12/12/2012

| |

சித்தார் கலைஞர் ரவிசங்கர் காலமானார்

பிரபல சித்தார் இசைக்கலைஞர் ரவிசங்கர் தனது 92 வது வயதில் கலிபோர்னியாவில் காலமானார்.
சாந்தியாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அவர் இதய அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானார்.
இந்திய காலாச்சார பாரம்பரியத்துக்கு ரவிசங்கர் அவர்கள் ஒரு தேசிய சொத்து என்றும், பூகோள தூதுவர் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விபரித்துள்ளார்.
''த பீட்டில்ஸ்'' போன்ற சர்வதேச கலைஞர்களுடனும் சித்தாரை வாசித்து அதனை உலக அரங்கில் ரவிசங்கர் பிரபல்யமாக்கினார்.
சுமார் 70 வருடங்களுக்கும் அதிகமான தனது இசை வாழ்க்கையில் அவர் மூன்று கிராமி விருதுகளையும், இந்தியாவின் பாரத ரத்னா விருதையும் தனதாக்கிக் கொண்டார்.
காந்தி உட்பட பல திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.