குடும்பத்தின் வறுமையினைப் போக்கும் உயரிய சிந்தனையில் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற துரதிஸ்ட வசமாக கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு அரசினால் ரிஸானா நபிக்க்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக சவூதி அரசு மூலம் அறிவிக்கப்பட்ட செய்தி கேட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சி ஆழ்ந்த கவலையடைந்துள்ளது.
குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை வலுவாக்க வேண்டும் என்ற அற்பணிப்புடன் 17 வயதினிலேயே துடிப்புடன் வெளிநாட்டிற்கு பயனிக்க முன்வந்த ரிஸானாவின் பொறுப்புணர்ச்சியினை நினைத்து பூரிக்கும் அதே வேளை உண்மை நிலை உணர்ந்தும் சட்டத்திற்கு மாறாக போலி ஆவணங்கள் தயார்படுத்தி மனிதநேயமற்ற முறையில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த முகவர்களை வலுவாக கண்டிக்கின்றோம்,
இலங்கை அரசும், மனிதநேய அமைப்புக்களும் இம் மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று பலத்த முயற்சிகள் மேற்கொண்ட வேளையிலும் சட்டதிட்டங்களுக்கு அப்பால் மனிதநேயத்திற்கு மதிப்பளிக்கத் தவறிய சவூதி அரசினையும் நாம் கவலையுடன் சாடுகின்றோம். யார் ஆறுதல் கூறினாலும் மனித உயிரின் இழப்புக்கு ஈடில்லை என்றாலும், தமது குடும்பத்திற்காக வெளிநாடுகளுக்கு சென்று அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்து நாட்டிற்கு அன்னியச் செலவாணியினை பெற்றுத் தருபவர்கள்; போற்றப்பட வேண்டியவர்கள், இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சும் மிகவும் அவதானத்துடன் சட்டதிட்டங்களுக்கு அமையவும் மீழ் பரிசீலனைகளுக்கு அமையவும் செயற்பட வேண்டும்,
வெளிநாடுகளிற்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்பவர்களுக்கு துறைசார் பயிற்சிகள் வழங்கப்பட்டு தேற்சி பெற்ற பிற்பாடே அனுப்பிவைக்க வேண்டும் எனவும் த.ம.வி.பு கட்சி ஆலோசனையினை முன்வைக்கின்றது. உண்மையான நிலமைகள் மீழ் பரிசீலனை செய்யப்பட்டிருந்தால் குடும்ப வறுமையின் மூலம் வெளிநாடு சென்று தன்னுயிரை பிரிய வேண்டிய நிலை ரிஸானாவுக்கு ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டுவதுடன் ரிஸானாவின் பிரிவால் துயருரும் குடும்பத்தினருக்கு எமது கட்சியின் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.
பூ.பிரசாந்தன்
பொதுச்செயலாளர்
பொதுச்செயலாளர்