1/14/2013

| |

"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்" - தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் சந்திரகாந்தன்

உழவர் திருநாளாம் நன்றிக்கு முதலிடம் கொடுக்கும் இன் நன் நாளில் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து இன ஒற்றுமை, பரஸ்பரம் அன்பு காருண்ணிய கருணைக் குணங்களைக் மேலோங்கி எமது மாகாணத்தின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பெரும் எதிரியான வறுமையினை இல்லாதொழிக்கப் பாடுபடுவோம்.
யுத்தத்தினையும் அனர்த்தங்களையும் காரணம் காட்டி எம் வாழ்வாதாரம் சீரளிந்திருந்தபோதும் தற்போது நிலவும் சமாதானமான சூழலில் பொருளாதாரத்தில் எம் கிழக்கு மாகாணம் வலுவாகும் போதே கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயர்ச்சி அடைய முடியும்.
நிலவளம், நீர்வளம், கடல்வளம், காட்டுவளம் என எல்லா வழங்களும் கொட்டிக் கிடக்கும் கிழக்கு மாகாணத்தில் 'எமது வளங்களை நாமே பயன்படுத்தி பயனடைய வேண்டும';  என்ற உயரிய எண்ணப்பாடு இளைஞர்கள் மத்தியில் மேலோங்க வேண்டும். உழவருக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி சொல்லும் உன்னத பண்பு கொண்ட இந்நன்நாளில் எம் சமூகம் எதிர்நோக்கிய துயரங்களின் எச்சங்களை எண்ணி வேதனை கொள்வதை கடந்து கஸ்டத்தில் இருப்பவர்களை கரை சேர்க்கவும் எம் எல்லோரது நோக்கங்களும் நீளவேண்டும். இன்னல்களற்ற இன்ப பூமியாக எம் மாகாணமும் இலங்கைத் திருநாடும் மிளிர வேண்டும் உயர்ந்தவர் தாழ்ந்தவர்  என்ற இறுமாப்புக்கள்,  ஆணவம் இல்லாதொழித்து மனித மனங்களை நேசிக்கும் மனிதத்துவம் சிறந்தோங்கவும்  இத்தைத்திருநாளில் வாழ்த்துகின்றேன்.
-சிவனேசதுரை - சந்திரகாந்தன் -
(முன்னாள் முதல்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஜனாதிபதியின் விசேட ஆலோசகர்)