12/17/2012

| |

மலிந்தால் சந்தைக்கு வரும் விடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாகம் 3

 பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 3
(பூபாளம் கனடா)
சாத்திரி
கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட  வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை  எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான்  புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது,
புலிகள் அமைப்பின் முடிவிற்கு பின்னர் அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோ இறந்துபோக வெளிநாட்டு அனைத்துலகச்செயலகம் அனைத்தையும் நோர்வே யில் இருந்து நெடியவன் என்பவர் இயக்க அவரிற்கு அடுத்த நிலை பொறுப்பாளராகவும் யெர்மனிய பொறுப்பிலும் இருந்தவர்தான் வாகீசன் என்பவர். புலிகளின் முடிவிற்கு பின்னர் நெடியவனும் வாகீசனும் கனடா அமெரிக்கா தவிர்ந்த மற்றைய நாடுகளிற்கு பயணம் செய்து புலிகள் அமைப்பின் சொத்து விபரங்களை திரட்டியவர்கள்  தங்களின் நம்பிக்கைக்குரிய தாங்கள் கைகாட்டும் நபர்களின் பெயரிற்கு மாற்றி விடும்படி கோரிக்கை வைத்தனர் ,மறுத்தவர்கள் மிரட்டப்பட்டனர்
vakesan_zps04d82faf.jpg
,
அதேபோலத்தான் சுவிசிலும் அனைவரிடமும் கோரிக்கை வைத்தபோது சுவிஸ் பொறுப்பாளராக இருந்த குலம்  இவர்களது கோரிக்கைக்கு மறுத்ததோடு பலர்  தன்னை நம்பித்தான் கடன் எடுத்து பணம் தந்திருக்கிறார்கள் எனவே வியாபார நிலையங்களால் வரும் வருமானத்தை வைத்து அந்தக்கடன்களை அடைக்கவேண்டும் என்று சொன்னதற்கு. கடன் அடைக்கிற வழி எங்களிற்கு தெரியும் நீ உனது வேலையை பார் இன்றிலிருந்து நீ பொறுப்பாளர் இல்லையென்று விட்டு நெடியவன் குலத்தை தாக்கி அலுவலகத்தை விட்டு துரத்தியும்விட்டிருந்தார்கள், இங்கு குலம் என்பவர் யார் என்றும் சுருக்கமாக சொல்லி விடுகிறேன், சுவிஸ் நாட்டில் புலிகளின் பொறுப்பாளரக இருந்த முரளி  தற்சமயம் கனடாவில் வசிக்கிறார் இவர் நிதி சேகரித்தது சிலரை அச்சுறுத்தியது தொடர்பா சுவிஸ் காவல்த்துறையால் கைதான பின்னர் சுவிஸ் பொறுப்பை ஏற்றவர் குலம்,எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலங்களில் பிரபாகரனை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனது வீட்டில் தங்கவைத்து பராமரித்ததில் இருந்து இவரது இயக்கத்துடனான தொடர்பு தொடங்குகின்றது,பிரபாகரனே குலம் அண்ணை என்று மரியாதையோடு அழைக்கப்பட்டதொரு மனிதர்,
ltteSwisskulam-147x150_zps1beb18ec.jpg
1984 ம் ஆண்டு இலங்கையரசின் அவ்ரோரக விமானத்தை தானே தயாரித்து எடுத்துச்சென்ற நேரக்கணிப்பு குண்டின் முலம் தகர்த்தவர்,அதற்கும் மேலால்  ஆரம்ப கால இயக்க விதிக்கு அமைய இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு மனிதன் , பிரபாகரன் அவர்களே திருமணம் செய்த பின்னர்  பல தடைவைகள் குலத்தை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டும் தமிழீழம் கிடைக்கட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவந்தவர்,புலிகளை திட்டுபவர்கள் கூட குலம் அண்ணையை திட்டுவது கிடையாது அப்படியான ஒருவரை சொத்திற்காக நெடியவனும் வாகீசனும்அடித்து உதைத்திருந்தார்கள்,பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால்  இந்த செய்கைக்காக நெடியவனையும் வாகீசனையும்  வெளிநாட்டில்வைத்தே போட்டுத்தள்ள சொல்லியிருப்பார், 
nediyavan_zps0a7d3761.jpg
இதற்கு அடுத்ததாக யெர்மனியில் அனைத்து மானிலங்களிலும் தங்கள் பெயர்களில் சொத்துக்களை வைத்திருந்த பொறுப்பாளர்கள் அனைவரையும் அதன் விபரங்களோடு தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்த வாகீசன் சந்திக்கும் இடம் திகதி நேரம் அனைத்தையும் அறிவித்து விடுகிறார். அவர்கள் சந்திப்பதாக சொல்லியிருந்த  உணவு விடுதியில் வாகீசன் காத்திருக்கிறார். பெரும்பாலனவர்கள் வந்துசேர்ந்துவிட்டிருந்தார்கள் முக்கியமான ஒருவரைத்தவிர,அவர் யாரெனில் தென்மானிலங்களிற்கு பொறுப்பாக இருந்த ஸ்ருக்காட் நகரை சேர்ந்த சிறிரவி  என்பவரே,  சிறிரவிக்காக காத்திருந்தவேளை சிறிரவி வரவில்லை அவரிற்கு பதிலாக அங்கு வந்தவர்கள் யெர்மனிய காவல்த்துயையினர், வாகீசனையும் அவரோடு நின்றவர்களையும் கைது செய்கிறார்கள், ஒபகௌசன் என்னும் இடத்தில் இயங்கிய வாகீசனின் அலுவலகத்தினுள் புகுந்த யெர்மன் காவத்துறையினர் அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள்.
வாகீசனை ஏற்கனவே யெர்மனிய காவல்த்துறையினர் தங்கள் கண்காணிப்பு வழையத்தினுள் கொண்டுவந்திருந்தாலும் அன்று அனைவரும் முக்கிய ஆவணங்களோடு சந்திப்பதை போட்டுக்கொடுத்ததேடு தன்னுடைய சொத்துக்களை சிறிரவி வாகீசனிடமிருந்து பாதுகாத்துக்கொண்டார்,  ஆனால் வழைமைபோல இலங்கை அரசின் சதி என்று தமிழ் இணையங்கள் எழுதித் தள்ள  இந்த கைதுகளின் பின்னணியில் தானே இருந்ததாக சிறீலங்காவிற்கான தூதர் ஜெகத்டயஸ் அறிவித்ததாகவும் செய்திகள் வெளியானது, தொடர்ந்தும் யெர்மனியில் பலர் கைதாகி விசாரணைகள் நடந்தாலும் இதுவரை புலிகள் அமைப்பில் ஒரு பெரும் பகுதியான தென்மானில பொறுப்பாளரான சிறிரவியை மட்டும் இன்னமும் யெர்மன் காவல்த்துறையினர் விசாரணை செய்யவில்லை.இவரிடமிருந்து தொடர்ந்தும் யெர்மன் காவல்த்துறை தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம், எல்லாவற்றையுமே பணமாக்கத் தெரிந்த அனைத்துலகசெயலகம் வாகீசன் கைதானதும் ,வாகீசனை வெளியே எடுக்கவேண்டும் என்று அதற்கும் மக்களிடம் பணம் சேர்த்தார்கள், நிதி சேர்ப்பது விரும்பியவர்கள் கொடுப்பது அவரவர் விருப்பம் ஆனால் நிதியை சேகரிப்பவர்  சிறிரவியே . அவரே மாட்டியும் விட்டுவிட்டு வெளியே எடுக்க அவரே நிதியும் சேகரிக்கிறார்,சிறி ரவி தான் வாகீசனை போட்டுக்கொடுத்தார் என்று அறிந்த சிலர் சிறிரவியிடம் எதற்காக வாகீசனை போலிசிடம் போட்டுக்குடுத்தாய் எனகேட்டதற்கு அவர் சொன்ன பதில்  நான் போட்டுக் குடுக்கவில்லை நான் யேர்மனியில் வசிப்பதால் யேர்மன் நாட்டு காவல்த்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துளைப்பு கொடுத்தேன்  அது காட்டிக்கொடுப்பு அல்ல என்றாராம். இதே மற்றவங்கள் என்றால் துரோகி உளவாளி கட்டிவைத்து போட்டுத்தள்ளவேண்டும் ,
அதே இவர்களே தங்களுக்குள்ளை காட்டிக்குடுத்தால்  அது காவல்த்துறைக்கு ஒத்துளைப்பாம்,கவுண்டமணி பாணியில்  அடங்கொக்கா மக்கா என்று  சொல்லதோன்றுகிறதா,,ஆனால் வாகீசன் வெளியே வந்தபாடுதான் இல்லை, இதேபோலத்தான் பிரான்சில் பரிதி மற்றும் பலரும் கைது செய்யப்பட்டபோதும் பிரான்சிலும் அவர்களை வெளியே எடுக்கவென நிதி சேகரிக்கப்பட்டது  அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளராக பாரிஸ் ஈழநாடு  பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார் , இந்தக்குழுவை பரிதி கைதின் பின்னர் பிரான்ஸ்  பொறுப்பை எடுத்த மயூரன் குட்டி அல்லது விடுதலை  என்பவரோடு சேர்ந்து அமைத்தவர்களில் நானும் ஒருவன் ,அந்த குழுவை அமைத்ததோடு நான் ஒதுங்கி விட்டிருந்தேன், பிரான்சிலும் நிதி சேகரிக்கப்பட்டது ஆனால்  கைதானவர் எவரது வழக்கிற்கும் அந்த நிதி செலவளிக்கப்படவில்லை .கைதானவர் அவரவர் தங்கள் உறவுகள் நண்பர்களின் உதவிகளுடனேயே வழக்கு செலவுகளை கவனித்திருந்தார்கள்.
இது இப்படியிருக்க யெர்மனியில் பரப்புரைக்கு பொறுப்பாக இருந்தவர் பெயர் அகிலன் என்பவர். இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில் ஒரு பகுதி இவரது கைகளிலும் இருந்தது அதனை அவர் மடகஸ்காரில் முதலீடு செய்திருந்தார் அதேநேரம் அகிலன் சிறுவயதிலேயே யெர்மனிக்கு வந்துசேர்ந்தவர் யெர்மனிய குடியுரிமை பெற்றவர் இவரிற்கு யெர்மன் சட்டதிட்டங்கள் என்றால் என்ன யெர்மனிய காவல்த்துறை எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்திருந்தவர். வாகீசனின் அடிதடி அடாவடி அரசியலால் நிச்சயம் ஒரு நாளைக்கு மாட்டவேண்டி வரும் என்று தெரிந்திருந்தது ஆனால் வாகீசனை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார். அதனால் நிரந்தரமாக குடும்பத்துடன் மடகஸ்காரிற்கு சென்று குடியேறிவிட திட்டமிட்டிருந்தார். ஆனால் யேர்மன் காவல்த்துறை முந்திவிட்டிருந்தது.வாகீசனை கைது செய்துவிட்டார்கள். அதை அறிந்த உடனே அகிலன் யேர்மனிய காவல்த்துறை எல்லாம் மொக்கனுகள் என நினைத்தாரோ என்னவோ அவசரமாக மடகஸ்காரிற்கு தனியா பறந்துவிட்டிருந்தார்.ஆனால் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந் யேர்மன் காவல்த்துறையினர்  அகிலனை மடகஸ்காரிலிருந்துயேர்மனிக்கு  நாடுகடத்தவைத்து யேர்மன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இவையனைத்தும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்தவைதான். அனைத்துலகச் செயலகம் புதிதாக விட்ட புலுடாதான்  மீள இணையும் புலிகள் என்கிறதொரு   காணொளி. 
கைத்தொலைபேசி முலம் எடுக்கப்பட்ட காணொளியில் முதலில் மாவீரர்நாள் உறுதி உரை என எழுத்து போகின்றது. பின்னர்  இருளான  மரங்கள் உள்ள  இடமொன்றில் முகங்கள் மறைக்கப்பட்ட சிலர் கறுப்பு உடையணிந்தபடி நிற்க முன்னால் ஒரு பெண் சிறிய ரோச்லைற் வெளிச்சத்தில் கடதாசியில் எழுதியிருப்பதை படிக்கிறார். தாங்கள் முள்ளிவாய்க்காலில் நின்றே உறுதியெடுப்பதாக தொடங்குகிறார். முள்ளிவாய்கால் பகுதிமுழுக்க முழுக்க இலங்கை ராணுவமே நிற்கிறதென்பது வேறை கதை. அறிக்கையை படித்தவர்   5ம் கட்ட ஈழப்போரை தொடங்கப்போகிறோம் என்கிறார்.ஒருவர் கைகளிலும் ஒரு பொல்லாங்கட்டை கூட இல்லை. சரி அவர்களது உறுதி மொழியில் அடுத்த கட்ட நடவடிக்கை கொள்கை விளக்க உரை தரைவரைப்பற்றிய தகவல்கள்.எதாவது வருமா என நானும் ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் அந்தப் பெண்மணியோ  வினாயகத்தையும்  அவரது சகோதரரையும் திட்டித்தீர்க்கிறார்,இதுதான் அவர்களது மாவீரர் உறுதி உரை. மற்றையவர்களை திட்டித்தீர்ப்பதுதான் அவர்களது 5 ம் கட்டப்போர் என்று அப்பொழுதுதான்  எனக்குப்புரிந்தது.
அறிக்கை படித்து முடிந்ததும் ஒருவர் ஆமிவாறான் ஓடுங்கோ என்பார் . அறிக்கை படித்து முடியும்வரை ஆமிக்காரரை காத்திருக்கச் சொல்லியிருப்பாங்கள் என்று நினைக்கிறேன். பற்றைகள் உள்ள பகுதியால் ஓடுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதாநாயகன் உசிலம்பட்டியில்  கொழுத்தும் வெய்யிலில் கதா நாயகியை கலைக்கத்தொடங்க  உடனேயே சுவிசில் கொட்டும் பனியில் பாடல் தொடங்குவதைப்போல  பற்றைக்குள்ளால் ஓடியவர்கள் திடீரென மணல் நிறைந்த கடற்கரை ஓரமாக இரண்டு கல்லறைகள் போல் மணலால் அமைக்கப்பட்டு  ஒரு தீப்பந்தம் ஏற்றிய இடத்தில் சத்தியப்பிரமாணம் எடுக்கிறார்கள். அத்தோடு அனைத்துலகத்தின் படம்காட்டல் முடிவடைகின்றது.  5ம் கட்ட ஈழப்போர் என்பது அடுத்தவரை திட்டித்தீர்ப்பது என்பதால் இக்கட்டுரையை எழுதத்தொடங்கியதிலிருந்து என்மீதும் 5 கட்ட ஈழப்போர் தொடங்கி விட்டது எனவே இந்தக் கட்டுரையில் வாகீசனின் கைது பற்றி  எழுதவேண்டி வந்ததால் பரிதி இறுதியாக தமிழரசனோடு நடாத்திய பேச்சு வார்த்தை பற்றி எழுதமுடியவில்லை. எனவே அதனை அடுத்த  பதிப்பில் பார்ப்போம்..தொடரும்..............