12/19/2012

| |

வாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவி புரியும் முன்னாள் முதலமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்கேணி கிராம மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிநேசதுரை சந்திரகாந்தன் பல திட்டங்களை செயற்படுத்தி உள்ளார். தனது 2012ம் ஆண்டிற்கான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இத் திட்டத்திற்காக சுமார் இருபது இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். விசேடமாக நாவற்கேணி கிராமத்தில் வசிக்கும் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மேற்படி பணம்; பகிர்ந்தளிக்கப்பட்டது.
இத் திட்டத்தில் உள்ளவாங்கப்பட்ட பெண்கள் தாங்கள் விரும்பிய சுயதொழில்களை மேற்கொள்வதற்காகவே குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு நாவற்கேணி பாலர் பாடசாலை கட்டிடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது உரையில் குறிப்பிடுகையில்,
கிராமமட்ட அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஓர் செயற்பாட்டின் மைல்கல்; இந் நிகழ்வாகும். அபிவிருத்தி என்பது கிராமத்தில் இருந்தே ஆரம்பிக்கபட வேண்டும் என்ற எண்ணக் கருவின் அடிப்படையில் இந் நிகழ்வும் ஏறப்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விசேடமாக கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்களது வாழ்வாதாரங்களை தங்களுக்கு பொருத்தமான ஓர் சுயதொழிலின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நோக்கின் அடிப்படையிலே இன்றைய பணம் வழங்குகின்ற நிகழ்வு ஏற்பாடாகி இருக்கின்றது. நாங்களே எங்களுக்கான வருமானங்களை ஈட்டிக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மண்முனை மேற்க பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் பாஸ்கரன் கிராம சேவையாளர் உடபட பலர் கலந்து கொண்டார்கள்