இதற்கமைவாக நேற்று வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.
இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் மற்றும் பிரதேச திணைக்களத் தலைவர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.