1/24/2013

| |

ஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை


வட கொரியா ஏவுகணையைச் செலுத்துவது பற்றி, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 22ஆம் நாள், 15 ஆதரவு வாக்குகளுடன் 2087வது தீர்மானத்தை, நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பவையின் தொடர்புடைய விதிகளைப் பின்பற்றி, எறிவிசை ஏவுகணைத் தொழில் நுட்பங்களின் மூலம் ஏவுகணையைச் செலுத்த, ஐ.நா வட கொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறைகளின் மூலம் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 6 தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குமாறு இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லி பௌ துங், ஆதரவாக வாக்களித்து, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு உரை நிகழ்த்தினார். 6 தரப்புப் பேச்சுவார்த்தையை விரைவாக மீண்டும் தொடங்கி, பல்வேறு தரப்புகளின் கவனத்தைச் சமநிலையில் கையாள வேண்டுமென அவர் தெரிவித்தார்.
ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் அறிக்கை வெளியிடுகையில், பாதுகாப்பவையின் புதிய தீர்மானம் வரவேற்கப்படுகிறது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை மற்றும் நிதான அமைதி நிலையை நிலைநிறுத்தும் ஒரே வழிமுறையாக, பேச்சுவார்த்தை இருப்பதாக அவர் கூறினார்.