1/08/2013

| |

தொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கடந்த நில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் வெள்ள அபாயநிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் வீதிகளிலும், வசிப்பிடங்களிலும் தேங்கியுள்ளது. இன்றைய தினம் பல பாடசாலைகளில் தொடர்மழை மற்றும் வெள்ள நிலைமைகளினால் பாடசாலை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ன. வந்தாறுமூலையில் தொடர்மழையினால் பாடசாலைகளின் வகுப்பறைகளில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதுடன், மழைநீர் புகுந்தமையாலும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை தோன்றிருந்தது.
இதேவேளை உறுகாமம் குளத்தினுடைய இரண்டு வான்கதவுகள் திறக்கப்ட்டுள்ளதாகவும், 8 அடி வரையிலான நீர் பாய்ந்துவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனவே தாழ்நிலங்களில் உள்ளவர்கள் குறிப்பாக கொடுவாமடு, கொம்மாதுறை, சித்தாண்டி, வந்தாறுமூலை போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மீண்டும் மூழ்கக்கூடிய நிலை காணப்படுகின்றது.