது தெரிய வந்தது. அப்போது, பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் பங்குபெற்றியவரும் தற்போது இலங்கை இலக்கியச் சந்திப்பு குழுவிலிருப்பவருமான தோழர் கற்சுறா தலையீடு செய்து 40வது சந்திப்பு இலங்கைக்கும் கோரப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இரு கோரிக்கைகள் குறித்தும் விவாதித்து ஒரு முடிவை எட்டியிருக்க வேண்டிய கனடா இலக்கியச் சந்திப்பு, வருந்தத்தக்க முறையில் முடிவுகள் ஏதும் எடுக்காமலேயே 40வது சந்திப்பை எங்கே நடத்துவது என்ற முடிவை இலங்கைக்குக் கோரிய குழுவும் லண்டனுக்குக் கோரிய குழுவும் கலந்துரையாடி முடிவு செய்துகொள்ளட்டும் என அறிவித்தது.
அதைத் தொடர்ந்து நமக்குள் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. லண்டன் குழுவின் சார்பில் எங்களுடன் பேசுவதற்கு தோழர் ராகவனை நீங்கள் நியமித்தீர்கள். எனினும் துரதிர்ஷ்டவசமாக ஒரு முடிவு எட்டப்படாதது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தைகளில் நீங்களோ இராகவனோ போதிய ஈடுபாட்டைச் செலுத்தவில்லை என்பதையும் வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கின்றோம். அதேவேளையில் லண்டனில் சந்திப்பை நடத்துவது குறித்து உங்களிடமிருந்து அறிவித்தல்கள் ஏதும் வெளியிடப்படாமலுமிருந்தது. எனவே மேலும் காலத்தைக் கடத்த விரும்பாத நாங்கள் இலங்கையில் 15 பேர்களும் புகலிடத்தில் 5 பேர்களும் கொண்டதான 40வது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவை உருவாக்கி, வரும் யூலை மாதம் இலங்கையில் 40வது இலக்கியச் சந்திப்பு நடைபெறும் என அறிவித்தோம்.
எங்களது அறிவித்தல் வெளியாகிப் பல நாட்களிற்குப் பின்பு நீங்கள் லண்டனில் 40வது சந்திப்பை நடத்தப்போவதாக பொதுவில்அறிவித்திருந்தீர்கள். இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. இலக்கியச் சந்திப்பு இரண்டாக உடைவதற்கான புறச்சூழல்கள் உருவாக்கப்பட்டன. இது விரும்பத்தகாதது.
அதன்பின்னும் முரண்களைத் தீர்ப்பதற்காக தோழர் ராகவனுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அது இந்நாள்வரை தொடர்கிறது. இந்தப் பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் ராகவன் பொறுப்புணர்வுடன் கூடிய வரவேற்கத்தக்க ஒரு பரிந்துரையை லண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கும், இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கும் முன்னே வைத்தார். அவரது பரிந்துரையின் சாரம் கீழ்வருமாறு இருக்கிறது:
“இருதரப்பினரும் புரிந்துணர்வுடன் 40வது சந்திப்பை ஏப்ரலில் லண்டனிலும், 41வது சந்திப்பை யூலையில் இலங்கையிலும் நடத்துவதாக ஓர் உடன்பாட்டுக்கு வந்து அதைக் கூட்டறிக்கையின் மூலம் பொதுவில் அறிவிப்பது”.
தோழர் ராகவனின் பரிந்துரையை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். லண்டன் இலக்கியச் சந்திப்புக்கு எமது முழு ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவிக்கிறோம். அதேபோன்று யூலையில் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலக்கியச் சந்திப்புக்கு நீங்களும் ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கையில் சந்திப்பு நடத்துவது குறித்து உங்களிற்கு அரசியல்ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைப் பொதுவில் நீங்கள் வைக்க வேண்டும். அது உங்களது கருத்துரிமை. ஆனால் இந்தக் கருத்துரிமை இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலக்கியச் சந்திப்பைத் தடுப்பதற்கான அதிகாரத்தை உங்களுக்கு வழங்கிவிடாது என்றும், அது இலக்கியச் சந்திப்பின் சனநாயக மரபிற்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
எங்களது இந்த வேண்டுகோளை நீங்கள் பொதுநலனைக் கருத்தில்கொண்டு ஏற்றுக்கொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம். தோழர் ராகவனின் பரிந்துரையின் அடிப்படையில் ஓர் கூட்டறிக்கையை வெளியிட்டு முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர உங்களை அழைக்கின்றோம். காலம் மிகக் குறுகியதாக இருப்பதால் முடிந்தளவிற்கு சீக்கிரமாக உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றோம். நாங்கள் இந்த வேண்டுகோளைப் பொதுவெளியில் வைப்பதால் உங்களது பதிலும் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
தோழமையுடனும் வணக்கத்துடனும்
இலங்கை இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக்குழு (புகலிடப் பிரிவு)
- 25 பெப்ரவரி 2013.
»»  (மேலும்)

| |

தோழர்பொன்னம்பலம் சண்முகலிங்கம்‏

kishan1 1261944 ஆண்டு ஜூன் 23ம் திகதி கரவெட்டியில் பிறந்த பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் தனது சிறுவயதில் நேரடியாகக் கண்ணுற்ற மோசமான அநியாயமான சம்பவங்களால் மிகவும் பாதிப்படைந்து அவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கவும் போராடவும் புறப்பட்டார்.
இவருடைய இளம் பராயத்தில் தமிழ் பேசும் இலங்கையரின் தானைத் தலைவராக ஈழத்துக்  காந்தி தந்தை செல்வநாயகம் இருந்தார். செல்வநாயகத்தின் அரசியலோ சிங்கள வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட இனவாதத்துள் பிறந்து. யாழ்ப்பாண நடுத்தர வர்க்க தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியது.  பரந்த மனிதம் தழுவிய கருத்தியல் செல்வநாயகம் அறியாத ஒன்று.  ஒரு பிரிட்டிஷ் விசுவாசியான செல்வநாயகம் இலங்கை வரலாற்றிலேயே மோசமான  இனவாதக் கட்சியான UNPயுடன் உறவாக இருந்தார். N.M பெரேரா, கொல்வின் R.D.சில்வா, பீற்றர் கெனமன், சண்முகதாசன் போன்றவர்களுக்கு இருந்த சிந்தனை விருத்தி, ஒரு சாதாரண மேடைப்பேச்சைக் கூட நிகழ்த்த முடியாத செல்வநாயகத்துக்கு இருக்கவில்லை. இதனைக் கண்ணுற்ற சண்முகலிங்கம் அவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் முழு நேர தொண்டனாக சேர்ந்தார். அமிர்தலிங்கம் முதல் ஆனந்தசங்கரி வரை ஆரமபத்தில் லங்கா  சமசமாஜக் கட்சியில்தான் சேர்ந்திருந்தனர். ஆனால் இவர்கள் அனைவரும் பின்னர் தேசியவாதச் சகதியினுள் விழுந்து விட இனவாத அரசியலை முற்றாக நிராகரித்த சண்முகலிங்கம் அவர்கள் அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மலையக மக்களுக்காக தன்னலம் பாராது உழைத்தார். ஜெயவர்த்தன அரசினால் 1977ல்  திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு அநாதரவாக வன்னிக்குத் துரத்தப்பட்ட மலையக மக்களுக்காக இராஜசுந்தரம், சந்ததியார், சுந்தரம் போன்றவர்களுடன் சேர்ந்து காந்தீய அமைப்பு மூலம் அகதிகளான மலையக மக்களின் விடிவுக்காக பணியாற்றினார்.

முற்போக்கு சிந்தளையும் தெளிவான அரசியல் பார்வையும் கொண்ட சண்முகலிங்கம்  அவர்கள் 1981ல் சந்ததியாரை கொழும்புக்கு அழைத்துச் சென்று சண்முகதாசனை அறிமுகம் செய்து வைத்தார். எண்பதுகளில் கைதாகி சிறைவாசமும் அனுபவித்தார். சிறையிலிருந்து வெளிவந்தபின்னர் தமிழ்நாடு சென்று புளொட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனைகளால் வெளியேறி தவித்த இளைஞர்களுக்கு உதவி செய்தார். ஞானசேகரம் (பரந்தன் ராஜன்) , தேவானந்தா (டக்லஸ்),  அற்புதன் போன்றவர்களுடன் சேர்ந்து  ENDLF என்ற இயக்கத்தை உருவாக்கினார்.

கனடாவுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் மித்திரன், மயில், கருமையம் சபேசன், மனவெளி செல்வன் போன்றவர்களுடன் இணைந்து தேடகம் அமைப்பிலும் தீவிரமாகப் பங்காற்றினார். மிகவும் நேர்மையாக பொதுப்பணத்தை கையாள்வதிலும், கொள்கைகளை ஒரு போதும் விட்டு கொடுக்காது போராடுவதிலும் எந்தவித சுய இலாபமும் இல்லாத ஏராளமான பொது காரியங்களில் சிரத்தையோடு ஈடுபடுவதிலும் சண்முகலிங்கம் அவர்கள் முன்னணியில் திகழ்ந்தார். புலிகளினது மாபியா அரசியல் தமிழ் மக்களை படுகுழியில் விழுத்திவிடும் என்பதில் மிகவும் தெளிவான சிந்தனை கொண்டிருந்த சண்முகலிங்கம் அவர்கள் புலிகளை துணிகரமாக வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். எந்த விதமான பணமோ புகழோ கருதாது மாற்று கருத்துக்கள் வெளிப்படுத்தும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் டென்மார்க் பாரதி பாலனின் "சமரசபூமி" நூல் வெளியீட்டுவிழாவை கனடாவில் நடாத்திய பெருந்தகைதான் சண்முகலிங்கம் அவர்கள்.

நாளொரு அமைப்பும்,பொழுதொரு பிழைப்புமாக புறம்போக்குத் தமிழர்களும் முஸ்லீம்களும் பணத்திற்காகவும் புகழிற்காகவும் பிழையென தெரிந்துகொண்டும் சரியென நியாயப்படுத்துகையில், தங்களது சுயநலத்துக்காக கொள்கைகளை காற்றில் பறக்க விடுவோர் மலிந்துபோன காலகட்டத்தில் சுயமாக சிந்தித்து இறுதி வரை வாழ்ந்த சண்முகலிங்கம் அவர்கள் ஒரு ஒளிவிளக்காக கொள்கை குன்றமாக திகழ்ந்தவர்.

நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சண்முகலிங்கம் அவர்கள் கடந்த 22ம் திகதி டொராண்டோவில் காலமானார். அவரின் இறுதி மரியாதைகள் பற்றிய விபரங்களிற்கு 647-878-2478 அல்லது 416-431-0718 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
»»  (மேலும்)

| |

சந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலைக்காட்சியின் மற்றுமொரு வியாபார யுக்தி

இலங்கையில் சமாதானம் நிலைபெற்று நான்கு ஆண்டு களை அண்மித்துள்ள நிலையில் மக்கள் அச்சம், பீதியின்றி தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் இத் தறுவாயில் நாடு முன்னெப்போதும் இல்லாதவாறு துரித முன்னேற்றம் அடைந்து வருவதை கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.
இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுமானால் நமக்கு பாரிய அச் சுறுத்தலாகவும் இதுவரைகாலமும் தாம் அனுபவித்து வந்த சுகபோகத்தையும் வருமானத்தையும் முற்றாக இழக்க நேரிடும் என்ற பீதியில் ஒரு சில இனத் துரோக சக்திகள் இலங்கைக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் இலங்கையில் ஒரு கிளர்ச்சியை ஏற் படுத்தி அதில் தொடர்ந்தும் குளிர்காய முனைந்து வருகின்றன. இதில் ஓர் அங்கமே, சில அரச சார்பற்ற நிறுவ னங்களையும் சமாதானத்திற்கு எதிரா னவர்களையும் ஒன்று திரட்டி இலங்கைக்கெதிராக முன்வைக்கப்படும் இவ்வாறான திரிவுபடுத்தப்பட்ட பொய்ப் பிரசாரங்களாகும்.
இதன் ஓர் அங்கமாகவே, போலியான உண்மைக்குப் புறம்பான நிகழ்வுகளை உண்மையிலே இடம்பெற்ற நிகழ் வுகளைப் போன்று தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளாகவும் ஆவண ப்படங்களாகவும் தயாரித்து காட்டுவது அந்தவகையில் உலகில் பிரபல்யம் பெற்று விளங்கும் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் புதிய வியாபார யுக்தியே பாலச்சந்திரனின் புகைப்படங்களாகும். இது பதுங்கு குழியொன்றில் உயிரோடு வைக் கப்பட்டிருந்த காட்சியையும், நிலத்தில் இறந்து கிடப்பதாகவும் சித்திரிக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய இப்புகைப் படங்களை வெளியிட்டதன் மூலம் உலக அரங்கில் இலங்கையைத் தனிப்படுத்தி சமாதானத்தை சீர்குலைத்து தமது முதலாளிகளின் 'இருப்பை' உறுதிப்படுத்த முனைந்துள்ளது.
இதுவரை காலமும் புலிகள் மேற்கொண்ட இன அழிப்புக்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறிதளவேனும் சிந்தித்து வேதனைப்படாத இத்துரோக சக்திகள் ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் போலி ஆவணங்களை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மார்ச் மாதம் நெருங்கும் போது வதந்திகளையும், கட்டுக் கதைகளையும் பரப்பி இலட்சக்கணக்கான டொலர் நோட்டுகளை அபகரிக்கும் கொடிய இனத்துரோக சக்திகள் அசுர வேகத்தில் செயற்பட ஆரம்பிக்கின்றன.
இந்தியாவில் பிரபல்யமான இந்து பத்திரிகை கூட பாலச்சந்திரனின் புகைப்படங்களின் உண்மையான பின்னணியை ஆராயாமல் முண்டி யடித்துக் கொண்டு பிரசுரித்திருப்பது கவலைக்குரிய விடயமே. சனல் 4 தொலைக்காட்சி சேவை ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் அனுசர ணையுடனான பிரேரணையை வெற்றி கொள்ளச் செய்து இலங்கையில் இனங்களுக்கிடையில் உருவாகியிருக்கும் சமாதானப் புரிந்துணர்வையும் சகவாழ்வையும் சீர் குலைத்து அதன் மூலம் இலாபம் காண முனைந் திருக்கின்றது.
இதற்கு முன்னரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஜெனீவா மாநாடு நடைபெறும் போது இப்படியான போலி கட்டுக்கதைகளை எல். ரி. ரி. ஈ.யை ஆதரிக்கும் இயக்கங்களும் அரச சார்பற்ற சில இனத் துரோக சக்திகளும் பரப்பி வருவதை வழமையாக கொண்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில்தான் சனல் 4 இந்தக் காட்சியை வெளியிட்டி ருக்கின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இற்றைக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தற் போதுதான் எம் மக்கள் சுபீட்சத்தைக்காண ஆரம்பித்திருக்கின்றனர். சிறப்பானதோர் எதிர்காலத்தை நோக்கிய தம் பயணத்தை ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் இப்புகைப்படங்களை சனல் 4 என்ன நோக்கத்திற்காக வெளியிட்டுள்ளது என்பதை எவருமே இலகுவில் புரிந்துகொள்வர்.
சனல் 4 வெளியிட்டுள்ள சிறுவனைப் புலிகளே படுகொலை செய்து அந்தப் பழியை அரசாங்கத்தின் மீது போட முயற்சி செய்துள்ளதுடன் இதனூடாக அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தவும் அவர்கள் எண்ணியுள்ளனர். ஆனால் எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலுமே குழந்தைகளைப் படுகொலை செய்ததே கிடையாது. பொறுப்பு வாய்ந்த ஒரு அரசுக்கு அப்படியான தேவையும் ஏற்படாது.
இலங்கை அரசாங்கம் எச்சந்தர்ப் பத்திலும் சிறுவர்களை ஆயுதமேந்தி யுத்தக் களத்துக்கு அனுப்பவில்லை. மாறாக புலிகள் 8, 10 வயதுடைய சிறுவர்களை பலவந்தமாகப் பிடித்து ஆயுதப் பயிற்சி அளித்து யுத்தத்தில் ஈடுபடுத்தினர். அவர்களே குழந்தைகளை குரூரமாக கொலை செய்தனர். ஆனால் அரசாங்கம் 21 வயதுக்கு மேற் பட்டவர்களையே ஆயுதப் படைக்கு ஒழுங்கு முறையாக சேர்த்துப் பயிற்சி அளித்து நடவடிக்கைகளில் ஈடுப டுத்துகின்றது.
இராணுவம் எக்காரணம் கொண்டு மனிதாபிமானமற்ற முறையில் யுத்த முனையில் அப்பாவிகளை சுட்டுக்கு விக்கவில்லை. எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதிகளே தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார்கள். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் எல். ரி. ரி. ஈ.யினரின் பிடியில் இருந்து இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களை இந்தக் கொடிய பயங் கரவாதிகளே சுட்டுக்கொல்வதை முழு உலகமும் கண்கூடாகக் கண்டது.
ஒரு நல்ல நற்பண்புகளையும் உடைய ஒருவனுக்கு எதிராக போலி வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து சுமத்தி வருவதால் உண்மையறியாத மக்கள் அவனின் மேல் அவநம்பிக்கை கொள்வார்கள் என்ற ஹிட்லரின் கொள்கையையே இந்த இனவிரோத சக்திகளும் பின்பற்று கின்றனர்.
இன விரோத சக்திகளின் போலி பிரசாரங்களுக்கு ஏமாந்த பல நாடுகள் அவர்களின் துஷ்ட குணங்கள் தெரிந்தோ தெரியாமலோ உடந்தை போகின்றனர்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை இலங்கை அரச படையினர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டும் சனல் 4 தொலைக்காட்சி சேவையானது, யுத்தத்தின் போது புலிகள் பல இலட்சக் கணக்கான அப்பாவிச் சிறுவர்களையம் பொது மக்களையும் கொடூரமாக கொலை செய்தமையை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை?
சாதாரண பொது மக்களின் பிள் ளைகளை ஏன் இவர்கள் கண்டு கொள்வதில்லை? இவர்களை வைத்து படம் எடுத்தால் அவற்றை அதிக விலைக்கு விற்கமுடியாது என்பதற் காகவா? அவர்களது பெற்றோருக்கு தமது பிள்ளைகள் குறித்து கனவுகாண தகுதி இல்லை என்பதற்காகவா? இல்லை சிறுவர்கள் முதியவர்கள் எனப் பார்க்காமல் புலிகள் தமது சொந்த சமூகத்தை கொன்று குவித்ததை மக்கள் மனதில் இருந்து இவர்கள் அழித்துவிட முயற்சிக்கின்றார்களா?
அவ்வாறே புலிகள் இயக்க உறுப்பினர்களது குடும்பத்தவர்களை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்றால் கடற்புலித் தலைவர் சூசை யினதும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகளை ஏன் பாதுகாப்பாக கொழும்பிற்கு அழைத்துவந்து பாதுகாக்க வேண்டும்?
தமிழ் மக்களை மனித கேடயங்க ளாக பயன்படுத்தி, தனிநாடு, தனியாட்சி கோரிக்கைகளை முன்வைத்து இல ங்கை அரசாங்கத்துக்கு எதிராக பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த புலிகள் அமைப்பினர் இன்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது. இவர்களது செயற்பாடுகளால் பல் லாயிரக் கணக்கானோரின் உயிர் காவுகொள்ளப்பட்டதுடன், பல கோடி சொத்துக்களுக்கும் அழிவு ஏற்பட் டது. ஆனால் பொறுப்பு மிக்க அரசானது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கக்கூடிய வகையில் வினைத்திறன் மிக்கதுமான புனர்வாழ்வுத் திட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் திட்டமிட்டு முன்னெடுத்ததில் வெற்றியும் கண்டுள்ளது.
இலங்கையில் நிலவிய பயங்கர வாதம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலர் நஷ்டவாளிக ளாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் புலிகளுடன் சட்டவிரோதமாக வியாபாரம் செய்துகொண்டிருந் தவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டு நடத் துபவர்களுக்கும் புலிகள் இல்லா தொழிக்கப்பட்டமை அவர்களை வீதிக்கிறக்கியது போலாயிற்று. போதைப் பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் ஆயுதக்கடத்தல் மூலம் மில்லியன் கணக்கான பண த்தை இவர்கள் சம்பாதித்து சொகுசு வாழ்க்கையையும் அனுபவித்து வந்த னர்.
புலிகளின் தூதுவர்கள் மில்லியன் கணக்கான டொலர்களை நாளாந்தமும், மாதாந்தமும் மற்றும் வருடாந்தமும் புலம்பெயர் மக்கள் மூலம் திரட்டி வந்தனர். இம் மக்களில் சிலர் தமது சொந்தப் பணத்தை விருப்பத்திலும் மற்றும் சிலர் வலுக்கட்டாயத்தின் பெயரிலும் செலுத்தி வந்தனர். இதைத் தவிர பயங்கரவாதிகளுக்கு மேலும் பல வழிகள் வருமானம் திரட்டுவதற்கு இருந்து வருகின்றது. இவ்வாறு கிடைக்கப் பெறும் வருமானங்களை பயன்படுத்தி இப் பயங்கரவாதிகள் தம்மை பலப்படுத்திக்கொண்டு பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு நாடடின் இறையாண்மையை முற்றாக சீர்குலைத்தனர்.
பயங்கரவாதிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் இவர்கள் ஆதரவு சக்திகள் நஷ்டவாளிகளாகி தமது இலாபத்தை முற்றாக இழந்தனர்.
இருப்பினும் இலங்கையில் வாழ்ந்த அனைத்து இன மக்களும் தற்கொலை குண்டுத் தாக்குதல், குண்டு வெடிப்பு, சிறுவர்களின் கட்டாய் ஆட்சேர்ப்பு, உயிரிழப்பு மற்றும் அனைத்து அழிவுகளிலும் இருந்து சுதந்திரம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தின் மூலம் வடக்கில் வாழும் மக்கள் நிரந்தர நிம்மதியையும் சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டனர். நாடு இப்போது பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.
சத்தியம் என்றும் நிலைத்திருக்கும் உண்மையை போலிக் கட்டுக்கதைகள் மூலம் மறைத்துவிட முடியாது. இது ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் நிரூபிக்கப்படும். இதன் மூலம் நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான தர்ம யுத்தத்தில் எங்கள் நாடு வெற்றிபெறும். இது உலக நாடுகளின் பாராட்டை எமக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதில் ஐயமே இல்லை.
»»  (மேலும்)

| |

நாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா பயணம்

நாட்டின் அரசிய லமைப்பை மீறும் வகையில் இலங்கைக்கு எதிராக ஜெனீவா செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி சபாநாய கரை கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப் படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி அரசியல் பீட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பியசிரி விஜேநாயக்க தனி நாடொன்றை உருவாக்குவதற்கு உதவும் வகையில் சம்பந்தன் அடங்கலான குழு செயற்படுகிறது.
இம்முறை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்க உள்ள பிரேரணையினூடாக ஐ.நா. பிரதிநிதிகளுக்கு தடையின்றி நாட்டிற்குள் வரவும் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தவும் இடமளிக்க அனுமதி கிடைக்கும். பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கெதிரான மாநாட்டை உலகத் தமிழ் பேரவை நடத்த உள்ளது.
இதில் சம்பந்தன் அடங்கலான குழு பங்கேற்க உள்ளது. நாட்டை துண்டாடும் இத்தகைய மாநாட்டிற்கு பிரித்தானியாவில் அனுமதி வழங்கியது தொடர்பில் எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார். மனித உரிமை பேரவை மாநாட்டில் த.தே. கூட்டமைப்பு பங்கேற்கமாட்டாது என சில ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது குறித்து வினவியதற்குப் பதிலளித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. திட்டமிட்டப்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் பங்கேற்பர் என்றார். நாம் பங்கேற்க மாட்டோம் என்பது தவறான தகவல் எனவும் கூறினார்.
»»  (மேலும்)

| |

"இயற்கை அனர்த்தம்" நூல்வெளியீடு - 24.02.2013

தவசி லேணிங் சிற்றியின் தலைமை ஆசிரியர் வி.எஸ். அக்சயன் அவர்களினால் எழுதப்பட்ட இயற்கை அனர்த்தம் எனும் நூல்வெளியீட்டு வைபவம் நேற்று (24.02.2013) சந்தணமடு ஆற்று கரையில் இடம்பெற்றது. 
வி.எஸ். அக்சயன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் முதல்வருமான சிவனேசதுரை - சந்திரகாந்தன் அவர்களின்  ஊடகச் செயலாளர் திரு. ஆ.தேவராஜா அவர்களும், செயற்குழு உறுப்பினர் நா.அருண் அவர்களும்,  செங்கலடி மத்திய கல்லூரி புவியியல் ஆசிரியையான திருமதி சக்தி புவீந்திரன் அவர்களும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் தாதியியல் பணிமணை உத்தியோகத்தர் திரு. சு.புவீந்திரன் அவர்களும் அத்துடன் கல்வி நிலைய ஆலோசகர் திரு. சி.திலகன் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர் மா.பரசுராமன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர். சித்தாண்டியின் இயற்கை வனப்புடைய பகுதிகளில் ஒன்றான சந்தணமடு ஆறு என்னும் இயற்கையான பிரதேசத்தில் இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
»»  (மேலும்)

2/23/2013

| |

குவர்னிகா (Guernica)

வணக்கம்,

யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் 40 வது இலக்கியச் சந்திப்பை முன்னிட்டு, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை இணைத்து குவர்னிகா (Guernica) என்னும் பெயரில் இலக்கியத் தொகுப்பு நூலொன்றை வெளியிட இலக்கியச் சந்திப்புக் குழு தீர்மானித்துள்ளது.

சிறுகதை, கவிதை, நாடகம், மொழியாக்கம் போன்ற படைப்பாக்கப் பிரதிகளுடன் இலக்கியம், இசை, அரங்கியல், திரைப்படம்,ஓவியம் சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளையும் அரசியல் கட்டுரைகளையும் விளிம்புநிலை மக்களின் பண்பாடு சார்ந்த பிரதிகளையும் இணைத்து இத்தொகுப்பு நூல் வெளியாகவிருக்கிறது.

இந்தத் தொகுப்பில் உங்களது ஆக்கமும் நிச்சயம் இடம்பெற வேண்டுமென விரும்புகின்றோம். எனவே தயவு செய்து எதிர்வரும் மார்ச் 31ம் தேதிக்கு முன்பாக உங்களது ஆக்கத்தை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிகளில் ஒன்றுக்கு (அல்லது கீழ்க்கண்ட தபால் முகவரிக்கு) அனுப்பிவைத்து இத் தொகுப்பு நூல் காத்திரமாவதற்கு துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

இலக்கியச் சந்திப்பு தொகுப்பு நூலுக்காக:
ஷோபாசக்தி shobasakthi@hotmail.com
தமயந்தி simon.vimal@yahoo.no
கருணாகரன் poompoom2007@gmail.com

தபால் முகவரி:
KARUNAGARAN
754, KANAGARASA LANE,
THIRUNAGAR NORTH,
KILINOCHCHI
SRI LANKA
»»  (மேலும்)

| |

ஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்விற்கு இலங்கை அரசாங்கம் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை தாங்கவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச் சர் மஹிந்த சமர சிங்கவுக்கு இதற் கான நியமனத் தினை வியாழக் கிழமை இரவு உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடு த்தே வெளிவிவகார அமைச்சு இதற் கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் அமர்வுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை தாங்கும் உயர்மட்ட அமர்வு 27 ஆம் திகதி புதன்கிழமை ஜெனீவா நேரப்படி காலை 11.50 மணிக்கும் இலங்கை நேரப்படி மாலை 4.20 மணிக்கும் ஆரம்பமாகவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவில் ஐ.நா.வுக்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த 5 சட்டத்தரணி, நீதியமைச்சின் செயலாளர், பாதுகாப் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதிகள், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளமை தெரிந்ததே. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் உயர்மட்ட அமர்வுகளைத் தவிர்ந்த ஏனைய அமர்வுகளுக்கு ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் தலைமையில் இந்தக் குழு கலந்துகொள்ளுமெனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா கூறினார்.
கூட்டத் தொடரின் உயர்மட்ட அமர்வின்போது நாடொன்றின் அமைச்சர் ஒருவர் தலைமையிலான குழு பங்குபற்றுவதே இதுவரையில் வழமையாக இருந்துள்ளது. அந்த வகையிலேயே இம்முறையும் உயர்மட்ட அமர்விற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை தாங்கவுள்ளார். மேலும் இவரைத் தவிர வேறெந்த அமைச்சர்களும் இக்கூட்டத் தொடரில் கலந்துகொள் வதற்காக நியமிக்கப்படவில்லையென்றே அமைச்சு வட்டாரங்கள் கூறின.
»»  (மேலும்)

| |

ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சிங்

ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையின் போதே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கான காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சுதர்சனம் நாச்சியப்பன் தெரிவித்தார்.
அத்துடன் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தாம் இலங்கை அரசாங்கத்தை கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட 37 அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய, இலங்கையை வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.
»»  (மேலும்)

| |

பட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக சாணக்கியன் இராஜபுத்திரம் இராசமாணிக்கம்

மட்டக்களப்பு மாவட் டத்தின் பட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக சாணக்கியன் இராஜபுத்திரம் இராசமாணிக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவராகப் பதவி வகித்த எஸ். எம். இராசமாணிக்கத்தின் பேரனாவார். நேற்று முன்தினம் இவர் அலரி மாளிகையில் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
முன்னாள் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்த எஸ். எம். இராசமாணிக்கம் ஏற்கனவே எழு வருடங்கள் சமஷ்டிக் கட்சியின் சுயேட்சை உறுப்பினராகவும் அதன்பின்னர் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக 13 வருடங்களும் பதவி வகுத்துள்ளார்.
இராசமாணிக்கத்தின் உறவினர்கள் பலர் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் செயற்பட்டுள்ளனர். 1987 ல் இந்திய அமைதிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட சக்கரவர்த்தி இராசமாணிக்கம் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் உறவினராவார்.
கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற சாணக்கியன் பின்னர் அவுஸ்திரேலியாவில் சதர்ன் குவின்டன் பல்கலைக்கழகத்தில் வணிகப் பிரிவில் பட்டம் பெற்றவராவார். இவர் தமது சமூக சேவையினால் பிரதேச மக்களின் அபிமானத்தைப் பெற்று புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பர்னாந்து நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவரும் தமக்குரிய நியமன கடிதத்தை ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். ஸ்ரீல. சு. க. பொதுச் செயலாளர் அமை ச்சர் மைத்திரிபால சிரிசேனவும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார். 
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரானுக்கு பயணமாகின்றனர்

ஈரான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தெஹ்ரானுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (23.02.2013 ) பயணமாகின்றார்.
தனது விஜயத்தின்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும் ஈரானில் உள்ள மாநிலங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களின் பிரதான மூன்று நகரங்களை இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் ஈரான் அரச அதிகாரிகளுடன் முதலமைச்சர் நஜீப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் என்று முதலமைச்சுச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதலமைச்சர் நஜீப்புடன் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப்பும் ஈரான் விஜயம் செய்கின்றார்.
»»  (மேலும்)

2/21/2013

| |

சுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார்

இலங்கையில் கடந்த வாரம் கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து உயிர் தப்பிய செய்தியாளர் ஒருவர், தாக்குதல் நடந்தது முதல் தனக்கு இலங்கையின் ஜனாதிபதி உதவியதாகக் கூறி, அவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தினால் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட அந்த அறிக்கை, ஜனாதிபதியின் இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ஃபராஸ் சௌகத் அலி என்னும் அந்தச் செய்தியாளர் தனது செய்திப் பணிகளை நியாயப்படுத்தியும் எழுதியுள்ளார்.
ஃபாரஸ் சௌகத் அலியின் வீட்டுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த மூன்று பேர் அவரது கழுத்தில் சுட்டார்கள்.
தன்னுடைய காயங்கள் மிகவும் கடுமையானவை என்றும் அதனால் தான் இன்னமும் பொலிஸாருக்கு முழுமையான வாக்குமூலத்தை வழங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், தனக்கு மருத்துவமனையின் தனிப்பட்ட வகையில் பாதுகாப்பு வழங்கியதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவர் தனது கடுமையான கருத்துக்களை வெளியிடும் செய்திப்பணிகளுக்காகவே இலக்கு வைக்கப்பட்டதாக ஊடக உரிமை அமைப்புக்கள் கூறியுள்ளன. அண்மையில் இவர் ஊழல்கள் குறித்து எழுதிய சில கட்டுரைகளில் சில அதிகாரிகளையும் சம்பந்தப்படுத்தியிருந்தார்.
பணிகள் நியாயமானவை
ஆனால், இந்த அறிக்கையில் தான் இலக்கு வைக்கப்பட்டதற்கான நோக்கம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
தனது பணிகள் நியாயமானவையாக, சமமானவையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து விசாரித்ததற்கு உத்தரவிட்டதற்காக அவர் ஜனாதிபதிக்கு நன்றி கூறியுள்ளார்.
இப்படியாக முன்னர் தொடர்ச்சியாக செய்தியாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட வேளைகளிலும் இலங்கை அரசாங்கத்தினால் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவை குறித்து எவரும் இதுவரை பிடிபடவில்லை.
இந்தத் தாக்குதல் அவரது செய்திப்பணியின் பாணியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் பணியாற்றும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் கூறியுள்ளார்.
இந்த பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டது உட்பட இந்தப் பத்திரிகை எதிர்கொண்ட தாக்குதல்கள் கொடுமையானவையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் பத்திரிகையை கடந்த வருடம் மேல்மட்டத்தில் நல்ல தொடர்புகளைக் கொண்ட வணிகர் ஒருவரினால் வாங்கப்பட்டது.
அது தனது அரச எதிர்ப்புத்தொனியை குறைத்துக்கொண்டாலும், இன்னமும் சில புலனாய்வு செய்திக் கட்டுரைகளை அது பிரசுரித்துத்தான் வருகிறது. ஃபாரஸ் சௌகத் அலி இலங்கை மற்றும் பிரிட்டிஷ் ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கிறார்.
»»  (மேலும்)

| |

பாரிஸ் நகரில் நினைவேந்தல்

»»  (மேலும்)

| |

விசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம்

மாகாணத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது விசேட தேவை கருதி மாகாணசபையில் விசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் அளித்துள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கே சபை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு  தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாததந்த அமர்வின் போது தனிநபர் பிரேரணை சம்பந்தமான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
மாகாணத்தில் அனர்த்தங்கள் ஏற்படும்போது விசேட தேவை எனக்கருதி மாகாணசபையின் தலைவியின் அனுமதியோடு விசேட சபை அமர்வை கூட்டுதல் வேண்டும் என்ற பிரேரணையை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை சமர்ப்பித்தார்.
அந்த பிரேரணையே சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. மாகாண சபை ஆரம்பித்து நான்கு வருடங்கள் சென்ற போதிலும்  முதன் முறையாக இப்படி ஒரு பிரேரணையை அமைச்சர் உதுமாலெப்பை கொண்டுவந்தது மிகவும் வரவேற்கத்தக்கது என பிரேரணைக்கு ஆதரவளித்து பேசிய தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினர் இரா.துரைரட்ணம் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

2/20/2013

| |

இந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்டும் கிளிநொச்சில் கால் பதித்துள்ளது.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி எனப்படுகின்ற பரந்தன் ராஜன் தலைமையிலான ஈஎன்டிஎல்எப் தனது முகவர் ஒருவரை கிளிநொச்சியில் களமிறக்கியுள்ளது. பிரித்தானியாவில் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தராவிருந்த தீபன் என்பவரே இவ்வாறு களமிறக்கப்பட்டுள்ளார். 

தீபன் தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுள் நுழைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. சிறிலங்கா சுதந்திக்கட்சின் பெரும்புள்ளிகளுடன் கிளிநொச்சிப் பிரதேசத்தில் பிரசன்னமாகும் இவர்தானே சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொள்கின்றாராம். 

ஆனால் வன்னி மக்கள் புலிகளின் கோரப்பிடியிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக சர்வதேச பாடசாலை ஒன்றின் அதிபராகவிருந்து அரசியலில் நுழைந்துள்ள கீதாஞ்சலி கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


றோ வின் முகவரான இவரின் வருகை அரசியல் வட்டாரங்களில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் சமூக அமைதியை குலைப்பதற்கு பல்வேறு உத்திகளை மேற்கொண்டுவரும் றோ வின் நிகழ்சி நிரலை தீபன் எவ்வாறு நிறைவேற்றப்போகின்றார் என்பது கூர்ந்து அவதானிக்கப்படவேண்டியதாகும். 

புலிகளியக்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதற்கு தமிழ் மாற்று இயக்கங்கள் மேற்கொண்ட சமூகவிரோத செயல்கள் காரணகர்த்தாவாக இருந்தது என்பது மறைக்க முடியாத உண்மை. மேலும் ஈஎன்டிஎல்எப் புலிகளுடன் ஒப்பந்த அடிப்படையிலேயே சமூகவிரோத செயற்பாடுகளில் இறங்கியிருந்தனர் என்பது பின்னாட்களில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை. 

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது மாற்று இயக்கங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மனிதநேயமற்ற செயல்கள் மக்கள் புலிகளை ஆதரிக்க நிர்பந்தித்தது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு அப்போது ஈஎன்டிஎல்எப் அமைப்பு இழிபுகழ் பெற்றிருந்தது. அவ்வியக்கத்தின் மனிதவிரோத செயல்களை முன்னணியில் நின்று நிறைவேற்றியவர்களில் தீபனும் ஒருவர். இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறியபோது இந்திய இராணுவத்தினருடன் இந்தியா சென்ற இவர் பின்னர் பிரித்தானியா சென்று றோ வின் நிகழ்சி நிரலின்கீழ் பிரித்தானியாவில் செயற்பட்டுக்கொண்டிருந்தார் என்பதை கடந்த காலங்களில் பல்வேறு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தது. 

 தமிழ் மக்கள் ஆயுதக்குழுக்களையும் வன்செயலாளர்களையும் வெறுக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறனவர்களின் பிரசன்னம் மக்களின் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்வதுடன் , தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் லாபங்களுக்கான போலிப்பிரச்சாரங்களுக்கும் வழிவிட்டுக்கொடுக்கின்றது.
எது எவ்வாறாயினும் தனிநபர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்படமுடியாதவை. ஆனால் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈபட்ட நபர்கள் , அதற்கான எவ்வித தண்டனைகளையும் அனுபவிக்காது பிரித்தானிய பிரஜா உரிமை மற்றும் பணப்பலத்தினை கொண்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற இடமளிக்கப்படுகின்றமை மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 
நன்றி -இலங்கைநெற் செய்திகள்
»»  (மேலும்)

| |

மாணவர்களிடம் பணம் அறவிட கூடாது

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.
இது தொடர்பிலான மீள் சுற்றுநிரூபமொன்று சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்;படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
'கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் மாகாண அரசாங்கத்தின் கீழே உள்ளன. இந்த பாடசாலைகளுக்கு தேவையான நிதி மாகாண அமைச்சினால்  வழங்கப்படுகின்றது' என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இதனால்; பாடசாலை நிர்வாகம் மாணவர்களிடம் பணம் அறவிட வேண்டிய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களிடமிருந்து பணம் அறவிட்டால். அவ்வாறான பாடசாலை அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுகிறது.

மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியிலுள்ள பிரதான மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் வேலைகள் இன்று ஆரம்பமாகியன. அத்துடன் அந்த சுற்றுவட்டத்தில் இருந்த காந்தி சிலையும் அகற்றப்பட்டு பிரிதொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ்; நகரின் மத்தியில் உள்ள காந்தி சதுக்கம், காந்தி பூங்காவாக மாற்றம்பெறுகிறது. தேசத்தின் மகுடம் (தெயட்ட கிருள) வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கென 38.301 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன.
இதில், மட்டக்களப்பு மாநகர சபை 1.98 மில்லியன் ரூபாய்க்கு வீதி அபிவிருத்திக்கான வேலைகளையும் சிலைகள் நிறுவுதல், சுற்று வேலை அமைத்தல், கொங்கிறீற் இடுதல், புற்தரை அமைத்தல் உள்ளிட்ட வேலைகளை 36.31 மில்லியன் செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நிறைவடையவுள்ளது.  2030 வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், 28 இணைத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் முதலில் 7 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு கோட்டை, விமான நிலையம், வெள்ளைப்பாலம், காந்தி சதுக்கம், வெபர் மைதானம், மட்டக்களப்பு வாயில் உள்ளிட்ட பகுதிகள்; புனரமைக்கப்படவுள்ளன. 
விமானநிலையமானது இரண்டு பில்லியன் செலவிலும், ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் மற்றும் 25 ஏக்கரில் 250 மில்லியன் செலவில் கைத்தொழில் பேட்டை,  மட்டக்களப்பு நகரிலுள்ள பாலங்கள் அகலமாக்கப்பட்டு 1.2 பில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தின் போது மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு அந்த சிலை பிரிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்படும் என்று மட்டக்களப்பு நாநகர சபை மேயர் சிவகீத்தா பிரபாகரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
»»  (மேலும்)

2/19/2013

| |

1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு முதலமைச்சர்

1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான குழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத வெறுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிண்ணியா ஜம்இய்யத் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சபையின் நிருவாக சபை உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அங்கு முதலமைச்சர் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டில் 1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான பேரினவாதக்குழுக்களால் திட்டமிடப்பட்டு முஸ்லிம் விரோதச் செயல்கள் நடத்தப்படுகின்றன. இதனை வழிநடத்தும் சில வெளிநாட்டு முஸ்லிம் விரோத சக்திகள் அக்குழுக்களுக்கு பணத்தை வழங்கி மீண்டும் பயங்கரவாதச் சூழ்நிலையை ஏற்படுத்த முனைகின்றன. இது குறித்து முஸ்லிம் மக்கள் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்வதோடு ஐவேளைத்தொழுகையில் ஈடுபட்டு பாதுகாப்பு வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.
மக்களை அமைதி காக்கும்படி உலமா சபையினரும் கோரவேண்டும். சுதந்திர தினத்தில் கலந்து கொள்ள திருமலை வந்திருந்த ஜனாதிபதியிடம் இவ்விடயம் தொடர்பாக நான் நீண்ட உரையாடினேன்.  ஜனாதிபதி அப்போது மிகத்தெளிவாக நாடு எல்லார்க்கும் சொந்தமானது. எவரும் அச்சப்படத்தேவையில்லை.
குறிப்பாக முஸ்லிம் மக்களையும் பள்ளிவாயல்களையும் பாதுகாப்பு எனது கடமையாகும் என்று என்னிடம் உறுதியாகச் சொன்னார்.  ஒற்றுமைக்கு உதாரணமாக மூன்று இன மக்களும் வாழுகின்ற திருகோணமலை மாவட்டத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்” என்றார்.
»»  (மேலும்)

| |

நாடு திரும்புகிறார் சாவெஸ்

புற்றுநோய்க்காக கியூபாவில் சிகிச்சை பெற்றுவந்த வெனிசுவெலா ஜனாதிபதி ஹுகொ சாவெஸ் நாடு திரும்பவுள்ளார்.
இது தொடர்பில் சாவெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சாவெஸ் தனது சொந்த நாட்டில் தொடர்ந்தும் சிகிச்சை பெறப்போவதாக குறிப்பிட்டார்.
கடந்த 14 ஆண்டுகளாக வெளிசுவெலா ஜனாதிபதியாக இருக்கும் சாவெஸ் கடந்த ஒக்டோபரில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றியீட்டி மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக தேர்வானார். எனினும் சாவெஸ் தனது உடல் நிலை காரணமாக புதிய தவணைக்கான சத்தியப்பிரமாணத்தை இன்னும் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி புற்றுநோய்க்கான நான்காவது சத்திர சிகிச்சை செய்துகொள்ள ஹவானா சென்ற சாவெஸ் அபாயகரமான நிலையில் இருந்து மீண்டுள்ளார். சத்திர சிகிச்சைக்கு பின்னர் கடந்தவாரம் தான் அவரது புகைப்படம் ஊடகங்களில் முதல் முறையாக வெளியானது.
»»  (மேலும்)

| |

இனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ் கூட்டமைப்பே காரணம்

* பலமுறை அழைத்தும் தெரிவுக்குழுவுக்கு வரவில்லை
* வெளிநாடுகள் தீர்வை பெற்றுத்தரும் என இன்னும் நம்புவது தவறு
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பல முறை அழைத்த போதும் அவர்கள் வந்து இணைந்து கொள்ளவில்லை. இத னால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயற்பாடுகள் ஆரம்பிக் கப்படாமல் நீண்டகாலம் இழுபடுவ தாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரி யர் திஸ்ஸ விதாரண யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிரேஷ்ட அமைச்சர், யாழ். யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போதே அமைச்சர் இக்கருத்தை வலியுறுத்தியிருந்தார்.இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்: தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று சொல்லுகின்றனர். ஆனால் அதனை இலங்கையில் உள்ள அரச தலைவருடன் பேசி, ஒரு தீர்வுத் திட்டத்தை வைக்க முனைவதும் இறுதியில் சிறிய ஒரு பிரச்சினையை காரணங்காட்டி வெளியேறுவதுமாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஒருபோதும் தமிழர்களுக்கான ஒரு சரியான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் இது தொடர்பில் பல முறை தெரிவித்திருக்கிறேன். தெரிவுக்குழுவில் இணைந்து தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை முன்வையுங்கள். அதன் மூலமே நல்லதொரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். தற்போது தெரிவுக்குழுவில் அரசுடன் சமசமாஜக் கட்சி, புதிய லெனின் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஈ.பி.டி.பி., முஸ்லிம் காங்கரிஸ் என பல கட்சிகள் இருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டால் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கொள்ளும் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
இது நல்ல ஒரு சந்தர்ப்பம். இதனை பயன்படுத்தி தெரிவுக்குழுவில் இணைந்து தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வுத் திட்டத்தை வழங்க முடியும்.
தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் காணப்படுவதுடன், ஜனாதிபதியும் ஒரே கட்சியாக காணப்படுவதால் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நல்ல சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நழுவ விடுமானால் இந்த விவகாரம் மேலும் காலம் தாழ்த்தப்படும்.
கடந்த முறை அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தயாராக இருந்த போதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளாது இருந்ததால் இது செயலிழந்து போனது எனவும் குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி பாராளுமன்றத் தெரிவுக்குழுவை கூட்டி அரசியல் தீர்வை விரைந்து காண்பதன் மூலம் நன்மை கிடைக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதும் வெளிநாடுகள் தீர்வை பெற்றுத்தரும் என எண்ணுகின்றார்கள். இது மாற்றம் பெற வேண்டும். தற்போது கூட்ட¨மைப்பு இரண்டாக காணப்படுவதற்கும் இந்த வெளிநாடுகளே காரணம். தெளிவாக இருங்கள். இலங்கை நான்கு பக்கமும் நீரால் சூழ்ந்த ஒரு பிரதேசம். அதுமட்டுமல்ல இயற்கை வளம் பொருந்திய ஒரு நாடு. அதனால் இலங்கை முன்னேறுவதற்கு ஒரு நாடும் விடாது.
ஏதோ ஒரு பிரச்சினையை தோற்றுவித்துக் கொண்டு தான் இருக்கும். தமிழ் மக்களுக்கு பிரச்சினை தீர்ந்து விட வெளிநாடுகள் ஒரு போதும் விடப்போவதில்லை. எனவே, வெளிநாடுகளின் சொல்லுக்கு தலையாட்டாது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.
மேலும் கிராமமட்ட அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த முறையில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். எனவே, அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டுமெனவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

மண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட " மண்முனைப்பு "


மண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட  வாசிப்பு மாத விஷேட இதழ்  " மண்முனைப்பு ".இந்நூல் வெளியிடும் நிகழ்வானது 15-02-2013 அன்று ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது
,இந் நிகழ்வில் நூலக ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு ,மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.இவ் வைபவத்திற்கு சிறப்பு அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும்,முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும்,தற்போதைய மாகாணசபை உறுப்பினருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு ,மண்முனைப்பற்று பிரதேச சபைக்குரிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்திலும் கலந்து சிறப்பித்தார்.
»»  (மேலும்)

2/18/2013

| |

இரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க விலகுவதாக அறிவிப்பு


கோல்டன் கீ நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கு மற்றும் கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகிய இரு வழக்குகளில் இருந்தும் தான் விலகிக்கொள்ள போவதாக நீதியரசர் காமினி அமரதுங்க அறிவித்துள்ளார்.

கொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றை இந்தியாவின் டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையிலிருந்து நீதியரசர் காமினி அமரதுங்க விலகிக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோல்டன் கீ நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கு மனு காமினி அமரதுங்க உள்ளிட்ட நீதியரசர்கள் மூவரடங்கிய குழு முன்னால் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இவ்வேளையில், அரசதரப்பு சட்டத்தரணி குறித்த மனுவை தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் அங்கம் வகிக்கும் நீதியரசர்கள் குழுவிற்கு மாற்றிவிடுமாறு வேண்டுகோளொன்றை முன்வைத்தார்.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்த நீதியரசர் காமினி அமரதுங்க, சம்பந்தப்பட்ட மனுவை தலைமை நீதியரசரிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.

இதேவேளை, கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான பரப்புள்ள காணியை இந்திய டாட்டா நிறுவனத்துக்கு வழங்குவதன்மூலம் அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 600க்கும் அதிகமான குடும்பங்கள் குடிமனைகளை இழப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீகரிக்கப்படும் காணிகளுக்குப் பதிலாக மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தது.

எனினும், மக்களுக்கு வழங்கவுள்ள நிவாரணம் தொடர்பில் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெளிவாகத் தெரிவிக்கவில்லை என்று குறித்தப் பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஏசிஎம் பதூர்தீன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கோல்டன் கீ நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கு விசாரணையிலிருந்தும் விலகிக்கொள்வதாக நீதியரசர் காமினி அமரதுங்க அறிவித்துள்ளார்.

தனிப்பட்டக் காரணங்களுக்காகவே தான் இந்த விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாகக் கூறிய அவர், அதன்படி இந்த மனுவை விசாரணைக்காக தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸிடம் மாற்றவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

| |

மாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது


மூடியை கழற்றும்போது வெடிக்கும் வகையில்  மாக்கர் வகை பேனாவினால் தயாரிக்கப்பட்ட குண்டு உட்பட பல்வேறு வெடிப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய, பனாமுர வலகொட பகுதியில் வைத்தே குறித்த இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற கைக்குண்டுகள் இரண்டு, 12 ரவைகளை கொண்ட துப்பாக்கி, 100 கிராம் சீ-4 வகை வெடிப்பொருள் உள்ளிட்ட வெடிப்பொருட்களும் அந்த இளைஞரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இளைஞனின் வீட்டிலிருந்தே இந்த பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அந்த பிரதேசத்திற்கு அடிக்கொரு தடவை சென்றுவருகின்ற பிரமுகரை இலக்கு வைத்தே இந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

»»  (மேலும்)

| |

வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை


வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.

தூக்கு தண்டனைக்கு எதிரான கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கருணை மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இடைக்கால தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கன்னிவெடி தாக்குதலின் போது காவல்துறையினர் 22 பேர் உயிரிழந்த வழக்கின். குற்றவாளிகளான வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், மற்றும் பிலவேந்திரன் ஆகிய நால்வருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இவர்களின் கருணை மனுவினை ஜனாதிபதி பிரணப் முகர்ஜி, கடந்த 11 ஆம் திகதி நிராகரித்தார்.

இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 4 பேருக்கும் எந்த நேரத்திலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நாளை மறுதினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நால்வரும் புதன்கிழமை வரை தூக்கிலிடப்படக்கூடாது என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

»»  (மேலும்)

| |

ஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா

இலங்கையில் ஹலால் முறைமை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அமைப்பு கோரியிருக்கிறது.
ஒரு மாத காலத்துக்குள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு மத போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கொழும்பு மகரகமவில் நடந்த அந்த அமைப்பின் வருடாந்த கூட்டம் ஒன்றின் போதே அந்த அமைப்பு இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்று கூறிய அந்த அமைப்பின் செயலாளர் ஒருவர், உலமாக்கள் சபையை தடை செய்ய வேண்டும் என்றும் பேசியதாக அந்தக் கூடத்துக்குச் சென்ற எமது செய்தியாளர் ஒருவர் கூறினார்.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அங்கு பேசிய பௌத்த பிக்கு ஒருவர் உரையாற்றியுள்ளார்.
»»  (மேலும்)

2/16/2013

| |

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்வி சமூகத்திற்கு மற்றுமொரு மைல்கல்

கிழக்கு வாழ் மக்களின் நீண்ட கால கனவாக இரு ந்த தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் "பொறியியல் பீடத்தை" ஒலுவில் வளாகத்தில் திறந்து வைத்ததன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பகுதி வாழ் கல்விமான்கள், புத்திஜீவிகள் மத்தியில் மற்றுமொரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெப்ரவரி 5ம் திகதி ஒலுவில் வளாகத்தில் அமை ந்துள்ள "பொறியியல் பீடத்தை" வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், மாகாண அமைச் சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முதன் முதலாக இப்பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களுக்கு பல்கலைக்கழக சமூகம் செங்கம்பள வரவேற் பொன்றை அளித்தது. ஜனாதிபதி யின் வருகையையொட்டி பல்கலைக் கழகம் முற்றாக நன்கு அலங்கரிக்கப் பட்டதோடு அவர் ஹெலிகொப்டரிலி ருந்து ஒலுவிலில் இறங்கினார்.
ஒலுவில் வளாகம் வரை அலங்காரப் பந்தல்களும் பதாதைகளும் தோரணங் களும் அமைக்கப்பட்டிருந்தன. ஒலு வில் வளாக உள்ளக வீதிகளும் சிற ந்த முறையில் செப்பனிடப்பட்டிருந்தன.
1995 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ம் திகதி 88/9ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திர ணவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக் கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டது. இப்பகுதி வாழ் கல்விமான்கள், புத்திஜீவிகள் இங்கு பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இந்த முயற்சிக்கு உயிரூட்டி உருவம் கொடுத்தவர் மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹ¥ம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களே! இப்பல்கலைக்கழக கல்லூரியின் ஸ்தாபக உபவேந்தராக பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் பதவி வகித்தார்.
1995ஆம் ஆண்டு ஒக்டோ பர் மாதம் 1992/93ஆம் ஆண்டு 33 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட இப் பல்கலைக் கழகம் கல்வி மற்றும் உயர் கல்வி அமை ச்சின் மார்ச் 1996 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தல் 916/7யின் பிரகாரம் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி இலங்கையின் 10 வது தேசிய பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.
(படங்கள்: அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)
இன்று இப்பல்கலைக் கழகம் நான்கு பீடங்களோடு மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது. தற்போது இங்கு 2100 உள்வாரி மாணவர்களும் 7000 வெளிவாரி மாணவர்களும் தமது உயர் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.
சகல வசதிகளையும் கொண்ட பெளதீக வளங்கள், சிறப்பான சூழல் போன்றவைகளை உள்ளடக்கிய இந்தப் பல்கலைக்கழகம் தற்போது ஐந்தாவது பீடமான பொறியியல் பீடத்தை ஆரம்பித்துள்ளமை இப்பகுதி வாழ் மக்களுக்கு தமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த ஒரு நல்ல தருணமாகும்.
தென்கிழக்கு வாழ் மக்களின் மிக நீண்ட நாளைய கனவாக இந்த பொறி யியல் பீடம் இருந்து வந்தது. கல்வி வசதிகள் சகலருக்கும் சகல வசதிகளுட னும் வழங்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் "மஹிந்த சிந்தனை" கோட்பாட்டுக் கமைவாக உருவாக்கப்பட்ட இந்த "பொறியியல் பீடம்" தற்போதைய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். மொகமட் இஸ்மாயில் அவர்களின் இடைவிடா முயற்சியின் பயனாகும்.
உபவேந்தர் கலாநிதி இஸ்மாயிலுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன் னாள் தலைவர் பேராசி ரியர் காமினி சமரநாயக்கா, வேந்தர் பேராசிரியர் அச்சி மொகமட் இஷாக் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர். இதேபோன்று பதிவாளர் எச். அப்துல் சத்தார், பொறியியலாளர் எஸ்.எம். சித்தீக் ஆகியோர் அவருக்கு தோளோடு தோள் நின்று உழைத்தனர். இவ்வாறு அரும் பேறாகக் கிடைத்த இந்த "பொறியியல் பீடம்" இப்பகுதி இளைஞர்கள் தமது பொறியியல் துறையில் உயர் கல்வியைப் பெறுவத ற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித் துள்ளது.
இந்த வாய்ப்பைப் பெறு வதற்கு அங்கீகாரம் வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது உளமார்ந்த நன்றியைத் தெரி வித்துக்கொள்வதோடு ஜனாதிபதியை என்றும் தமது நெஞ்சில் பதித்துள்ளர். இதன் வெளிப்பாடே ஜனாதிபதிக்கு இப்பகுதி மக்கள் அளித்த மகத்தான வரவேற்பாகும்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஒலுவில் வளாகத்தைச் சூழவுள்ள பாதைகள் எங்கும் தோரணைகளால் அலங்க ரிக்கப்பட்டமை, ஒலுவில் வளாகத்தில் விசேடமாக அமைக்கப்பட்ட அலங்காரப் பந்தல் மக்கள் வெள் ளத்தால் வழிந்தோடியமை, சிறுவர் முதல் பெரியோர் வரை உற்கமாகக் கலந்து கொண்டமை, வெளி மாவட்டங்களிலிருந்தும் பெருந்தொகையிலான பெற்றோர்கள் பிரசன்னமாயிருந்தமை ஆகியன இந்த அங்குரார்ப்பண வைபவத்தின் வெற்றிக்குக் காரணமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் வருகை தந்த அமைச்சர்கள் எஸ்.பி. திஸாநாயக்க, ஏ.எல்.எம். அதாஉல்லா, றவூப் ஹக்கீம், பீ. தயாரத்ன, மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர பிதாக்கள், பிரதேச சபைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு பல்கலைக்கழக சமூகம் என்றுமில்லாத மகத்தான வரவேற்பை அளித்தது. வரவேற்பின் போது அளிக்கப்பட்ட கலாசார நிகழ்வுகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
"பொறியியல் பீடத்தை" முதலில் திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் இஸ்லாமிய கற்கை நெறிகள் அறபு மொழி பீடம், மருத்துவ நிலையம், மாணவர் பொழுது போக்கு நிலையம் ஆகியவைகளுக்கான கட்டடத் தொகுதிகளையும் திறந்து வைத்தார்.
சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கட்டத் தொகுதிகளுக்கு குவைத் நாட்டின் அறபு அபிவிருத்தி நிதியம் நிதியுதவியை வழங்கியிருந்தது. இப்பல்கலைக்கழகத்துக்கு முதல் விஜயமாக அமைந்த ஜனாதிபதியின் இந்த வருகையின் போது இங்கு கலை வடிவமைப்போடு கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டடத் தொகுதிகள் அன்னாரின் முழுக்கவனத்தையுமே ஈர்த்தமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.
»»  (மேலும்)