1/18/2013

| |

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டைவேடம்

நாட்டு மக்களின் வறுமையினை ஒழிக்கும் நோக்குடனும்; உருவாக்கப்பட்டதே வாழ்வின் எழுச்சி என்னும் செயற்றிட்டம். இச்செயற்றிட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதன் மூலம் வறுமை நிலையினைக் களைவதற்குரிய சாதக நிலை தோன்றியுள்ளதுடன், பயிலுனர் பட்டதாரிகள் பலர் நிரந்தர பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது ஆரம்பம் முதல் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றது.  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் கிழக்கு மாகாண சபை உறுப்பினாகள் வரை தத்தமது கருத்துக்களை அறிக்கைகளாக பல்வேறு ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தனர். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தற்போது இடம்பெற்று வரும் வாழ்வின் எழுச்சி விழிப்புணர்வூட்டும் கூட்டங்களில் கலந்து வருகின்றமையானது பல கேள்விகளை எழுப்பி வருகின்றது. குறிப்பாக அண்மையில் வவுனதீவில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம் அவர்களும் கடந்த 16.01.2013 முன்னாள் முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசசிங்கம் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
எமது மக்களுக்கு பாதகமானது இந்த வாழ்வின் எழுச்சி திட்டம் என்று கோசமிட்டவர்கள் இன்று இந்த நிகழ்வகளில் கலந்துகொள்வதன் மூலம் வாழ்வின் எழுச்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற உண்மையினை தெளிவாகப் புலப்படுத்துகின்ற அதேவேளை அவர்களுடைய அரசியல் சுயலாபத்திற்காகவே இவ்வாறு அப்போது எதிர்த்தும் தற்போது ஆதரவை காட்டியும் வருகின்றார்கள் என்ற இரட்டை வேடத்தினையும் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி அவர்களுடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கட்சியினதும், தலைமைத்துவத்தினதும் கட்டளைக்கு எதிராகச் செயற்டுகின்றார்களா என்ற சந்தேகத்தையும் வாக்களித்த மக்களுக்கு தோற்றுவித்துள்ளது. இதேவேளை 'அழையா விருந்தாளியாக இவ்வாறு நிகழ்வுகளில் இவர்கள் கலந்துகொள்வது அங்கு வருகின்ற மக்களுக்கு "நாட்டு மக்களின் வறுமையினை ஒழிக்கும் நோக்குடன் தங்களும் உடன் படுவதாகவும், மக்களுக்கான அபிவிருத்தி பணிகளில் தமக்கும் பங்குண்டு என்று காண்பிக்கவுமே "என மக்கள் புரிந்து கொண்டால் சரி.