1/31/2013

| |

விக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம்பந்தன் ! —நன்றி தாய்நாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இயங்கி வந்திருக்கின்றார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்வீட்டு இரகசியங்களை இவரை பயன்படுத்தி கொழும்பில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் அறிந்து வந்திருக்கின்றார்கள் என்றும் விக்கிலீக்ஸ் மூலம் அதிரடித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பில் அமெரிக்க தூதுவராக இருந்த ஜெப்ரி லன்ஸ் ரீட்டால் சம்பந்தருக்காக பரிந்து வெளியுறவு அமைச்சின் தலைமைக் காரியாலயத்துக்கு 2004 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவுக்கு செல்ல முதல் நாள் விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கின்றார் சம்பந்தன். குடும்ப அங்கத்தவர்களை சந்தித்தல், தமிழர் கலாசார விழாவில் பங்கெடுத்தல் ஆகியன இவரின் பயணத்துக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டு இருந்தன.
ஆயினும் இவருக்கான விசா நிராகரிக்கப்பட்டு உள்ளது என தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவால் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இவர் உள்ளார் என்று தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சுத் தலைமைக் காரியாலயத்தால் அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் சம்பந்தருக்காக வக்காளத்து வாங்கி வெளியுறவுத் தலைமைக் காரியாலயத்துக்கு எழுதிய அவசர கடிதத்திலேயே சம்பந்தர் அமெரிக்காவுடன் நீண்ட கால தொடர்பு உடையவர், புலிகளுடன் மிக நெருக்கமான அரசியல் தொடர்புடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, சம்பந்தன் ஆகியோரை பயன்படுத்தித்தான் புலிகளின் உள்வீட்டுச் சங்கதிகளை தூதரகம் அறிந்து வருகின்றது என்று குறிப்பிட்டு உள்ளார்.
புலிகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு, எனவே நாம் புலிகளுடன் சந்திப்பு மேற்கொள்ள முடியாது, இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தர் ஆகியோரை பிரதானமாக வைத்துத்தான் சமாதான முன்னெடுப்பு விவகாரங்கள் உட்பட புலிகளின் நிலைப்பாடுகளை அறிய முடிகின்றது எனவே இவரை கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கி, இவருக்கு விசா வழங்க ஆவன செய்யுங்கள் இவரது பயணத்துக்கான வசதிகளை நாம் அப்போதுதான் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ”இவ்வாறு இக்கடிதத்தில் முக்கியமாக உள்ளது.
»»  (மேலும்)

| |

விண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய ஈரான்

அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணு சக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந் நிலையில் உயிருள்ள குரங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை பத்திரமாக பூமிக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ராக்கெட், விண்கலத் தொழில்நுட்பத்தில் அந்த நாடு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான நேரடியான சவாலாகக் கருதப்படுகிறது.
ஒரு குரங்குடன் கூடிய விண்கலத்துடன் பிஸ்காம் என்ற ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. சுமார் 120 கி.மீ. தூரத்தை எட்டிய இந்த ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் பூமிக்குத் திரும்பியது (re entry). அதில், குரங்கும் உயிருடன் பூமிக்குத் திரும்பி வந்தது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எங்களது முயற்சியில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை எங்களது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ரீ எண்ட்ரி தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ராக்கெட்டை மாற்றி வடிவமைத்தால் அதை ஏவுகணைகளாக மாற்ற முடியும். இந்த ஏவுகணை பூமியிலிருந்து சில நூறு கி.மீ. உயரே சென்று அங்கிருந்து திரும்பி தாக்க வேண்டிய நாட்டின் இலக்கு நோக்கி திரும்பி பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தாக்குதலை நடத்த முடியும்.
ஏற்கனவே அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஈரானால் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணை தயாரிப்பும் சாத்தியம் என்பதையே இந்த ராக்கெட் சோதனை உறுதிப்படுத்துகிறது. இது இஸ்ரேல், அமெரிக்காவுக்கான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
ஆனால், அணு குண்டு தயாரிக்கவில்லை என்றும், மின்சார உற்பத்திக்காகவும், கேன்சர் ட்ரீட்மென்ட் உள்ளிட்ட மருத்துவ காரணங்களுக்காகவுமே அணு சக்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரான் கூறி வருகிறது.
இது குறித்து பிரான்சின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான புருனோ குருசெல்லே கூறுகையில், ஈரானின் இந்த ரீ எண்ட்ரி தொழில்நுட்ப ராக்கெட் மிகப் பெரிய சாதனையாகும். பூமிக்கு வெளியே ராக்கெட்டை ஏவி அதில் பொறுத்தப்பட்ட விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தை நோக்கி திரும்பி வரச் செய்யும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.
விண்வெளிக்கு ராக்கெட்டையோ, விண்கலத்தையோ ஏவி அதை பத்திரமாக திரும்பி வரச் செய்ய உயர் அழுத்தத்தைத் தாங்கும், உயர் வெப்ப நிலையைத் தாங்கும் தொழில்நுட்பம் தேவை. இதை ஈரான் பெற்றுவிட்டது. இதனால் இந்த ராக்கெட்டை ஏவுகணையாக மாற்றி அதனால் அணு ஆயுதங்களைக் கூட நெடுந்தொலைவுக்கு ஏவ முடியும் என்றார்.
2011ம் ஆண்டிலேயே விண்வெளிக்கு குரங்கை அனுப்புவோம் என்று ஈரான் கூறி வந்தது. ஆனால், அந்த ஆராய்ச்சிகளில் தேக்கம் ஏற்பட்டதால் சுமார் ஓராண்டு தாமதத்துக்குப் பின் தனது முயற்சியில் வென்றுள்ளது 
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் விவசாயம் பெரும் பாதிப்பு

இலங்கையில் அண்மையில் பெய்த கடும் மழையின் காரணமாக நெற்பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை தெரிவிக்கிறது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான பாதிப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் முதல் முறையாக செவ்வாய்கிழமை(29.1.13) பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினர்.
இம்மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் செய்யப்பட்டிருந்த நிலையில், அறுபது முதல் எழுபதாயிரம் ஏக்கர் பரப்பில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட விவசாயத்துறையின் துணை இயக்குநர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இதன் காரணமாக மாவட்ட அளவில் நெல் உற்பத்தியிலும் 60 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடையலாம் என்றும், அது தேசிய அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறுகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளாக மழை வெள்ளத்தின் காரணமாக நெல் பயிர்கள் அழிந்து வருகிறது எனவும் ஹரிஹரன் சுட்டிக்காட்டுகிறார்.
இந்நிலை தொடருமானால் விவசாயிகள் தமது தொழிலை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று மாவட்ட விவசாய அமைப்புகளின் செயலர் திருநாவுக்கரசு கூறுகிறார்.
மழை வெள்ளத்தை விட நீர்ப்பாசனக் குளங்கள் திறந்து விடப்படுவதன் காரணமாகவே அழிவுகளும், இழப்புகளும் ஏற்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு போதிய இழப்பீட்டை அரசு வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
»»  (மேலும்)

| |

ஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரையாடல்

உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடம், மற்றும் பார்வையாளர் மண்டபம் என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் 5 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. 
இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காகவே உயர்கல்வி அமைச்சர் கிழக்கு பல்கலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு பல்லைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்குப் பல்லைக்கழக பதிவாளர் எம்.மகேசன், அரசியல் பிரமுகர்கள், கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், பாதுகாப்புபடை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதியின் கிழக்கு பல்கலைக்க விஜயம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
»»  (மேலும்)

1/30/2013

| |

மட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி –மாவட்ட செயலகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 37741 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் 1679 மில்லியன் ரூபா மாவட்ட செயலகம் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சுக்கள் மூலமாக 36062 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக 8000 மில்லியன் ரூபாவும், வீதி அபிவிருத்தி அமைச்சு ஊடாக 4000 மில்லியன் ரூபாவும், மின்சார எரிபொருள் துறை அமைச்சு ஊடாக 120 மில்லியன் ரூபாவும், நீர் வழங்கள் வடிகால் அமைப்பு அமைச்சு ஊடாக 11000 மில்லியன் ரூபாவும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.
வாழ்வாதாரம், நீர்ப்பாசனம், கல்லடிப்பாலம், மண்முனைத்துறைப் பாலம், சுற்றாடல் அபிவிருத்தி, நீதி மன்ற அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமை நிலையில் முதல் இடத்தில் உள்ள நிலையில் திவிநெகும திட்டத்தின் வளமான இல்லம் திட்டத்தின் ஊடாக பல்வேறு வறுமை ஒழிப்பு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் மக்கள் இவற்றினை சிறந்த முறையில் கடைப்பிடிப்பதன் மூலமே இந்த மாவட்டத்தில் இருந்து வறுமையை ஒழிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

கிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, விஞ்ஞான பீடத்தின் கட்டிடமொன்றை திறந்துவைக்கவுள்ளார் என பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்தார்.
»»  (மேலும்)

1/29/2013

| |

உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை!

க.பொ.த  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய தினமே www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியுமென திணைக்களை தெரிவித்துள்ளது.
»»  (மேலும்)

| |

அமைச்சரவையில் 5 புதுமுகங்கள்

10 அமைச்சர்கள்: 02 திட்ட அமைச்சர்கள்: 06 பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
* 4 புதிய அமைச்சுக்கள் உருவாக்கம்
* ப'Pர் சேகுதாவு+துக்கு அமைச்சரவை அந்தஸ்து
* காதர், ஹிஸ்புல்லாஹ், பைஸர் முஸ்தபா உட்பட 6 பிரதி அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் பத்து அமைச்சர்களும், இரண்டு திட்ட அமைச்சர்களும், ஆறு பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பத்து அமைச்சர்களில் ஐவர் அமைச்சரவைக்கு புதியவர்களாவர்.
இதேநேரம், இந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் புதிதாக இரு திட்ட அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அமைச்சுக்களுக்குப் பொறுப்பானவர்களாக ஐ.ம.சு.முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பி.க்களான ரோஹித அபேகுணவர்தனவும், நிர்மல கொத்தலாவலவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதேவேளை, சீனிக்கைத்தொழில் அபிவிருத்தி, கல்வி சேவைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு, வன விலங்கு வளப் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளுக்கும் புதிதாக நான்கு அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இதேநேரம் பிரதியமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஆறு பேரில் மூவர் முஸ்லிம்களாவர். அதேவேளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்களாக இந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் மூவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
அமைச்சர்களான பiர் சேகுதாவூத், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயரட்ன ஹேரத், துமிந்த திஸாநாயக்க, காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகிய ஐவருமே அமைச்சரவைக்குப் புதியவர் களாவர்.
இந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஏற்கனவே பெற்றோலிய கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகித்த சுசில் பிரேமஜயந்த் சுற்றாடல் மற்றும் மீள் சுழற்சி எரிசக்தி அமைச்சராகவும், சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகித்த அநுர பிரியதர்ஷன யாப்பா தற்போது பெற்றோலிய கைத்தொழில் அமைச்சராகவும் ஏற்கனவே மின்சக்தி, எரிசக்தி அமைச்சராகப் பதவி வகித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சராகவும், அவ்வமைச்சுப் பதவியை ஏற்கனவே வகித்த பவித்ராதேவி வன்னியாராச்சி மின்சக்தி, எரிசக்தி அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
ஏற்கனவே உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சராகப் பதவி வகித்த லக்ஷ்மன் செனவிரட்ன தற்போது சீனி கைத்தொழில் அமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
»»  (மேலும்)

1/27/2013

| |

களை கட்டும் மாவீரர் வியாபாரம்

வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.


பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.-சாத்திரி

கடந்த பகுதியில் பரிதிக்கும்  தலைமைச் செயலக  தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர்  தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு  பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை  வெளியிடுவதற்கு  முன்னராக  அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக   லண்டன்  தனத்திடம் இருந்தும்  சுவிஸ் ரகுபதியியாலும்   கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து  ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு  விரைந்து வந்ததும்  பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த  இணையத் தளங்கள்  இந்தக் கொலையை  தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். அதற்காக அவர்கள் அவிழ்த்த பொய் செய்திகள்தான்  பாரிசில் வினாயகம்  சுற்றி வழைத்து கைது. தமிழரன். கைது. கனி என்பவர் என்கிற  பரபரப்பு செய்திகள். இவை எல்லாவற்றையும் விட  அதிர்வு என்கிற அனைத்துலகத்தின்  அம்மம்மா குழல்(ஊதுகுழல் )இணையம் வெளியிட்ட செய்தியை பார்த்து  விழுந்து  விழுந்து சிரிப்பதா  அல்லது  கோவி  கோவி அழுவதா என்றே தெரியாதிருந்தது.

காரணம் அவர்களது செய்தியில்  வினாயfம் சுற்றி வழைத்து கைது  என்பதோடு செய்தியை உறுதிசெய்வதானால்  பிரெஞ்சு புலனாய்வு த் துறையோடு தொர்பு கொள்ளவும் என்று  077 என்று தொடங்கும் ஒரு இலக்கத்தையும் எழுதியிருந்தார்கள்.   அதை படிப்பவர்கள் பாவம் பிரெஞ்சு  புலனாய்வுத் துறை  அவர்களிற்கு  சாதாரண தொலைபேசி இணைப்பே இல்லை  கைத்தொலைபேசி   தான் பாவிக்கிறாங்கள் என்று நினைத்து விட்டு அந்த  இலக்கத்திற்கு போனடித்திருந்தால் இந்த இணைப்பு பாவனையில் இல்லையென்று  சொல்லியிருக்கும். அட பாவமே  பிரெஞ்சு புலனாய்வு துறையிடம் பணம் இல்லாததால்  தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லையென்று நினைத்திருப்பார்கள்.

அவர்களின் இந்த திட்டமும் பிசுபிசுத்து போக  அனைத்துலகச் செயலகத்தின் அடுத்த திட்டம்தான்  மீள இணையும் புலிகள் என்கிற ஒரு காணொளி.
இந்தக் காணொளியானது இறுதிக் கட்ட யுத்தத்தில்  நாட்டை விட்டு விட்டு வெளியேறி  அவுஸ்ரேலியா போவதற்காக இந்தோனோசியாவில்  தங்கி நிற்கும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களால் தயாரிக்கபட்டிருந்தது. இவர்களிற்கு அனைத்துலகச் செயலகமே பணஉதவி செய்துவிட்டு அப்படியொரு காணொளியினை தயாரித்து அனுப்புமாறு கோரியிருந்தனர்.  காணொளியினை பார்ப்பவர்களிற்கு  அதனை தயாரித்ததன் நோக்கம் புரியும்.ஆனால்  பரிதியின் கெலையை பிரெஞ்சு காவல்த்துறை  ஆரம்பத்தில் மூன்று கோணங்களில் விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். அவை. 1) இலங்கை புலனாய்வுத் துறை.  2) உள் வீட்டு மோதல்கள் அதில் தலைமைச் செயலகம்.  அல்லது அனைத்துலக்கத்திற்கிடையேயான  குழு மோதல்.  விசாரணைகளின் ஆரம்பத்திலேயே   கொலை சம்பந்தமாக   பரிதியுடன் நெருக்கமாக  இருந்த பாம்புக் குழுவை சேர்ந்த  இருவர்  கைதானதும் தலைமைச் செயலகத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று உறுதியாகிவிட்ட நிலையில்தான்  அடுத்ததாக அவர்களத விசாரணை  இலங்கை புலனாய்வு பிரிவா அல்லது அனைத்துலகத்தின்  உள்வீட்டு மோதலா? என்கிற கோணத்தில் விசாரணைகள் போய்க்கொண்டிருந்தது.  அப்பொழுதான்  பிரான்சின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான Le Parisienபத்திரிகையில் இலங்கையரசே  பரிதியின் கொலைக்கு பின்னால்  இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.


ஆனால் இது போன்ற  அரசியல் கொலை பற்றிய செய்திகளில் தகவல் அடிப்படையாக  ஒரு விசாரணை  அதிகாரியை மேற்கோள் காட்டியோ அல்லது உள்துறை அமைச்சர் அல்லது அதன் குரல் தரவல்ல அதிகாரிகளை  மேற்காட்டியே செய்தி வெளியாவது  வழைமை. அதன் அண்மைய ஊதாரணம்  பாரிசில் படுகொலை செய்யப் பட்ட மூன்று குர்திஸ்தான் போராளிகள் பற்றிய செய்திகளை பிரெஞ்சு பத்திரிகைகள் வெளியிட்ட விதத்தினை படித்திருந்தவர்களிற்கு புரிந்திருக்கும். ஆனால் பரிதி பற்றி Le Parisienபத்திரிகையில் ஒரு மொட்டை செய்தியாகவே வெளிவந்திருந்தது. அதையெல்லாம் விட்டுவிடலாம்.  இந்தக் கொலையை இலங்கை  அரசே செய்தது என வைத்துக் கொள்வோம்.  அரசியல் கொலைகளை  கன கச்சிதமாக உளவுப் பிரிவுகள் மூலம் மேற்குலக நாடுகளும். இரஸ்யாவும்.  இஸ்ரவேலுமே இதுவரை செய்து முடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் அனைத்து வளங்களையும் பாவித்திருப்பதோடு கொலை நடந்து பல வருடங்களின் பின்னர் அதனோடு சம்பந்தப் பட்டதொருவர்  ஓய்வு பெற்ற காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதினாலோ அல்லது ஏதாவது ஒரு பத்திரிகையாளர் பல வருடங்களாக  நோண்டி விடயத்தை வெளியே கொண்டு வந்தால்தான் வெளி வரும். அனால் அந்த உண்மைகள் வெளிவரும் போது அந்த விடயமே மறந்து போய்விட்டிருப்பதோடு  அதை வைத்து எந்த நியாயமும் கிடைத்ததும் இல்லை.இவங்கை போன்ற சிறிய நாடுகள் மேற்குலக நாடுகளிற்குள் புகுந்து அரசியல் கொலைகளை செய்வதற்கு துணிய மாட்டாது காரணம் கொலையை இலங்கையரசுதான் செய்ததென்று நேரடியாக உறுதிப் படுத்தப் பட்டால் பிரான்ஸ் போன்ற  பலமான நாடுகளிற்கு  தங்கள் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகி  கெளரவ பிரச்சனையாகி அது இலங்கை மீதான அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரியாத அளவிற்கு  இலங்கையரசு முட்டாள் அல்ல .

அதுவும்  Le Parisienபத்திரிகையில் வெளி வந்தது போல் இலங்கையரசின் தூதரகம் நேரடியாக சம்பத்தப் பட்டிருக்காது. இலங்கைத் தூதரகத்திற்கே தெரியாமல் இலங்கை புலனாய்வுத்துறை  வேறு தரகர்கள் ஊடாக கூலிக் கொலையாளர்களை வைத்து நடத்தியிருக்கும். அப்படியே  தரகர்கள் ஊடாக கூலிக்கு ஆளை வைத்து  பிரிதியை கொலை செய்திருந்திருந்து பிரெஞ்சு புலனாய்வுத் துறை அதை கண்டுபிடித்திருந்தாலும்  பிரெஞ்சு அரசு  தமிழர்களிற்கு அநீதி நடந்து விட்டது என்று இலங்கை யரசை குற்றம் சாட்டவோ ஜ.நா சபையில் இலங்கைக்கெதிராக தீர்மானமோ. அல்லது தமிழீழத்தை வாங்கித் தரப் போவது கிடையாது. பிரான்ஸ் தன்னுடைய நலனிற்கு தேவையான ஏதோ ஒன்று இலங்கையிடமிருந்து  பெறமுடியுமானால்  இலங்கையரசுடன் பேரம் பேசி இலங்கையை அடிபணியவைத்து தன்னுடைய தேவையை  தீர்துக்கொள்ளும். அதே நேரம் பரிதி கொலைக்காக  நீதி கேட்டு கூட்டம் போட்டாலென்ன  பாரிசில் இருந்து  ஜ.நா சபைவரை பிரதட்டை  தூக்கு  காவடி  என்று எடுத்தால் கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை.காரணம் பரிதி பரிதி பிரான்சில் தடைசெய்யப் பட்டதொரு அமைப்பின் பிரதிநிதி என்பதோடு  பிரெஞ்சு காவல்த்துறையின் கண்காணிப்பில் இருக்கின்ற ஒரு முன்னை நாள் கைதி.

ஆனால் தற்சமயம் பரிதியின் கொலை விசாரணை உள்வீட்டு விவகாரம் என்கிற கோணத்திலேயே தான் போய்க்கொண்டிருக்கின்றது. கைதானவர்கள் பரிதியோடு நெருக்கமாக இருந்த ஒரு வன்முறைக் குழுவினர். பரிதி தலைமைச் செயலகத்துடன் இணைவதை விரும்பாத சுவிஸ் ரகுபதியும். லண்டன் தனமும் கொடுத்த அழுத்தத்தினால்  இரும்பொறையே  பாம்பு குழுவிடம் பரிதியை  போடச் சொல்லியிருக்கலாம். இப்படி நடந்ததை பிரெஞ்சு காவல்த்துறை உறுதி செய்தாலும்  செய்ததும் தமிழன் செத்ததும் தமிழன் . எனவேப கணக்கு தீர்த்தல் என்கிற  வகையில் இந்த கொலையை அடக்கி கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை கைதிகள் என்கிற பெயரிலேயே  ஆறு அல்லது ஏழு வருடங்கள் கழித்து எச்சரித்து விடுவித்து விடுவார்கள்.  அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வராது. ஆனால் உண்மையில்  என்ன நடந்தது என்பதனை  ஊடுருவி தேடல்கள் நடத்தி கண்டு பிடித்து கொலையை வெளியே கொண்டு வரும் அளவிற்கு எம்மவரின் எந்த ஊடகமோ  ஊடகர்களோ இல்லை.  எங்களை நாங்களே மகிழ்ச்சிப் படுத்த  எழுதும் ஊடகங்களும்   தலைப்பை மட்டும் மாற்றி விட்டு வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மட்டுமே எம்மிடம் உள்ளது.எனவே பரிதியின் கெலை என்பது  இன்னும் சில காலங்களில் மறக்கப்பட்டதொன்றாகவே மாறிவிடும்.

இது இப்படியிருக்க  அனைத்துலகச் செயலகம் அடுத்த கட்ட ஆயுதப் போரை நடத்தப் போவதாக கூறியிருப்பது தெய்வீகன் என்கிற  நபரை வைத்துத்தான்.தெய்வீகன் என்பவர் யாரென்று சுருக்கமாக பார்த்து விடலாம். இவர் புலிகள் அமைப்பில் ஒரு இளநிலை போராளி விமான ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினால்  கிழக்கு ஜரோப்பிய  நாடொன்றிற்கு அனுப்பி விமான ஓட்டிக்கான கல்வியும்  பயிற்சியும் பொற்றவர்  அதில் தேர்ச்சி பெறாததால்  திரும்பவும் வன்னிக்கு அழைத்து  புலிகளின் உள்ளக புலனாய்வு பிரிவில் இணைக்கப் பட்டிருந்தார். இறுதிகட்ட யுத்தத்தில் இவரே வழங்கலிற்கும் பொறுப்பாக இருந்தவர். புலிகள் அமைப்பின் இறுதி முயற்சியான ஆனந்த புரம் ஊடறுப்பு சமர் நடந்தவேளை  அதற்கு  தலைவர் பிரபாகரனே  நேடியாக நின்று கட்டளைகளை வழங்கியிருந்ததும் அது தோல்வியில் முடிந்து  புலிகள் அமைப்பின் முன்னணி தளபதிகளும் ஆயிரக்கணக்கான போராளிகளும் பலியானதோடு தலைவர் பிரபாரன்  உயிர் தப்பியிருந்தார். அந்த சண்டைக்காக மேலதிக ஆயுத மற்றும் காயமடைந்தவர்களிற்கான  அவசர மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு களத்தில் நின்றிருந்த தளபதிகள்  தெய்வீகனை தொடர்பு கொள்ள முற்பட்ட வேளை  தனது தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு காணாமல் போயிருந்தவர். மீண்டும் 2010 ம் ஆண்டு தை மாதமளவில்  இந்தியாவில் மதுரையில் நடமாடத் தொடங்கியிருந்தார்.

 அவரோடு வெளியக புலனாய்வுத் துறையின் புகழேந்தி  மற்றும் தென்னவன் அல்லது கரிகாலனும் மதுரையில் தங்கியிருந்து புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாட்டு கிளைகளோடு தொர்புகளை ஏற்படுத்தி தாங்கள் இன்னமும்  பலநூறு  போராளிகளுடன் வன்னி காடுகளிற்குள்ளேயே நிற்பதாகவும் மறு பக்கம் கிழக்கு மாகாண காட்டிற்குள்  ராமும் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும்  ராமின்  தலைமையில் அடுத்த கட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக  தங்களிற்கு ஆயுதங்களை பெறுவதற்காகவும்  அத்தியாவசிய தேவைகளிற்காவும் நிதி உதவி கோரியிருந்தார்கள்.  அதை நம்பி அனைத்துலக செயலகமும் பணம் அனுப்பியிருந்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தென்னவன் என்கிற கரிகாலனும் என்னுடன் தொர்புகளை ஏற்படுத்தி கதைத்திருந்தார். பணத்தை அனுப்பிவிட்டிருந்த அனைத்துலகச் செயலகத்தினர் தாக்குதல் எதுவும் நடக்காததால் ஏமாற்றமடைந்து  ராமோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஏதாவது தாக்குதல் செய்தால் தான்  இங்குள்ள மக்கள் நம்புவார்கள்  அப்பொழுதான் பணம் சேகரித்து அனுப்பலாம் ஏதாவது தாக்குதலை  செய்யும்படி கேட்டிருந்தனர். ஆனால் இது வரை காலமும் தலைவரின் கட்டளைக்கிணங்கவே  தான்  தாக்குதல்களை நடத்தியதாகவும்  வெளிநாட்டிலிருந்து  வரும் கட்டளைகளிற்கிணங்க தன்னால் இயங்க முடியாது  தலைவரின் கட்டளை  வராமல்  தன்னால் எதையும் செய்ய முடியாதென  ராம் எவ்வித தாக்குதலையும் செய்ய மறுத்து  தெய்வீகனின் தொடர்பும் தனக்கு இல்லையென்று அவர்களிற்கு சொல்லிவிட்டிருந்தான். பின்னர் ராமிற்கும் எனக்கும் நடந்த உரையாடல்களின்போது அதை தெரித்திருந்தான். அன்றை கால கட்டத்தில் தான் இலங்கை வான்படையின் உலங்கு வானுர்தியொன்று காலநிலை காரணமாக  கட்டுப் பகுதியில் விபத்திற்குள்ளாக அதனை ராமின் தாக்குதலிற்குள்ளானதாக  வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யவும் அனைத்துலகம் முயன்றிருந்தது. 

பின்னர் சில காலங்கள் தெய்வீகனின் தொடர்பு அறுந்து பேயிருந்ததோடு தென்னவன் (கரிகாலன் )பிரான்ஸ் வந்து சேர்ந்ததும் மீண்டும் அனைத்துலக செயலகம் மற்றும் பழைய வெளிநாட்டு கட்டமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்பொழுது மீண்டும் என்னுடன்  ஒரு தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவர்தான்  தற்சமயம் அனைத்துலக செயலகத்தோடு சேர்ந்து நின்று  தெய்வீகனால் அடுத்த கட்ட ஆயுத போரை வழிநடத்த முடியும் என்று  அவர்களையும் நம்பவைத்து  தெய்வீகனோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும்.  

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச் செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின் தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ் இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை  கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான  உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும் காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

கரிகாலன்(பிரான்ஸ்), குட்டி(டென்மார்க்) பிரியன்,(டென்மார்க்) தனம் (இலண்டன்), சிறீறவி'ஜெர்மனி) , அதிர்வு கண்ணன்(இலண்டன்)  பெஞ்சமின்(நோர்வே) அம்புறுஸ்(இத்தாலி..தற்சமயம் பிரான்ஸ்) ஆகியோரது பங்கு பிரிப்புக்கள் பற்றி இன்னொரு கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.  அதுவரை நன்றி வணக்கம்.



நன்றி -அவலங்கள் 
»»  (மேலும்)

| |

நாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர்லாந்தில் குமார் குணரட்ணம்.

ஜேவிபி யிலிருந்து பிரிந்து சென்று தனியாக கட்சி ஒன்றை தொடங்கியுள்ள குமார் குணரட்ணம் இன்று சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். அச்சந்திப்பில் தனது கட்சியின் கிளை அமைப்பான 'சம உரிமை இயக்கம்' தொடர்பான கொள்கை விளக்கம்இடம்பெற்றது. 

சந்திப்பில் கேள்வி நேரத்தின்போது ' ஜேவிபி யிலிருந்து குமார் குணரட்ணம் பிரிந்து சென்ற பின்னர் புலிகள் அமைப்புடன் நெருக்கமான உறவுகள் பேணப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக கேட்கப்பட்டதுடன், அவ்வமைப்பு தொடர்பான சம உரிமை இயக்கத்தின் நிலைப்பாடு என்ன எனவும் அவ்வமைப்புடன் இணைந்து செயற்படுவீர்களா?' எனவும் நபர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்விக்கு பதிலளித்த குமார் குணரட்ணம் : ' புலிகள் தமது அமைப்பை ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்' என தெரிவித்தார்.

சம உரிமை இயக்கம் இனவாதத்திற்கு எதிராக போராடுவதே தமது இலக்குகளில் ஒன்று எனத் தெரிவிக்கின்றது. மறுபுறத்தில் இலங்கையிலே சிங்கள , முஸ்லிம் மக்களை அவர்களது குடிமனைகளினுள்ளும் வணக்க ஸ்தலங்களினுள்ளும் புகுந்து படுபாதகமாக இனப்படுகொலைகளை மேற்கொண்டு இழிபுகழ் பெற்ற புலிகளியக்கம் சம உரிமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுடன் இணைந்து செயற்பட சம்மதம் என்கின்றனர். அதாவது அது அப்பட்டமான இனவாத இயக்கமாக இருந்தாலும் சம உரிமை இயக்கதை ஏற்றுக்கொண்டுவிட்டால் அங்கு சம உரிமை எல்லாம் காற்றுடன் சங்கமித்துவிடும் என்கின்றார் குமார் குணரட்ணம்.

மேலும் 'நீங்கள் முக்கிய பங்காளியாக இருந்த ஜேவிபி இலங்கையிலே இனவாதத்திற்கு பெயர் போன அமைப்பாக உள்ளது. அவ்வியக்கத்திலிருந்து பிரிந்து வந்த பின்னர் இனவாதத்திற்கு எதிராக போராடப்போவதாக கூறுகின்றீர்கள், அவ்வியக்கம் இனவாதிகள் என்ற காரணத்திற்காகவா அவ்வியக்கத்திலிருந்து வெளியேறினீர்கள்' என்று கேள்வி எழுப்பப்பட்டபோது 'அதுவும் ஒரு காரணம்' எனப்பதிலளித்தார். 

நன்றி -இலங்கைநெற் 

»»  (மேலும்)

| |

அறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் மூழ்கி அழிவடையும் அபாயம்.

மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராகவிருந்த பெருமளவான விவசாய வயல்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதனதால் பெருகிவரும் வெள்ளம் காரணமாக படுவான்கரையில் உள்ள பெருமளவான வேளாண்மை வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்து வருவதுடன் ஆற்றுக் கட்டுக்கள்,வாய்க்கால் கட்டுக்கள்,வரம்புகள் வெள்ளம் காரணமாக பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளது. வயல்களால் அடித்துச் செல்லும் வெள்ளம் பல வீதிகளை ஊடறுத்துச் செல்வதனால் படுவான்கரையில் உள்ள அதிகமான வீதிகளின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு

மட்டக்களப்புக்கும் கொழும்பக்கும் இடையிலான மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
மன்னம்பிட்டி மற்றும் கல்லல பிரதான வீதியில் எட்டு அடி வெள்ளம் பாய்வதால் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலருந்து கொழும்புக்கு செல்பவர்கள் வாகரை பனிச்சங்கேனி ஊடாகவும் கண்டி ஊடாகவும் உள்ள பாதைகைளை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து மன்னம்பிட்டி கல்லல பிரதான வீதிகளின் குறுக்காக வெள்ளம் பாய்கின்றது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதமும், இவ்வருடத்தின் இம்மாதத்திலும் மன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து நான்காவது தடவையாக தற்போது துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

1/25/2013

| |

வாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலமர்வு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (23.01.2012) இடம்பெற்றது.
வாழ்வின் எழுச்சி (திவிநெகும) செயற்றிட்டத்தின் மூலம் தனிநபர் வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்பது தொடர்பிலான விழிப்புணர்வுச் செயலமர்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எம். சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. ம.உதயசிறிதர், ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் திரு சி.வினோத் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பட்டதாரி பயிலுனர்கள், சமய பெரியார்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
»»  (மேலும்)

| |

இலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்

இலங்கையில் சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியாகப் பாடப்பட்டு வரும் தேசிய கீத்த்தை, இரு மொழிகளையும் கலந்து ஒரு புதிய வடிவிலான தேசிய கீதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாடு மற்றும் இன விவகாரங்கள் அமைச்சின் முன் முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த இசை வடிவம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பார்வைக்கு அனுப்பபட்டு, அதன் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த இருமொழி கலந்த தேசிய கீதம் அமலுக்கு வர, இலங்கையில் ஒரு அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படலாம் என்று கூறிய அமைச்சர் நாணயக்கார, நாடாளுமன்ற குழுவின் பரிந்துரை இப்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன் தேவை குறித்து விளக்கிய அவர், இலங்கை அரசியல் சட்டத்தில், தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும், ஒரே இசை மற்றும் ஒரே அர்த்த்த்துடன் எழுதப்பட்டுள்ளது என்றும் எந்த சமூகம் அதைப் பாடுகிறது அல்லது கேட்கிறது என்பதை வைத்து சிங்களம் அல்லது தமிழில் பாடப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்.
இது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஏற்ப மொழிவாரியாக பாடப்படாமல், இரு மொழிகளிலும் பாடப்பட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும் அவர் கூறுகிறார்.
தேசிய நிகழ்வுகளில் இருமொழிக் கலப்பில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதமே பாடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார். அது தேச ஒற்றுமைக்கு உதவும் எனவும் அமைச்சர் நாணய்க்கார கூறுகிறார்.
»»  (மேலும்)

1/24/2013

| |

அணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்


கொரிய மத்திய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வட கொரியாவுடன் தொடர்பான ஐ•நா பாதுகாப்பவையின் தீர்மானத்துக்கு வட கொரியத் தேசிய பாதுகாப்புக் கமிட்டி 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியா, மேலும் உயர்நிலை அணு ஆற்றல் சோதனையை மேற்கொள்வதாகவும், நாட்டு சுய நிர்ணய உரிமையை உறுதியாகப் பாதுகாக்கப் போராடுவதாகவும் இவ்வறிக்கை சுட்டிகாட்டியது.
மேலும், ஐ•நா பாதுகாப்பவைக்கு நியாயம் மற்றும் தனது சமத்துவத் தன்மையை இழந்துள்ளதால், இல்லாததால், 6 தரப்புப் பேச்சுவார்த்தை மற்றும் செப்டம்பர் 19 பொது அறிக்கையை வட கொரியா கடைப்பிடிக்க போவதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

ஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை


வட கொரியா ஏவுகணையைச் செலுத்துவது பற்றி, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 22ஆம் நாள், 15 ஆதரவு வாக்குகளுடன் 2087வது தீர்மானத்தை, நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பவையின் தொடர்புடைய விதிகளைப் பின்பற்றி, எறிவிசை ஏவுகணைத் தொழில் நுட்பங்களின் மூலம் ஏவுகணையைச் செலுத்த, ஐ.நா வட கொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறைகளின் மூலம் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 6 தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குமாறு இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லி பௌ துங், ஆதரவாக வாக்களித்து, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு உரை நிகழ்த்தினார். 6 தரப்புப் பேச்சுவார்த்தையை விரைவாக மீண்டும் தொடங்கி, பல்வேறு தரப்புகளின் கவனத்தைச் சமநிலையில் கையாள வேண்டுமென அவர் தெரிவித்தார்.
ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் அறிக்கை வெளியிடுகையில், பாதுகாப்பவையின் புதிய தீர்மானம் வரவேற்கப்படுகிறது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மை மற்றும் நிதான அமைதி நிலையை நிலைநிறுத்தும் ஒரே வழிமுறையாக, பேச்சுவார்த்தை இருப்பதாக அவர் கூறினார்.
»»  (மேலும்)

| |

சீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலாளர்


2012-ஆம் ஆண்டுக்கான சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு விருது இந்திய அறிவியலாளர் C.N.R.Rao உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு அறிவியலாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சீன அறிவியல் கழகம் 23-ஆம் நாள் அறிவித்தது. அக்கழகத்தின் வேந்தர் பை ச்சுன் லீ, விருது பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
முனைவர் C.N.R.Rao, பலமுறை சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். Einstein விரிவுரைப் பேராசிரியர் என்ற பெருமையை, சீன அறிவியல் கழகம் அவருக்கு வழங்கி இருக்கிறது. மேலும், வளரும் நாடுகளின் அறிவியல் கழகத்துக்கும் சீன அறிவியல் கழகத்துக்குமிடை ஒத்துழைப்பையும் சீன-இந்திய அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறமைசாலிப் பயிற்சியையும் வலுப்படுத்துவது, வளரும் நாடுகளின் அறிவியல் தொழில் நுட்ப திறனை உயர்த்துவது ஆகியவற்றில், அவர் முக்கிய பங்காற்றி வருகின்றார்.

இவ்விருது பெற்றவர்களில் இதர இரு வெளிநாட்டு அறிவியலாளர்கள், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
»»  (மேலும்)

| |

எனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் அறிமுக விழா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எஸ்.எம்.அய்யுப் எழுதிய “எனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் அறிமுக விழா நேற்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார கலைத் திரைக் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக கலை கலாசார பீட பீடாதிபி கே.எம்.பளீல் ஹக், இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீட பீடாதிபதி ஏ.பி.எம். அலியார் மௌலவி உட்பட துறைத் தலைவர்களும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

| |

தமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒழிப்பதற்கு சமனாகும்.

வீ.ஆனந்தசங்கரி
காலத்தின் தேவைக்கமைய தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ், ஈபி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாக செயற்படும் நோக்கத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புத்துயிரளிக்கப்பட்டது. இக்கட்சிகள் அனைத்தும் சம பலத்துடனேயே இணைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமையால் வேறு வழியின்றி தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்டனவே அன்றி அன்றைய நிலையில் தமிழரசுக் கட்சிக்கு தனித்துவம் இருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனரே அன்றி தமிழரசுக்கட்சிக்கல்ல. இந்த அடிப்படையிலேயே மக்கள் செயற்பட்டதும், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுமாறும் அழுத்தம் கொடுத்தனர். சந்தர்ப்ப சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது சுயநோக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெற்ற கூட்டுக்கட்சிகளின் வேட்பாளர்களை தமிழரசு கட்சியில் இணைத்தமையை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். தமிழரசுக்கட்சியின் இத்தகைய போக்கை தடுத்து நிறுத்தாது அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் திரு. சம்பந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சியை பலப்படுத்த வேண்டும் என விடுத்திருக்கும் கோரிக்கை அமைகிறது. இது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாய் கட்சியாக தமிழ் தேசிய  கூட்டமைப்பும், அதில் இணைந்துள்ள கட்சிகள் அனைத்தும் அதன் அங்கங்களேயாகும். சில சுயநலவாதிகளால் குட்டையை குழப்பி பருந்துக்கு இரையாக்காது தடுக்க திரு.சம்பந்தன் அவர்கள் செயற்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்காகவே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகியன முன்வந்ததேயொழிய தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்படுவதற்காக அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற ஓர் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்ற திரு. சம்பந்தன் அவர்களின் கோரிக்கைக்கு மக்கள் சார்பில் வரும் பதிலே இதுவாகும். 2004ம் ஆண்டுக்குப்பின் நடந்தேறிய அத்தனை தேர்தல்களிலும் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர் என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.
»»  (மேலும்)

1/21/2013

| |

அல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் முற்றுகை முடிவு

23 வெளிநாட்டு பிணைக்கைதிகள், 32 ஆயுததாரிகள் பலி
அல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளால் வெளிநாட்டு பிணைக் கைதிகளுடன் முற்றுகையிடப்பட்ட எரிவாயு ஆலை நான்கு தின போராட்டத்தின் பின் மீட்கப்பட்டது. எனினும் அல்ஜீரிய இராணுவத்தின் மீட்பு நடவடிக்கையின் போது ஆயுததாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளும் கொல்லப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு எதிரான கடைசி கட்ட இராணுவ நடவடிக்கையின் போது 7 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி முற்றுகை நடவடிக்கையால் குறைந்தது 23 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதோடு 32 ஆயுததாரிகள் பலியாயினர். இதில் 5 பிரிட்டன் நாட்டவர் கொல்லப்பட்டதாக அஞ்சப்படுவதோடு மேலும் 5 நோர்வே நாட்டவர்களை காணவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வன்முறையை தீவிரவாத செயல் என விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீவிரவாதத்தை ஒடுக்க பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு எதிரான அல்ஜீரிய இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே இது தேவையான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறியுள்ளார். அத்துடன் இந்த வன்முறைகளால் மேலும் பிரிட்டன் பிரஜைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார்.
தென் கிழக்கு அல்ஜீரியாவில் 1,300 கிலோ மீற்றருக்கு அப்பாலிருக்கும் அமனாஸ் நகரில் உள்ள எரிவாயு ஆலையை ஆயுததாரிகள் கடந்த நான்கு தினங்களாக முற்றுகை இட்டிருந்தனர். இந்த ஆலை நோர்வே, பிரிட்டன் எண்ணெய் நிறுவனங்களுடன் அல்ஜீரிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் இணைந்து நடத்துகிறது. இந்த எரிவாயு ஆலையை ஆயுத தாரிகள் கடந்த புதன்கிழமை முற்றுகையிட்டனர். இதன் போது பல வெளிநாட்டு தொழிலாளர்களும் ஆயுததாரிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதனையடுத்து அல்ஜீரிய இராணுவம் இந்த ஆலையை சுற்றிவளைத்தது.
இதில் கடந்த சனிக்கிழமை அல்ஜீரிய இராணுவம் முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர எரிவாயு ஆலைக்குள் ஊடுருவினர். இதன் போது அங்கிருந்த ஆயுததாரிகள் தம்மிடம் இறுதியாக பிணைக்கதிகளாக இருந்த 7 பேரையும் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக எரிவாயு ஆலையில் பணிபுரிந்த 685 அல்ஜீரிய தொழிலாளர் களும் 132 வெளிநாட்டு பணியாளர்களில் 107 பேரும் விடுவிக்கப்பட்டதாக அல்ஜீரிய உள்துறை அமைச்சு கூறியதாக அந்நாட்டு செய்திச் சேவையான ஏ. பி. எஸ். கூறியுள்ளது.
இதில் பிணைக்கைதிகளாக பிடிபட்டோருள் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு கொல்லப்பட்டோர் எந்தெந்த நாட்டவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் 17 ஜப்பான் நாட்டவர்களை காணவில்லை என அந்நாட்டு பிரதமர் ஷின்கோ அபெ கூறியுள்ளார். பிரிட்டன் எண்ணெய் நிறுவனம் தமது 18 பணியாளர்களில் 14 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் எஞ்சிய நான்கு பேர் தொடர்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நோர்வே எண்ணெய் நிறுவனம் தமது 5 பணியாளர்களைத் தொடர்ந்தும் காணவில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் எரிவாயு ஆலைக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டு மற்றும் நிலக்கண்ணிகளை அகற்றும் பணியில் இராணுவம் ஈடுபட்டிருப்பதாக அல்ஜீரிய தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஆயுததாரிகளிடம் இருந்து இரு இயந்திர துப்பாக்கிகள், 21 ரைபிள்கள், கைக் கண்டுகள், எறிகணைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பி வந்த சில வெளிநாட்டு பிணைக் கைதிகள் கூறுகையில், தங்கள் கழுத்துக்களில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டதாகத் தெரிவித்தனர். தப்பி வந்த அல்ஜீரியர் ஒருவர் கூறுகையில் கடத்தல்காரர்கள் அனைத்துப் பிணைக்கைதிகளையும் எரிவாயு நிறுவனத்தின் உணவகப் பகுதியில் வைத்ததாகவும் அங்கிருந்து யாரும் தப்ப முடியாதபடி வெடி குண்டுகளை அப்பகுதியைச் சுற்றிலும் கட்டிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இராணுவத்தின் மீட்பு முயற்சியில் 34 பிணைக்கைதிகள் இறந்ததாக கடத்தல்காரர்கள் குற்றம் சாட்டினர். எனினும் இந்த எண்ணிக்கை கற்பனையானது என்று தெரிவித்த இராணுவம் 30க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களில் 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. கடந்த புதன்கிழமை வெளிநாட்டு தொழிலா ளர்களை ஏற்றிச்சென்ற இரு பஸ்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னரே ஆயுததாரிகள் எரிவாயு ஆலையை முற்றுகையிட்டனர். இந்த தாக்குதலின் போது பிரிட்டன், அல்ஜீரிய நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த முற்றுகையில் ஈடுபட்ட ஆயுதக் குழுவின் தலைவராக நைகர் நாட்டின் முன்னாள் போராளி அப்துல் ரஹ்மான் அல் நிகாரி செயற்படுவதாக மொரித்தானிய செய்திச் சேவையான ஏ. என். ஐ. தெரிவித்துள்ளது.
மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர் களுக்கு எதிரான பிரான்ஸின் இராணுவ தலையீட்டை நிறுத்த வேண்டும் என்பதே ஆயுததாரிகளின் பிரதான நிபந்தனையாகும்.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும்- திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்

GA Battiமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் எழுந்துள்ள எல்லைப் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் ஆதலால் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு எந்த போராட்டங்களையும் நடாத்த தேவையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் நடைபெற்ற முப்பெரும் விழா வைபவத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் மட் ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ் விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது எழுந்தள்ள எல்லைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பொருட்டு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தலைமையில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி பாராளுமன்ற கட்டத் தொகுதியில் சுமூகமான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
ஆகவே எல்லைப் பிரச்சினை தொடர்பாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேசத்தில் உள்ள தமிழ் கிராமங்களை கோறளைப்பற்று மேற்கு மற்றும் மத்தி ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைப்பதற்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை தமிழ் பிரதேசங்களில் கடையடைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இவ்வாறு கிரான் பிரதேச பிரிவில் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள கோறளைப்பற்று மேற்கு மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான 05 கிராம சேவகர் பிரிவுகளை மீண்டும்  கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவடன் இணைக்க கோரி ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் நேற்று கவனஈர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இவ்வாறு எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாகவே பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
»»  (மேலும்)