1/05/2013

| |

கருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவும்








கருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவும்

கடந்த காலங்களில் பெய்த கடும் மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் போரால் பாதிக்கப்பட்டு அந்த துன்பச் சுமைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களை மீண்டும் ஒரு அவலத்தில் தள்ளிவிட்டது. வயது வேறுபாடின்றி சகலரையும் இந்த மழை வெள்ளம் பாதித்துள்ளது. குழந்தைகள்,பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவுள்ளது. முல்லைத்தீவு,கிளிநொச்சியில் மட்டும் 50,000 மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் வன்னிக்கு விஜயம் செய்துள்ளார்.அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் முழுத்தேவையையும் ஈடு செய்ய முடியுமா என்பது கேள்விக்குரிய விடயம்.மழை விட்டாலும் இப்பாதிப்புக்கள் சரியாக ஒரு மாதம் கூட நீடித்துச் செல்லலாம். எனவே கருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு விரைந்து உதவுமாறும் அந்த மக்களுக்கு நேரடியாக உதவ விரும்புபவர்கள் அவ்வவ் மாவட்ட அரசாங்க அதிபர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் அவ்வாறு நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் எமது போரால் பாதிக்கப்பட்ட அமைப்பு PACAA(People Association for Conflict Affected Area – A/C No- 73940138 –Bank of Ceylon – City office )இலங்கை வங்கிக்கிளையில் தங்கள் நன்கொடைகளை சிறு அளவிலாவது வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் துடைக்க உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நேரடியாக உதவ விரும்புபவர்கள்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் 
திரு.சரத் ரவீந்திரா – 023 2222235
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் 
திரு.பந்துல கரிஸ்சந்திர – 024 2222235
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் 
திரு.வேதநாயகம் - 021 2290035
.கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் 
திருமதி ரூபவதி கேதீஸ்வரன்- 021 2283965
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் 
திரு.சுந்தரம் அருமைநாயகம் -021 2222235
ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.
நேரடியாக உதவ முடியாதவர்கள்
மேலதிக விபரங்களுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புச் செயலாளர் திரு.எம். எஸ்.சாந்தகுமார் - 077 3713000 என்ற தொலைபேசி இலக்கத்தையோ அல்லது இல.35 அம்மன் கோவில் வீதி , பண்டாரிகுளம் என்னும் முகவரியில் அமைந்துள்ள எமது அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் முகவரி: Email:pacaa.srilanka@gmail.com
.பிறந்துள்ள புதுவருடத்தை மக்கள் துயர்துடைக்கும் ஆண்டாக மாற்றுவோம்
.நன்றி

இவ்வண்ணம் 
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு