தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இவ்வாண்டின் இறுதிக் கூட்டம் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வாவிக்கரை வீதி 01, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சயின் தலைமைச் செயலகத்தில் மேற்படி செயற்குழுக் கூட்டம் இன்று (29.12.2012)இடம் பெற்றது. இவ்வாண்டில் கட்சி மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல் மற்றும் கட்சியின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாளர் ஆ.தேவராஜா, உபதலைவர்(ஒருங்கிணைப்பு)நா.திரவியம், உபதலைவர்(நிருவாகம்) க.யோகவேள், உபசெயலாளர் ஜெ.ஜெயராஜ்,அம்பாரை மாவட்ட அமைப்பாளர் சோ.புஸ்பராஜா, ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க. மோகன், மகளிர் அவிருத்தி இணைப்பாளர் திருமதி சந்திரா ஜவனராஜ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.மணிவண்ணன், மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். .