1/08/2013

| |

உள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்

புதிய தேர்தல் சீர்திருத்த அடிப்படையில் உள்ளூராட்சி பிரதேசங்களில் வட்டாரங்கள் மீளமைக்கப்பட உள்ளன இது தொடர்பாக மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன இவ்விடயமாக எமது பிரதேசத்தில் வட்டாரங்களை மீளமைத்தல் பற்றிய ஆலோசனை கூட்டம் ஒன்றினை காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் மர்சூக் அகமட்லெப்பை தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காணி எல்லைகள் விடயமாக கையாளும் குழுவின் செயாலாளர் ALZ பஹ்மி பிரதி தலைவர் சட்டத்தரணி AL அப்துல் ஜவாத் முன்னாள் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் KM சரீப் உட்பட சம்மேளன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் மேற்படி விடயம் தொடர்பாக காத்தான்குடி நகரசபை மக்கள் பிரதிநிதிகள் காத்தான்குடி பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்தாலோசித்து காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட எல்லைகளை வட்டார ரீதியாக வரையறுப்பது என இதன் போது தீர்மானிக்கப்பட்டது  .