எமது இலங்கை நாடு இன்று அமைதியும், சமாதானமும் நிறைந்த தேசமாக மாறியுள்ளது. இன்று உள்ள இந்தச் சூழல் மலர்கின்ற இப்புதுவருடத்திலும் நிலைக்கவேண்டும். இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி, இன, மத, சாதி ரீதியிலான பாகுபாடுகளைக் இல்லாதொழி;த்து ஒன்றாகக் கைகோர்க்கவேண்டும். எம்மிடையே பேதங்கள் யாவும் எமது ஒரே தாய்நாட்டினைக் கட்டிக் காப்பதற்காக களையப்படவேண்டும். அப்போதுதான் எமது நாட்டில் நிரந்தர சுபீட்சமான எதிர்காலம் அமையும்.
எமது நாட்டின் பொருளாதாரத் துறையில் பங்கெடுக்கின்ற விவசாயம், கைத்தொழில் துறைகளின் வளர்ச்சியுடன் வளர்ந்து வரும் தொழிநுட்ப அறிவுடனான கல்வி என்பவற்றிலும் எமது தேசம் முன்னேறுவதுடன், மக்களும் உயர்வாழ்க்கைத்தரத்துடன் வாழவேண்டும் என்று கூறி மீண்டும் எனது வாழ்த்துச் செய்தியினை மலர்ந்திருக்கின்ற இந்த 2013 ஆம் ஆண்டில் மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்.
சிவனேசதுரை – சந்திரகாந்தன்
(முன்னாள் முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும்)
(முன்னாள் முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும்)