ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் ஆரம்பப் பாடசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்தார்.
மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைய ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை ஆரம்பிக்கும் அபிவிருத்திக்கான துரித வேலைத்திட்டத்தின் கீழ், ஆறுமுகத்தான் குடியிருப்பில் கலைமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவாக இப்பாடசாலை இயங்கவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.பவளகாந்தன், ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம், எறாவூர்ப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.