1/11/2013

| |

பட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி போராட்டம்

பயிலுனர் பட்டதாரி நியமனத்தில் தாம் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி 2011ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையையும் பொருட்படுத்தாது இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மேற்குறித்த ஆண்டில்  பட்டம் பெற்ற சுமார் 150 மேற்பட்ட பட்டதாரிகளை உள்வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்த தமக்கு பட்டங்கள் கிடைப்பதற்கு பல்கலைக்கழக ஊழியர்கள், விரிவுரையாளர்கள், பரீட்சை நேரம் மற்றும் பெறுபேறு வெளியாகும் நேரத்திலும் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தமையால் தாமதம் ஏற்பட்டது.
ஏனைய பல்கலைக்கழகங்களில் 2011ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்கள் பயிலுனர் பட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளபோதும் தாம் உள்வாங்கப்படவில்லை. எனவே மாவட்ட செயலாளரும் பொது நிருவாக அமைச்சும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.