உள்ளுராட்சி மன்றங்களை அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களே பலமானதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அதனது முழுமையான பயனையும் மக்களே அனுபவிக்க முடியும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின்(கொக்கட்டிச்சோலை) புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதேச சபையின் தவிசாளர் ரி.பேரின்பராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், 2008ம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டு மாநகர சபை உட்பட 8 தமிழ் உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியது. அதன் பின்னர்தான் மக்களுக்கு தெரியும் உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன? அதன் பயன்பாடு மக்களுக்கான உறவு என்ன? என்பதை எல்லாம் மக்கள் புரிந்து கொண்டார்கள். அதற்கு முன்னர் இதனை ஆட்சி செய்த தமிழ் கட்சி என்று சொல்லப்படுகின்ற கட்சியினரால் அச் சபைகளை சரியாக நிருவகிகக் முடியவும் இல்லை அதனை அவர்கள் சரிவர செயற்படுத்தவும் இல்லை. ஏன் நான் இதனை குறிப்பிடுகின்றேன் என்றால், பெரும்பாலான சபைகள் சாதாரண கட்டிடங்களில்தான் இயங்கிவந்திருக்கின்றன. அலுவலக செயற்பாடுகளை சரிவர அவர்கள் செய்யவில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.
மக்களுக்கான சரியான சேவைகளை வழங்க வேண்டும் என்றால்தானே அவர்கள் அலுவலகக் கட்டிடங்களை புதிதாக அமைத்திருப்பார்கள். அவர்களுக்கு அது எல்லாம் தேவையில்லை. ஏன் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை எடுத்துப் பாருங்கள், ஆலயடிவேம்பு பிரதேச சபையில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்;கடிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று நாவிதன்வெளி பிரதேச சபையில் தற்போது அமளிதுமளி என்ன காரணம் என்றால் பொருத்தமற்ற பதவி நியமனம் என்கின்றார்கள். திருகோணமலை நகராட்சி சபையில் ஊழல் இப்படியே வெருகல் பிரதேச சபையில் சாதாரண குடிநீர் வழங்கக்கூட தவிசாளர் எரிபொருள் செலவு கேட்கின்றாராம். எப்படி நிலைமை என்று பாருங்கள். முழுக்க முழுக்க மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட அரசுமுறைமைதான் உள்ளுராட்சி மன்றங்கள். அதனை ஆ;ட்சி செய்பவர்கள் சரியாக வழிநடாத்தாவிட்டால் அதனை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும். ஏன் எனில் உங்களது வரிப்பணத்திலே அவர்கள்; நிருவாகம் செய்கிறார்கள்.
அவர்கள் உங்களுக்கு சிறப்பான சேவையை ஆற்ற வேண்டும். இல்லையாயில் நீங்கள் தடடிக் கேட்க வேண்டும். அதுதான் நான் சொல்கின்றேன் உள்ளுரட்சி மன்றங்களை வலுவுள்ள ஆழுமை மிக்க சிறப்பான சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு அப் பிரதேசத்தைச் சார்ந்த மக்களேயே சார்ந்ததாகும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பிள்ளையான் அரசியலுக்கு புதியவன்தான் ஆனால் மக்களுக்கல்ல!
பழம்பெருங்கட்சி என்று தங்களை பறைசாற்றுகின்றவர்கள் சொல்கின்றார்கள் பிள்ளையானுக்கு என்ன தெரியும் அவர் அரசியலுக்கு குழந்தை என்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன் நான் அரசியலுக்கு புதியவன்தான் ஆனால் மக்களுக்கு அல்ல. அதாவது மக்களுக்குத் தெரியும் பிள்ளையான் என்ன செய்கின்றாhன். அரசியல் எப்படி பேசுகின்றாhன் என்று எனது மக்களுக்குத் தெரியும்.
பழம்பெருங்கட்சி என்று தங்களை பறைசாற்றுகின்றவர்கள் சொல்கின்றார்கள் பிள்ளையானுக்கு என்ன தெரியும் அவர் அரசியலுக்கு குழந்தை என்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன் நான் அரசியலுக்கு புதியவன்தான் ஆனால் மக்களுக்கு அல்ல. அதாவது மக்களுக்குத் தெரியும் பிள்ளையான் என்ன செய்கின்றாhன். அரசியல் எப்படி பேசுகின்றாhன் என்று எனது மக்களுக்குத் தெரியும்.
கடந்த மாகாண சபை அமர்விலே நான் பேசியிருந்தேன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 பேரால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் நான் ஒருவன் தனியே இருந்து கொண்டு கிழக்கு மகாண தமிழ் பேசும் மக்களுக்காக எல்லாமே செய்வேன் என்று அவர்களுக்கு சொல்லி ;வைத்தேன். நான் இப்பவும் சொல்கின்றேன் எனது உயிர் இருக்கும்வரை நான் மக்களுக்காவே சேவை செய்வேன் இவர்களைப் போல் சந்தார்ப்பவாத அரசியல் செய்யமாட்டேன.;
அரசுடன் இணைந்திருந்தாலும் மக்களின் அதிகாரப் பகிர்வு விடத்திலும் அவர்களது உரிமை விடத்திலும் எப்படியான போக்கை நான் கடைப்பிடித்தேன் என்று கடந்த கால மாகாண சபை ஆட்சி சான்று பகரும். ஏன் இதனை நான் சொல்கின்றேன் என்றால் அவர்கள் ஒருவரியில் சொல்வார்கள் பிள்ளையான் அரசாங்கத்து ஆள்தானே! என்பார்கள். அரசுடன் இணைந்திருந்தாலும் மக்கள் நலனே எனது குறிக்கோள். இன்று யார்யாரெல்லாம் கருத்து சொல்கின்றார்கள். கிழக்கில் ஜனநாயகம் இல்லை அபிவிருத்தி இல்லை என்கின்றார்கள்.
நான் கேட்கின்றேன் இப்படிச் சொல்பவர்களுக்கு மட்டக்களப்பில் நடப்பதை பார்க்க கண் இல்லையா? அல்லது மட்டக்களப்பைத் தெரியாதா? என எண்ணத் தோன்றுகிறது. கிழக்கு மக்களுக்கு தெரியும் கிழக்கில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுகக்ப்பட்டுக் கொணடிருக்கின்றன என்று அம் மக்களுக்கத் தெரிந்தால் போதும்; என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
ஜனநாயகம் எங்கிருக்கிறது?
ஜனநாயகம் ஜனநாயம் என்று நிமிடத்திற்கு ஒரு முறை உச்சரிக்கும் எனது அன்பான தமிழ் தேசியக் கூட்டமைப்ப உறுப்பினர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கிழக்கின் ஜனநாயகத்தின் திறவு கோல் ரி.எம்.வி.பி. என்பதனை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நன்றாக தெரியும். இல்லாவிட்டால் பல கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள் எல்லாம் மக்களிடம் வாக்கு கெட்கின்ற நிலைமை கிழக்கில் இருக்கு என்றால் அங்கே எந்தளவுக்கு ஜனநாயகம் இருக்கு என்பதனை அவர்கள் நன்கு புரிந்து கொணடிருப்பார்கள்.
ஜனநாயகம் ஜனநாயம் என்று நிமிடத்திற்கு ஒரு முறை உச்சரிக்கும் எனது அன்பான தமிழ் தேசியக் கூட்டமைப்ப உறுப்பினர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கிழக்கின் ஜனநாயகத்தின் திறவு கோல் ரி.எம்.வி.பி. என்பதனை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நன்றாக தெரியும். இல்லாவிட்டால் பல கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள் எல்லாம் மக்களிடம் வாக்கு கெட்கின்ற நிலைமை கிழக்கில் இருக்கு என்றால் அங்கே எந்தளவுக்கு ஜனநாயகம் இருக்கு என்பதனை அவர்கள் நன்கு புரிந்து கொணடிருப்பார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகம் எங்கே? கடந்த மாகாண சபைத் தோர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். இரா துரைரெட்ணம் பெற்ற வாக்குகள் 29131 ஆகும். அடுத்தபடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பு தமிழ் அரசுக் கட்சியின் இணைத் தலைவருமான துரைராஜசிங்கம்; இவர் பெற்ற மொத்த வாக்குகள்27717ஆகும். திருகோணமலை மாவட்டத்தில் தண்டாயுதபாணி பெற்ற வாக்குகள் வெறும் 20190 ஆகும். ஆனால் இவருக்கு எந்தவொரு அரசியல் அனுபவமும் இல்லை; பின்னணியும் இல்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட்டது. வெறும் 20000 வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கே வழங்ப்பட்டது. அப்ப எங்கையா உங்கட ஜனநாயகம்?
உண்மையில் இதனடிப்படையில் பார்த்தால் 1ஆவது இரா துரைரட்ணத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். சரி அவர் பிற கட்சிக்காரர் என்ற படியால் அவருக்கு காடுக்கவில்லை. ஓரளவு நியாhயம என்றாலும், முழுக்க முழுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூண் என்று சொல்லப்படுகின்ற அனைத்து திறமைகளுமுள்ள துரைராஜசிங்கத்திற்காவது வழங்கி இருக்க வேண்டும். அதனையும் செய்யாமல் வெறும் 20190 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கு கொடுத்தது. நுpயாயமா? அல்லது ஜனநாயகமா? இதைக் கேட்டால் அது கட்சி முடிவாம். ஆப்படி என்றால் அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்க மதிப்பில்லையா? அதாவது மக்களின் வீரப்புக்கு அங்கே இடம் இல்லையா? தங்களது கட்சிக்குள்ளே ஜனநாயகத்தைப் பேணமுடியாதவர்கள் பறிரது ஜனநாயகம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என தாங்களே சிந்தித்தால் போதும். “பிறருக்கு உபதேசம் செய்யும் போது அதனை நீ உன்னிடம் இருந்தே தொடங்கு” எனவும் சந்திரகாந்தன் தனதுரையில் குறிப்பிட்டார்.