இலங்கைக் காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய இந்திய இராணுவ மேஜரின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ள அந்நாட்டு இராணுவம் தீர்மானித்துள்ளது.
விகாஸ் குமார் என்ற 35 வயதான இராணுவ மேஜரே இவ்வாறு பதவி விலக விரும்பி ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.
இராணுவத்தில் கடமையாற்றுவோர் வெளிநாட்டு பெண்களையோ ஆண்களையோ தங்களது வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள முடியாது என்பது சட்டமாகும்.
அதன் அடிப்படையில் மேஜர் விகாஸ், தனது இலங்கைக் காதலியை திருமணம் முடிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டது.
இதனைத் அடுத்து தனது பதவியை இராஜினாமா செய்ய மேஜர் விகாஸ் தீர்மானித்தார்.
எனினும், பயிற்சிகளுக்காக செலவிட்ட மொத்தப் பணத்தையும் இந்திய இராணுவத்திற்கு மீளச் செலுத்த வேண்டுமென மேஜருக்கு இராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக மேஜர் விகாஸ் தெரிவித்துள்ளார்.