12/11/2012

| |

37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 37 பேரும் திருகோணமலை நீதிவான் ஏ.எச்.எம்.அஷ்கர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே, இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஐந்து ரோலர் படகுகளையும் விடுவிக்குமாறு துறைமுக பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

விடுவிக்கப்பட்ட 37 இந்திய மீனவர்களையும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய விஸா அதிகாரி ரமேஷ் ஐயர் துறைமுக பொலிஸாரிடம் இருந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர்களது படகுகளை இன்று கடற் படையினரிடம் இருந்து பொறுப்பேற்றவுடன் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.