12/06/2012

| |

ஸ்கொட்லாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

ஸ்கொட்லாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபட்டிருந்த 17 வெளிநாட்டுப் பிரஜைகளை ஸ்கொட்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.