12/06/2012

| |

முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக!


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக புனர்வாழ்வு பயிற்களை பெற்ற 400 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின்; ஆலோசனையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸின் வழி நடத்தலின் கீழ் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
முன்பள்ளி ஆசிரியர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளவர்களின் குறித்த பிரதேசங்களை சேர்ந்த சிவில் வாசிகளும் அடங்குகின்றனர். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவரும், முன்பள்ளி ஆசிரியைக்கான நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.