12/21/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் நிவாரண உதவிகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்ட அடைமழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தற்போது பாடசாலை மற்றும் பொதுக் கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இவர்களுக்கான நிவரணப் பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இன்று(20.12.2012) ஏறாவூர்பற்று மற்றும் போரதீவு, பட்டிப்பளை ஆகிய பிரசேங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றார்கள.; கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் உப செயலாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும்  உறுப்பினர்கள் இப் பணியல் ஈடுபட்டுள்ளார்கள். அத்தோடு வெள்ளநீர் வீடு மற்றும் கிணறு என்பவற்றிற்குள் உட்புகுந்துள்ளதனால் அதனை சுத்தப் படுத்தும் வேலைகளையும் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளதாக பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.