12/12/2012

| |

மக்கள் மனங்களில் என்றும் சந்திரகாந்தனே முதல்வர்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து தற்போது 3 மாதங்கள் கடக்கின்றன. இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்களின் மக்கள் பலம் என்பது இன்னமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் சில முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து செய்த சதியின் மூலம் அவருடைய முதல்வராகவிருந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டதே தவிர, மக்கள் மனங்களில் ஒரு முதல்வர் என்ற அந்தஸ்தை கொண்டிருக்கின்றார் என்பதை விளக்குமுகமாக இக்கட்டுரை அமைகின்றது.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே முதலமைச்சர் வேட்பாளராக சந்திரகாந்தன்  களமிறங்கியிருந்தார். ஆனால் 2008 இல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலை ஒரு பொருட்டாகக் கருதாமல் புறக்கணித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இத்தேர்தலிலே வீரவசனம் பேசி களமிறங்கியது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முக்கியநோக்கமாக சந்திரகாந்தனை அரசியலில் , மக்களிடமிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒரு நோக்குடன், சில முஸ்லிம் கட்சிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்டும் களத்தில் இறங்கியது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நினைத்தமாதிரி , முதலமைச்சர் பதவியை முஸ்லிம் இனத்திற்கு தாரைவார்த்துக்கொடுத்ததே தவிர, சந்திரகாந்தனை அரசியலில் இருந்து வீழ்த்த முடியவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலே தான் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்pன் சார்பில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக திகழந்;;தார் சந்திரகாந்தன்.
இந்தவேளையில் கூட்டாட்சி அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது முஸ்லிம் காங்கிரசின் பேரம்பேசும் தன்மையை அதிகிரித்த அதன் மூலம் அரசினால் முதல்வராக தமிழரான சந்திரகாந்தன் நியிமிக்கப்படவிருந்த வாய்ப்பையும் தடடிப் பறித்து முஸ்லிம்களிடம் தாரைவார்த்துக் கொடுத்தது.
மட்டக்களப்பு மக்களுக்கு நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை வழங்கி தமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகளை திருடிக்கொண்டது. இருந்தும் சில மக்கள் தெளிவான சிந்தனையுடன் சந்திரகாந்தனுக்கும் வாக்களித்து வெற்றிபெறச் செய்தாhகள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் இன்று தாம் விட்ட தவறுகளை உணரத்தொடங்கியுள்ளார்கள்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூறியது போன்று, முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சிமைப்போம், தமிழ் மக்கள் வாக்க்ளித்தால் சர்வதேசம் உதவும் போன்ற வாக்குறுதிகளின் நிiவேறாத் தன்மையினை இன்று உணர்கின்றார்கள்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு போடப்பட்ட வாக்குகள் 'ஒரு செத்த பிணத்திற்கு ஊட்டப்பட்ட உணவு' என்ற உவமையினை எண்ணி வருத்தமடைகின்றாhகள். ஏனெனில் எதிர்க்கட்சி ஆசனங்களில்  அவர்கள் இருப்பதனால் எதுவித அபிவிருத்தியோ அல்லலது நன்மைகளோ மக்களை அடையாமலே இருக்கின்றது.  இதனாலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்pற்கு வாக்கழித்வர்கள் கூட இன்று முதல்வரையே தமது அரசியல் தலைவராக எற்றுக் கொண்டிருக்கின்றாhகள்.
கிழக்கு வாழ் தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கு மிகுந்தவராக சந்திரகாந்;தன் அவாகள் திகழ்கின்;றார் என்பதனை எடுத்துக் காட்டுவதற்கு இரண்டு விடயங்களை இங்கு கூறலாம்.
1.    கிழக்கில் இடம்பெறுகின்ற பாடசாலை நிகழ்வுகள், மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆரம்ப நிகழ்வுகள் அனைத்திலும் மக்களால் பிரதம அதிதியாக விரும்பி அழைக்கப்படுகின்றமை. குறிப்பாக பாடசாலைகளில் இடம்பெறும் பரிசளிப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டும் வைபவங்கள் என்பவற்றுக்கு பிரதம அதிதியாக சந்திரகாந்தன் அவர்களையே அதிகமாக் காணமுடிகின்றது. கிழக்கில் அதுவும் குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 03 பாராளுமன்ற உறுப்பினர்கள், 06 மாகாண சபை உறுப்பினாகள் இருந்தும் கூட சந்திகாந்தன் அவர்கள் அதிக நிகழ்வுகளில் கலந்து வருவதானது அவருடைய அரசியல் அடித்தளம் மற்றும் மக்கள் மத்தியில் மக்கள் மனங்களில் வீற்றிருக்கின்ற தன்மையினை எடுத்துக் காட்டுகின்றது.
2.    கிழக்கில் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேண்டுதல்கள் சந்திரகாந்தன் அவர்களிடத்திலேயே  வந்து சேர்கின்றன. குறிப்பாக அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினையை நாம் இங்கு சுட்டிக் காட்டலாம். கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கிய மேய்ச்சல் தரைப் பிரச்சினை ஆரம்பத்pல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதனை வைத்து அவர்கள் அரசியல் செயற்பாடுகளைத் தவிர மதிர்த்து வைக்க விரும்பவில்லை. இதனால் மக்கள் நம்பிக்கையுடன் முதல்வரை சந்தித்தார்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தனது முதல்வர் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தின் வேறெந்த தமிழ் அரசியல்வாதியும் செய்யாத மக்கள் சேவையை சந்திரகாந்தன் செய்திருந்தார். இந்தவேளையில் சங்கமருவிய கால இலக்கியமான 'பழமொழிநானூறு' என்ற இலக்கியத்தில் " ஆற்றலுடைய பெரியோரின் புகழை மறைக்க நினைப்பது, சூரியனை கையினால் மறைக்கின்ற செயலுக்கு ஒப்பானதாகும்"    என்ற கருத்துள்ள பின்வரும் பாடல் நினைவுக்கு வருகின்றது.
'பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக் கரந்து
மறைக்கலும் ஆகுமோ? – நிரந்தெழுந்து
வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய்! விண்இயங்கும்
ஞாயிற்றைக் கைம்மறைப்பார்."
- ஆராவாணன் -