1/03/2013

| |

தேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி

விவசாயம், நாட்டுக்கூத்துக்கலை ஆகியவற்றுக்கு பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு கிராமத்தில் கலப்பு உலோகப் பொருள் உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்தியாவின் பரம்பரையிலிருந்து வந்த கிறிஸ்தோம்பு வேலாயுதம் சாந்த பத்மலால் இக்கிராமத்துக்கு வந்து உலோக உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்கின்றார்.
தேற்றாத்தீவு பிரதான வீதியில் இவரது வேலைத்தளம் அமைந்துள்ளது. வளப்பற்றாக்குறை நிலவினாலும் கிடைத்த  வளங்களைக் கொண்டு உலோகப் பொருள் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றார்.
உலோகப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் கிறிஸ்தோம்பு வேலாயுதம் சாந்த பத்;மலால் தெரிவிக்கையில்,
'பித்தளை, செம்பு, ஈயம், வெண்கலம், அலுமினியம், வெள்ளீயம், தங்கம், இரும்பு, செம்பு  உள்ளிட்ட பல உலோகங்களைக் கொண்டு உலோகப் பொருள் உற்பத்தியை மேற்கொள்கின்றேன்.
கோவில் மணி, கொடித்தம்பம், கலசம், உருவம், திருவாத்தி, வேல், திரிசூலம், பஞ்சமணி, பூசைமணி, நாகதீபம், கற்பூரத்தட்டு, திருவாச்சி உள்ளிட்ட பல உற்பத்திகளை செய்கின்றேன்' எனக் கூறினார்.