மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் எழுந்துள்ள எல்லைப் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் ஆதலால் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு எந்த போராட்டங்களையும் நடாத்த தேவையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் நடைபெற்ற முப்பெரும் விழா வைபவத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் மட் ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ் விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது எழுந்தள்ள எல்லைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பொருட்டு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தலைமையில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி பாராளுமன்ற கட்டத் தொகுதியில் சுமூகமான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
ஆகவே எல்லைப் பிரச்சினை தொடர்பாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேசத்தில் உள்ள தமிழ் கிராமங்களை கோறளைப்பற்று மேற்கு மற்றும் மத்தி ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைப்பதற்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை தமிழ் பிரதேசங்களில் கடையடைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேசத்தில் உள்ள தமிழ் கிராமங்களை கோறளைப்பற்று மேற்கு மற்றும் மத்தி ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைப்பதற்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை தமிழ் பிரதேசங்களில் கடையடைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இவ்வாறு கிரான் பிரதேச பிரிவில் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள கோறளைப்பற்று மேற்கு மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான 05 கிராம சேவகர் பிரிவுகளை மீண்டும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவடன் இணைக்க கோரி ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் நேற்று கவனஈர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இவ்வாறு எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாகவே பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.