கிழக்கு மாகாண சபையின் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான விவாதத்தின் 3ம் நாளான இன்று சுகாதார அமைச்சு தொடர்பான வாதப் பிரதி வாதங்கள் மிகவும் காரசாரமாக இடம்பெற்ற வேளையில் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண சபைக்கு தேர்வான 11 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் கட்சியில் அமர்ந்து கொண்டு மாகாணத்தில் என்ன திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதே வேளை வரவு செலவுத்திட்டம் மற்றும் இதர சட்டமூலங்களையும் எதிர்ப்பவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்கள் பாவம் எதிர்க்கட்சி என்பதன் வரைவிலக்கணம் என்ன என்று தெரியாதவர்கள். ஏன் என்றால் எதிர்க்கட்சி என்றால் அரசினால் அமுல்படுத்தப்படுகின்ற எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது இவர்களது தாரகை மந்திரம். இப்படி எதிர்ப்பதுதான் எதிர்க் கட்சியின் வேலை எனக் கருதுகின்றார்கள்.
முதலில் எதிர்க்கட்சியின் பொறுப்பு என்ன? என்பதனை இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு காலங்காலமாக அரசையும் மக்கள் நலன்சார்ந்த அரசின் திட்டங்களையும் எதிர்த்ததன் பயன் என்ன? கிழக்கில் 50ஆயிரம் விதவைகள்தான் மிச்சம். இதனைத்தான் இவர்களால் கொண்டு வர முடிந்தது. ஆதனை விடுத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஏதாவது திட்டங்கள் தொடர்பாக சிந்திக்க முடியுமா? இவர்களால் எதுவுமே முடியாது.
ஆனால் நாங்கள் ஆளுங்கட்சியில் அமர்ந்து கொண்டு மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இவர்கள் அதனை எதிர்த்தாலும் நாங்கள் தொடர்ந்து எங்களது பணிகளை செய்து கொண்டே செல்வோம். இவர்கள் 11 பேர் கிழக்கு மாகாண சபைக்கு தேர்வாகியதாக மமதை கொள்கின்றார்கள். இவர்களால் கிழக்கு மக்களுக்காக ஒரு துரும்பேனும் பெற்றுக் கொடுக்க முடிந்ததா? இவர்கள் 11 பேர் செய்யாததை நான் ஒருவன் தனியாக இருந்து செய்து காட்டுவேன் கடந்த காலங்களில் அதனை நிருபித்திருக்கின்றேன்.
இனி;வருகின்ற காலங்களிலாவது சுயமாக சிந்தித்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையாவது ஆதரிக்க இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சி.சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார்.
இனி;வருகின்ற காலங்களிலாவது சுயமாக சிந்தித்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையாவது ஆதரிக்க இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சி.சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார்.