ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் 300 பட்டதாரிகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்ட சரித்திர முக் கியத்துவம் மிக்க நிகழ்வும் மாபெரும் விழாவும் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று (03) வியாழக் கிழமை இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட பா. உறுப்பினர் பி. எச். பியசேன முன்னிலையில் 300 பட்டதாரிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்வதற்கான சத்தியப்பிரமாண நிகழ்வும் நடைபெற்றன.
தமிழ்க் கூட்டமைப்பின் பலம் பொருந்திய கோட்டையாகவும் அம்பாறை மாவட்டத்தின் வாக்கு வங்கியின் முக்கிய இடமாகவும் உள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கல்வி அறிவு மிக்க இளைஞர் படையணி இணைந்து கொண்டுள்ளதானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்துள்ள பெருவெற்றியாகுமென கூறமுடியும். இதுபற்றி பட்டதாரிகளில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் :-
நாட்டினதும் மக்களினதும் சுபீட்சத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இன்றைய அரசுடன் இணைந்து யுத்தத்தினால் சீரழிந்து போயுள்ள இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தம்மை முழுமையாக ஒப்படைக்க எண்ணியே அரசுடன் இணைந்ததாக தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. ஜெகதீஸனும் கலந்து சிறப்பித்தார்.