12/21/2012

| |

பட்டாபுர கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள்


மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் மாவட்டத்தின் பல பகுதிகள்; பாதிக்கப்;பட்டன. அந்தவகையில் போரதீவுப் பற்று செயலாளர் பிரிவிலுள்ள பட்டாபுர கிராமம் வெள்ளத்தினால் முழுமையாக பாதிப்பட்டுள்ளன. இக் கிராம மக்கள் தற்போது பெரிய போரதீவு பாரதி வித்தியாலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அடிப்படை வசதிகளற்று இருக்கும் இம் மக்களை இன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.
பால்மா மற்றும் பாய்கள் மற்றும் பிஸ்கட் உட்பட பல உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிறிதரன் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிரதேசசெயலாளர் வில்வரெட்ணம் கிராம சேலைவயாளர் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்கள்.