12/30/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம்; இன்று

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இவ்வாண்டின் இறுதிக் கூட்டம் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வாவிக்கரை வீதி 01, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சயின் தலைமைச் செயலகத்தில் மேற்படி செயற்குழுக் கூட்டம் இன்று (29.12.2012)இடம் பெற்றது. இவ்வாண்டில் கட்சி மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல் மற்றும் கட்சியின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
 
இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாளர்  ஆ.தேவராஜா, உபதலைவர்(ஒருங்கிணைப்பு)நா.திரவியம், உபதலைவர்(நிருவாகம்) க.யோகவேள், உபசெயலாளர் ஜெ.ஜெயராஜ்,அம்பாரை மாவட்ட அமைப்பாளர் சோ.புஸ்பராஜா, ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க. மோகன், மகளிர் அவிருத்தி இணைப்பாளர் திருமதி சந்திரா ஜவனராஜ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.மணிவண்ணன், மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். .
»»  (மேலும்)

| |

இலங்கைக் கலைஞர் ''உபாலி'' செல்வசேகரன் காலமானார்

இலங்கையின் பிரபல கலைஞரான ''உபாலி'' செல்வசேகரன் அவர்கள் கொழும்பில் காலமானார்.
இலங்கையில் திரைவானில் எழுபதுகளில் பிரபலமாகப் பேசப்பட்ட கோமாளிகள் என்னும் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்ப்படத்தில் சிங்கள பாணியில் தமிழ் பேசும் ''உபாலி'' என்ற பாத்திரத்தில் நடித்து, பிரபலமாகி, பலராலும் மெச்சப்பட்டவர் செல்வசேகரன்.
பலதுறைக் கலைஞராகத் திகழ்ந்த செல்வசேகரன் அவர்கள் தனது 64 வது வயதில் காலமானார்.வானொலி, மேடை, தொலைக்காட்சி முதல் திரைப்படம் வரை இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும், இலங்கையின் இரு மொழிகளிலும் முத்திரை பதித்த செல்வசேகரன், தினகரன் நாளிதழின் சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சரசவிய விருது போன்ற பெருமைக்குரிய விருதுகளைப் பெற்றவர் என்று நினைவு கூர்கிறார் அவரது சக கலைஞரும், நெருங்கிய நண்பருமான பிரபல அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீத்.
நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் நடித்த இவர் இலங்கையில் ஏறாத மேடையில்லை என்றும் ஹமீத் கூறுகிறார்.
தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இரு மொழி ரசிகர்களையும் இவர் வெகுவாக கவர்ந்திருந்தார்.
தனது இறுதிக் காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் பல மேடைகளில் ஏறி அனைவருக்கும் இவர் நகைச்சுவை விருந்து வழங்கியிருக்கிறார்.
»»  (மேலும்)

| |

இந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வல்லுறவு

.
சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
அப்படியே ஊடகங்களின் கவனம் கிடைத்தாலும் கூட அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைத்துவிடும் வாய்ப்புகளும் மிகக்குறைவு.மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமது மூன்று பெண் நண்பர்களை பாலியல் தொந்தரவில் இருந்து காக்க முற்பட்ட கீனன் சன்டோல் மற்றும் ரூபென் பெர்னாண்டஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து மும்பையில் பல போராட்டங்கள் நடந்தன. இருந்தும் அவ்வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணை கூட இன்னும் முடியவில்லை.
இன்னும் குறிப்பாக சிற்றூர்களை – கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் நீதி கிடைப்பது என்பது இன்னும் அரிதான விடயமாக இருக்கும்.
பூர்வ பழங்குடிகள் என்று அரசாங்கத்தால் பட்டியல் படுத்தப்பட்டுள்ள இருளர் சமூகத்தைச் சேர்ந்த, கல்வியறிவற்ற கூலித் தொழிலாளியான விஜயா என்ற பெண், தனது 17 ஆவது வயதில்
(1993 ஆம் ஆண்டில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த 6 போலிஸ் காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு 13 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியில் எவரும் தண்டிக்கப்படவில்லை.
பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான விஜாயாவின் வழக்கை நடத்திய மனித உரிமை செயற்பாட்டாளரான பேராசிரியர் கல்யாணி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத் தேவையான பொருளாதார வசதி தம்மிடம் இல்லாததன் காரணமாகவே இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தமுடியவில்லை என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.
»»  (மேலும்)

12/29/2012

| |

உள்ளுராட்சி மன்றங்களை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்தது.- சி.சந்திரகாந்தன்.

உள்ளுராட்சி மன்றங்களை அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களே பலமானதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அதனது முழுமையான பயனையும் மக்களே அனுபவிக்க முடியும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின்(கொக்கட்டிச்சோலை) புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதேச சபையின் தவிசாளர் ரி.பேரின்பராஜா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், 2008ம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டு மாநகர சபை உட்பட 8 தமிழ் உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியது. அதன் பின்னர்தான் மக்களுக்கு தெரியும் உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன? அதன் பயன்பாடு மக்களுக்கான உறவு என்ன? என்பதை எல்லாம் மக்கள் புரிந்து கொண்டார்கள். அதற்கு முன்னர் இதனை ஆட்சி செய்த தமிழ் கட்சி என்று சொல்லப்படுகின்ற கட்சியினரால் அச் சபைகளை சரியாக நிருவகிகக் முடியவும் இல்லை அதனை அவர்கள் சரிவர செயற்படுத்தவும் இல்லை. ஏன் நான் இதனை குறிப்பிடுகின்றேன் என்றால், பெரும்பாலான சபைகள் சாதாரண கட்டிடங்களில்தான் இயங்கிவந்திருக்கின்றன. அலுவலக செயற்பாடுகளை சரிவர அவர்கள் செய்யவில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.
மக்களுக்கான சரியான சேவைகளை வழங்க வேண்டும் என்றால்தானே அவர்கள் அலுவலகக் கட்டிடங்களை புதிதாக அமைத்திருப்பார்கள். அவர்களுக்கு அது எல்லாம் தேவையில்லை. ஏன் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை எடுத்துப் பாருங்கள், ஆலயடிவேம்பு பிரதேச சபையில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்;கடிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று நாவிதன்வெளி பிரதேச சபையில் தற்போது அமளிதுமளி என்ன காரணம் என்றால் பொருத்தமற்ற பதவி நியமனம் என்கின்றார்கள். திருகோணமலை நகராட்சி சபையில் ஊழல் இப்படியே வெருகல் பிரதேச சபையில் சாதாரண குடிநீர் வழங்கக்கூட தவிசாளர் எரிபொருள் செலவு கேட்கின்றாராம். எப்படி நிலைமை என்று பாருங்கள். முழுக்க முழுக்க மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட அரசுமுறைமைதான் உள்ளுராட்சி மன்றங்கள். அதனை ஆ;ட்சி செய்பவர்கள் சரியாக வழிநடாத்தாவிட்டால் அதனை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும். ஏன் எனில் உங்களது வரிப்பணத்திலே அவர்கள்; நிருவாகம் செய்கிறார்கள்.
 
அவர்கள் உங்களுக்கு சிறப்பான சேவையை ஆற்ற வேண்டும். இல்லையாயில் நீங்கள் தடடிக் கேட்க வேண்டும். அதுதான் நான் சொல்கின்றேன் உள்ளுரட்சி மன்றங்களை வலுவுள்ள ஆழுமை மிக்க சிறப்பான சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு அப் பிரதேசத்தைச் சார்ந்த மக்களேயே சார்ந்ததாகும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பிள்ளையான் அரசியலுக்கு புதியவன்தான் ஆனால் மக்களுக்கல்ல!
பழம்பெருங்கட்சி என்று தங்களை பறைசாற்றுகின்றவர்கள் சொல்கின்றார்கள் பிள்ளையானுக்கு என்ன தெரியும் அவர் அரசியலுக்கு குழந்தை என்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன் நான் அரசியலுக்கு புதியவன்தான் ஆனால் மக்களுக்கு அல்ல. அதாவது மக்களுக்குத் தெரியும் பிள்ளையான் என்ன செய்கின்றாhன். அரசியல் எப்படி பேசுகின்றாhன் என்று எனது மக்களுக்குத் தெரியும்.
கடந்த மாகாண சபை அமர்விலே நான் பேசியிருந்தேன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 பேரால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் நான் ஒருவன் தனியே இருந்து கொண்டு கிழக்கு மகாண தமிழ் பேசும் மக்களுக்காக எல்லாமே செய்வேன் என்று அவர்களுக்கு சொல்லி ;வைத்தேன். நான் இப்பவும் சொல்கின்றேன் எனது உயிர் இருக்கும்வரை நான் மக்களுக்காவே சேவை செய்வேன் இவர்களைப் போல் சந்தார்ப்பவாத அரசியல் செய்யமாட்டேன.;
அரசுடன் இணைந்திருந்தாலும் மக்களின் அதிகாரப் பகிர்வு விடத்திலும் அவர்களது உரிமை விடத்திலும் எப்படியான போக்கை நான் கடைப்பிடித்தேன் என்று கடந்த கால மாகாண சபை ஆட்சி சான்று பகரும். ஏன் இதனை நான் சொல்கின்றேன் என்றால் அவர்கள் ஒருவரியில் சொல்வார்கள் பிள்ளையான் அரசாங்கத்து ஆள்தானே! என்பார்கள். அரசுடன் இணைந்திருந்தாலும் மக்கள் நலனே எனது குறிக்கோள். இன்று யார்யாரெல்லாம் கருத்து சொல்கின்றார்கள். கிழக்கில் ஜனநாயகம் இல்லை அபிவிருத்தி இல்லை என்கின்றார்கள்.
நான் கேட்கின்றேன் இப்படிச் சொல்பவர்களுக்கு மட்டக்களப்பில் நடப்பதை பார்க்க கண் இல்லையா? அல்லது மட்டக்களப்பைத் தெரியாதா? என எண்ணத் தோன்றுகிறது. கிழக்கு மக்களுக்கு தெரியும் கிழக்கில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுகக்ப்பட்டுக் கொணடிருக்கின்றன என்று அம் மக்களுக்கத் தெரிந்தால் போதும்; என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
ஜனநாயகம் எங்கிருக்கிறது?
ஜனநாயகம் ஜனநாயம் என்று நிமிடத்திற்கு ஒரு முறை உச்சரிக்கும் எனது அன்பான தமிழ் தேசியக் கூட்டமைப்ப உறுப்பினர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கிழக்கின் ஜனநாயகத்தின் திறவு கோல் ரி.எம்.வி.பி. என்பதனை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நன்றாக தெரியும். இல்லாவிட்டால் பல கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள் எல்லாம் மக்களிடம் வாக்கு கெட்கின்ற நிலைமை கிழக்கில் இருக்கு என்றால் அங்கே எந்தளவுக்கு ஜனநாயகம் இருக்கு என்பதனை அவர்கள் நன்கு புரிந்து கொணடிருப்பார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகம் எங்கே? கடந்த மாகாண சபைத் தோர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். இரா துரைரெட்ணம் பெற்ற வாக்குகள் 29131 ஆகும். அடுத்தபடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பு தமிழ் அரசுக் கட்சியின் இணைத் தலைவருமான துரைராஜசிங்கம்; இவர் பெற்ற மொத்த வாக்குகள்27717ஆகும். திருகோணமலை மாவட்டத்தில் தண்டாயுதபாணி பெற்ற வாக்குகள் வெறும் 20190 ஆகும். ஆனால் இவருக்கு எந்தவொரு அரசியல் அனுபவமும் இல்லை; பின்னணியும் இல்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட்டது. வெறும் 20000 வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கே வழங்ப்பட்டது. அப்ப எங்கையா உங்கட ஜனநாயகம்?
உண்மையில் இதனடிப்படையில் பார்த்தால் 1ஆவது இரா துரைரட்ணத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். சரி அவர் பிற கட்சிக்காரர் என்ற படியால் அவருக்கு காடுக்கவில்லை. ஓரளவு நியாhயம என்றாலும், முழுக்க முழுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூண் என்று சொல்லப்படுகின்ற அனைத்து திறமைகளுமுள்ள துரைராஜசிங்கத்திற்காவது வழங்கி இருக்க வேண்டும். அதனையும் செய்யாமல் வெறும் 20190 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கு கொடுத்தது. நுpயாயமா? அல்லது ஜனநாயகமா? இதைக் கேட்டால் அது கட்சி முடிவாம். ஆப்படி என்றால் அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்க மதிப்பில்லையா? அதாவது மக்களின் வீரப்புக்கு அங்கே இடம் இல்லையா? தங்களது கட்சிக்குள்ளே ஜனநாயகத்தைப் பேணமுடியாதவர்கள் பறிரது ஜனநாயகம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என தாங்களே சிந்தித்தால் போதும். “பிறருக்கு உபதேசம் செய்யும் போது அதனை நீ உன்னிடம் இருந்தே தொடங்கு” எனவும் சந்திரகாந்தன் தனதுரையில் குறிப்பிட்டார்.
 
»»  (மேலும்)

| |

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மாநகர சபை முதல்வரின் செயற்பாடு

நாடு முழுவதும் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியுள்ளது. கொட்டும் மழையிலும் வியாபரம் ஆங்காகங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. வடக்கின் சிறு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரைக்கும் வெளிமாவட்ட அங்காடிகள் சென்றுள்ளனர். இவர்களில் சிங்களவர்களும் அடங்குகின்றனர். அங்காடிகள் தமது பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அங்காடிகளையும் ஆங்காங்கே வெளிமாவட்டதிலிருந்து யாழ் வந்து தற்காலிக கடைகளை அமைத்துள்ள வியாபரிகளையும் தேடி செல்கின்றனர். பொதுமக்களுக்கு எங்கு பொருள் எங்கு மலிந்த விலையில் கிடைக்கின்றதோ அங்கே செல்வார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. 

இவ்விடயம் யாழ் வர்த்தகர்களுக்கு கடும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து சந்தர்ப்பம் பார்த்து விலை ஏற்றி பணம் சம்பாதித்து சுவை கண்டவர்கள். யுத்தம் நடைபெற்றபோது இவர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது. 

இந்நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யாழ் மாநகர சபை யாழ் சந்தையை திறந்த வெளியாக்கியுள்ளது. வெளிமாவட்ட வர்த்தகர்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு ஏற்றவற்றை செய்து கொடுத்துள்ளது. மாநகர சபை முதல்வரின் இச்செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள அதே நேரத்தில் யாழ் வர்த்தகர்களை பெரும் கடுப்புக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயற்குழுக் கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இவ் வருட இறுதி செயற்குழுக் கூட்டம் நாளை (29.12.2012) வாவிக்கரைவீதி 01, மட்டக்களப்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கடந்தகால கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்படும். இதில் தலைவர் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
 
»»  (மேலும்)

12/28/2012

| |

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் துயர் பகிர்வு


1948 இல் இருந்து மிக அண்மைக்காலம் வரை அகில இலங்கைத் தமிழ் பெளத்த காங்கிரசின் தலைவராகவும், அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மாகாசபையின் முன்னணி உறுப்பினராகவும் செயல்பட்ட வைரமுத்து (ஐயாத்துரை) மாஸ்டர் 26-12-2012 நேற்று மாலை மானிப்பாயில் காலமானார். 1918 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி பிறந்த வைரமுத்து மாஸ்டர் அவர்கள் 94 வயது வரை  தனது தேவைகளை தானே மேற்கொண்டு  மிக ஆரோக்கியமாகவே  வாழ்ந்து வந்தார்.
1967 இல் யாழ்மேலாதிக்க சமூகத்தால் உயர் கல்வி மறுக்கப்பட்டு வேலையில்லாத 100தலித் இளைஞர்களை   பெளத்த மத மாற்றத்திற்காக 1967 ஏப்ரல் மாதம் தென்இலங்கைக்கு அழைத்துச் சென்றவர்.
“நான் எனது ‘இனத்துக்கு’ நல்லது செய்ய வேணும் என்ற நல்ல நோக்கத்தோடு பணியாற்றினேன். தீண்டாமை ஒழியவேணும்,எமக்குள் நாம் சரிநிகராக வாழவேணும், நமது மக்களும் உத்தியோகம் பெறவேணும் என்றதே எனது முழுநோக்கமாகவும் இருந்தது. அதற்கு அன்றைய சிங்கள அரசும், பிக்குமாரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தார்கள்” :  – வைரமுத்து-
(“தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்”எனும் யோகரட்ணம் அவர்களின் நூலுக்கான அணிந்துரையில் )
»»  (மேலும்)

12/26/2012

| |

2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட ஒன்பது உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு மற்றும் எருவில்பற்று, மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று மற்றும் போரதீவுப்பற்று ஆகிய உள்ளூராட்சிமன்றங்களுக்கே இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதை அடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட 9 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
இதன்படி, இவ்வருடம் (2012) மார்ச் 17ஆம் திகதியில் இப்பிரதேசங்களுக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், தேர்தல் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேர்தல்களை ஒரு வருடத்துக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த ஒரு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதியுடன் முடிவடைகின்றதை அடுத்து, அத்திகதிக்கு முன்னர் அரசாங்கம் இந்த தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
'இம்முறையும் தேர்தலை பிற்போட வேண்டுமாயின் அதற்கு ஒரேயொரு மார்க்கமே உள்ளது. அதாவது, தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே மீண்டுமொருமுறை இந்த தேர்தலை பிற்போட முடியும்' என்று தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மட்டக்களப்பு உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் போது, அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிட்ட சிவநேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்), 9 உள்ளூராட்சிமன்றங்களில் எட்டு சபைகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

சேலத்தில் பட்டாசுக் கூடத்தில் வெடி விபத்து; எட்டு பேர் பலி

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேச்சேரி அருகே செங்காட்டூர் பிரிவு என்ற இடத்தில், பட்டாசு தயாரிக்கும் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (25.12.12) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் ஏழு பேர் அடங்கலாக எட்டு பேர் உயிரிழந்தனர்.
உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் அந்த ஆலையில், வானவெடிகள் உள்பட திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இன்று, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சாந்தியும் அவர்களது உறவினர்கள் சிலரும், அவர்களது குழந்தைகள் உள்ளிட்டோரும் பட்டாசு உற்பத்திக் கூடத்தில் இருந்தனர். பிற்பகல் 2 மணியளவில், பட்டாசு தயாரிக்கும்போது திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அதில், அங்கிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.காயமடைந்த அனைவரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், சாந்தி உள்பட நான்கு பெண்களும், சிறுவன் ஒருவனும் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் காயடமடைந்த ஏழு பேர் சிகிச்சை பெற்று வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்டீஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் சிவகாசியில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவதென்பது தொடர்கதையாகவே உள்ளது.
»»  (மேலும்)

| |

டெல்லி வன்புணர்வு -‍ இந்தியாவின் கவுரவத்தை காப்பதற்கா தூக்கு?

முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில் இந்தியாவிற்கு என்று இருக்கும் போலியான கவுரவத்தை காப்பதற்காகவா? என்பதே எம் மனதில் திரும்ப, திரும்ப எழும் கேள்வி!
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16,2012) அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் நமக்கெல்லாம் எழுந்திருக்கிறது. இப்பிரச்சனை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் முக்கியப் பிரச்சனையாக எடுத்து விவாதிக்கப்பட்டது. மனித உரிமைகள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்; பெரும்பாலானோர் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். குறிப்பாக பி.ஜே.பி.யின் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசுகையில் 'தலைநகரில் நடக்கும் பாலியல் பலாத்காரங்களை தடுக்காமல் அரசு என்ன செய்கிறது? இது போன்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்' என்று பேசி இருக்கிறார். மேலும் சமாஜ்வாடி உறுப்பினர் ஜெயா பச்சன், 'பாலியல் பலாத்கார குற்றத்தை கொலை குற்றத்துக்கு சமமாகக் கருத வேண்டும். இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கான சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். இந்த சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்' என்று கூறி உள்ளார். மற்ற பல உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசி உள்ளனர். டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட பரிந்துரைத்துள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு இத்தனைப் பேரும் கண்டனங்களை தெரிவிப்பது என்னவோ நியாயம் தான்; கண்டிக்கக் கூடியது தான்! ஆனால்....... இந்தியாவில் யாருக்கெல்லாம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? யாரெல்லாம் அதில் இருந்து தப்பிக்க வைக்கப்பட்டார்கள்? என்றால் நமக்கு தலையே சுத்தும்; இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை மூன்று பேர் தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர். 1995ல் ஏப்ரல் 27, ஆட்டோ ஷங்கர், 2004ல் தனன்ஜய் சாட்டர்ஜி, 2012ல் கசாப். ஆட்டோ சங்கர் 6 பேரை கொலை செய்த குற்றத்திலும், தனன்ஜய் சாட்டர்ஜி, 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கிலும், அஜ்மல் கசாப் 167 பேரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்கள்; அதன் பிறகு டெல்லியில் நடந்த தற்போதைய கற்பழிப்பு சம்பவத்திற்கு நாடு முழுவதில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன; பலர் குற்றவாளிகளை தூக்கில் போட சொல்கிறார்கள்; குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான், ஆகவே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தியாவையே வெட்கி தலைகுனியச் செய்த கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அதிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டவர்களும் ஏராளம். விவசாயப் பெருமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர்களை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்து விட்டு இன்று ஏகபோக சுக வாழ்க்கையை வாழ்பவர்களும் ஏராளம். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநில முதல்வர் சவானின் சொந்த கிராமமான கராட்டில் தலித் பெண் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாண‌மாக்கி அடித்து விரட்டினார்கள். சில நாட்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் எம்.பி. ஒருவர் வீட்டிலே 16 வயது சிறுமியை கற்பழித்து, கொன்றுள்ளனர். 1968 ஆம் ஆண்டு கீழ் வெண்மணியில் 44 விவசாயிகளை துடிக்கத் துடிக்க உயிரோடு ஒரு குடிசையில் வைத்து தீவைத்து கொளுத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான கிராமமான வாச்சாத்தி கிராமத்தில் 1992 சூன் 20ம் தேதி 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாகப் புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். (Wikipedia) ஆனால் வாச்சாத்திக் கொடுமைக்கு தீர்ப்போ 19 ஆண்டுகள் கழித்துதான் வெளி வந்தது. 269 பேர்களுமே குற்றவாளிகள் , இந்த 269 பேர்களில் 54 பேர்கள் இந்தப் பத்தொன்பது ஆண்டு இடைவெளியில் இறந்து போயுள்ளனர். இறந்து போய்த் தப்பித்துக் கொண்டவர்களில் ஒரு ஐ.எஃப்.எஸ் அதிகாரியும் அடக்கம். மீதமுள்ள 215 பேர்களையும் குற்றவாளிகள் என உறுதி செய்து, ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை வழங்கி உள்ளது நீதி மன்றம். தண்டனை பெற்றவர்களை விட தப்பித்தவர்களே அதிகம். கடந்த ஆண்டு 2011, நவம்பர் 22ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா, மாதேஸ்வரி ஆகிய நான்கு பெண்களை காவல்துறையினர் விசாரணைக்கு என்று கூறி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
இந்தியாவில் 2009 ஆம் ஆண்டைய புள்ளி விவரப்படி 2007யில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3010, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2106, உத்தரப்பிரதேசத்தில் 1648, பீகாரில் 1555, டெல்லியில் 598, அஸ்ஸாம் தவிர வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 1555, நாகாலாந்தில் 13, மணிப்பூரில் 20, சிக்கிமில் 24, அருணாச்சலப்பிரதேசத்தில் 48, மேகாலயாவில் 82, தென் மாநிலங்களைப் பொருத்தமட்டில் ஆந்திர மாநிலத்தில் அதிகபட்சமாக 1070, தமிழகத்தில் 523 வழக்குகளும், கேரளாவில் 512 வழக்குகளும், கர்நாடகத்தில் 436 கற்பழிப்புகளும் நடந்துள்ளன. இவை வழக்கு பதிவு செய்யப்பட்டவை மட்டும்தான். வழக்குப் பதிவு செய்யப்படாதவை எத்தனையோ? அதிலும் தண்டனை வழங்கப்பட்டது எத்தனைப் பேருக்குத் தெரியுமா? 2007யில் மொத்தம் 20 ஆயிரத்து 737 வழக்குகள் பதிவானதில் 25 ஆயிரத்து 363 பேர் கைது செய்யப்பட்டு, வெறும் 5 ஆயிரத்து 22 பேருக்கு மட்டும் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டைப் பொருத்தவரை மொத்தம் 19 ஆயிரத்து 348 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 23 ஆயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டு,வெறும் 5 ஆயிரத்து 310 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. (தகவல் : நக்கீரன் : ஜூலை, 29, 2009).
அடுத்தபடியாக கொலைக் குற்றங்கள் என்று எடுத்துக் கொண்டால் அயோத்தி சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். குஜராத்தில் வாழும் இசுலாமியர்களை குறிவைத்து அவர்களைத் திட்டமிட்டு பழி வாங்குவதற்காகவே இந்த ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் 1,200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 600 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், 400 குழந்தைகள் காணவில்லை, 500க்கும் மேற்ப்பட்ட சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய நரேந்திர மோடி இன்று வரை தண்டிக்கப்படவில்லை, மாறாக மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் அஜ்மல் கசாப்புக்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற கடந்த கால சம்பவங்களைப் பார்க்கும் போது இந்தியாவின் தற்பெருமையைக் காத்துக்கொள்ளவே கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரிதும் அறியப்படாத ஒரு குக்கிராமத்திலோ, அல்லது உலகின் பார்வைக்குப் புலப்படாத இடத்தில் எவ்வளவு பெரிய மனித உரிமைகள் மீறல் நடந்தாலும் அல்லது மனிதன் வாயில் மனிதனே மலத்தைத் திணித்து கொடுமை நடந்ததாலும், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானாலும் எந்த மனித நேயவாதியும் வாய் திறப்பதில்லை என்பது தான் வேதனையின் உச்சம். இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த‌ வேளையில்கூட இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் யாராலும் அறியப்படாத மலைவாழ் கிராமத்தில் ஏதோ ஒரு காம மிருகத்தால் யாரோ ஒரு இளம்பெண் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம்; நரிக்குறவர் சமூகப் பெண்களை சர்வசாதாரணமாக பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள். இதுவரை ஒரு வழக்காவது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக நான் அறிந்ததில்லை. அவர்களை காவல் நிலையத்துக்குள்ளே அனுமதிப்பதில்லையே பிறகு எப்படி புகார் கொடுப்பார்கள், வழக்கு பதிவார்கள்? நரிக்குறவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களுக்காக உங்கள் மனித நேயம் பொங்கி புரையோடாதா? டெல்லியில் நடந்தால் அது கொலை, அது மனித உரிமை மீறல், அதுவே இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் குக்கிராமத்தில் நடந்தால் நியாயமா? தமிழக சேரிகளில் காவல் துரையின் அட்டகாசங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை; அத்துமீறி உள்ளே நுழைந்து சேரிப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை; தலித் இயக்கங்கள் போராடி, வழக்குப் பதிவு செய்யத் தூண்டினால் சாதாரண வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களிலே பிணையில் வெளி வந்துவிடுகிறார்கள்.
டெல்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவன் மன்றத்தில் என்னை தூக்கில் போடுங்கள் என்று கூறி உள்ளான்; பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள் இச்சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து குற்றவாளிகளை தூக்கில் இட வலியுறுத்தும் நிலையில், பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்களின் கருத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
"டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். ஆனால் அதுமட்டுமே நாட்டின் ஒரே பிரச்சனையைப்போல் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் விதர்பா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மட்டும் 2,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை சராசரியாகப் பார்த்தால் ஒரு நாளைக்கு 47 விவசாயிகள் ஆகும். இந்தக்கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விவசாயிகள் தற்கொலையில் இது உலக சாதனை ஆகும். இதற்காக யாராவது வெடித்துக் கிளம்பிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா? கண்ணீர் விட்டிருக்கிறார்களா? இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 48 சதவீதம். இது ஆப்பிரிக்கவின் மிகவும் பின்தங்கிய நாடுகளான எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை விட மிக அதிகம். அங்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் 33 சதவீதம் தான். நம் நாட்டில் இதற்காகக் குரல் கொடுப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. மாபெரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஏழை மக்களுக்குப் போதிய மருத்துவ வசதியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு யாரும் குரல் எழுப்புவதில்லை.
இந்தியாவில் கல்வி, கசாப்புக்கடையைப் போல் உள்ளது. அரசின் பெரும்பாலான பணம் ஐஐடி-களுக்கும், ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மட்டுமே செலவிடப்படுகின்றது. அறிவுக்கு அடித்தளமிடும் தொடக்கப்பள்ளிகளுக்கு குறிப்பாக கிராமப்புறப் பள்ளிகளுக்கு இந்தப் பணம் செலவிடப்படுவதே இல்லை. விலைவாசியின் ராக்கெட் வேக உயர்வு. இன்னும் மிகப்பெரிய சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. இவைகளைப் பற்றிப் பேச, கேள்வியெழுப்ப, போராட, கண்ணீர் விட மக்களோ, ஊடகங்களோ ஏன் பாராளுமன்றமோ கூட தயாராக இல்லை நடந்த கற்பழிப்பு சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் இந்த டெல்லி சம்பவம் தான் நாட்டின் ஒரே பிரச்சனை என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்காதீர்கள். மேலும் இந்தக் குற்றத்திற்கு இந்திய த‌ண்டனை‌‌ச் சட்டம் 376 இன் படி அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தக் குற்றத்திற்கு சட்டத்தில் இல்லாத மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூச்சலிடுவது எதற்காக என்று புரியவில்லை" என கட்ஜூ கருத்துத் தெரிவுத்துள்ளார்.
மரண தண்டனையே கூடாது என்பது தான் நம் நோக்கம், முழக்கம் எல்லாமே. ஆனால் மரண தண்டனை என்ற பேரில் மனிதநேயம் சாகடிக்க‌ப்பட்டு, காவி வெறி கொண்ட இந்தியாவின் போலி கவுரவம் தான் நிலை நாட்டப்படுகிறது என்பதே கசப்பான, பொய்யின் கலப்பே இல்லாத உண்மை. டெல்லியில் நடந்த கொடூர செயலுக்கு கடுமையான தண்டனை வழங்குவதோடு நின்றுவிடாமல், மேலும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க குற்றங்கள் செய்யத்தூண்டும் காரணிகள் எவை என்பதை அறிந்து அரசு அதை களைய முன்வரவேண்டும். மேலும் இந்த சம்பவத்திற்காக அரசுக்கும் நீதித்துறைக்கும் காந்தியடிகள் பொன்மொழி ஒன்றை நினைவுப் படுத்துகிறேன், கண்ணுக்குக் கண் என்றால் கடைசியில் நமக்கு எஞ்சுவது குருடர்களின் உலகமாகத்தான் இருக்கும்.
- அங்கனூர் தமிழன் வேலு ****நன்றி கீற்று 
»»  (மேலும்)

| |

கஷ்ட பிரதேசங்களில் பணியாற்ற மறுப்பு: சுமார் 400 தொழில்நுட்ப பட்டதாரிகளின் நியமனங்கள் ரத்து காத்திருப்புப் பட்டியலில் இருந்து வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்ற மறுப்பு தெரிவித்த சுமார் 400 தொழில்நுட்ப பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டதாரிகளின் நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவர்களுடைய வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் காத்திருப்பு பட்டியலில் உள்ள வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டபோது நியமனக் கடிதங்களில் அவர்கள் கடமையா ற்றப்பட வேண்டிய இடங்கள் குறிப்பிட்டே வழங்கப்பட்டிருந்ததுடன் அப்பிரதேசத்தில் கடமையாற்ற தவறுபவர்களது நியமனங்கள் ரத்துச் செய்யப்படுமெனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தெஹியத்தகண்டிய, திம்புலாகல உள்ளிட்ட கஷ்ட பிரதேசங்களில் கடமையாற்ற மறுப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலாக காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.
ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மாணவர்களுக்கு சிறப்பான கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே தொழில்நுட்ப பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டதாரிகள் 936 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 400 பேரே தமது நியமனங்களை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் பின்தங்கிய கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல்கள் எழுந்திருப்பதாகவும் இருப்பினும் காத்திருப்பு பட்டியலிலுள்ள பட்டதாரிகளை மேற்படி பாடசாலைகளுக்கு நியமனம் செய்யலாமென தான் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவ§ளை, ஆயிரம், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய் வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சுமார் 400 வரையிலான விண்ணப்பங்களே எமக்கு கிடைத்துள்ளன.
இலங்கையில் போதியளவு ஆங்கிலப் பட்டதாரிகள் இல்லாமையே இதற்கு காரணம். எனவே ஆங்கிலத்தில் டிப்ளோமா பயின்றவர்களை இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்வது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் ஆங்கில மொழியில் தமது பட்டப் படிப்பை தொடர்ந்தவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

| |

வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு 20,000 ரூபா நஷ்டஈடு

கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு, உடனடியாக 20,000 ரூபா நஷ்ட ஈடு வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்த கலந்துரையாடலொன்று அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலைமையில் ஏறாவூரிலுள்ள விவசாய அமைச்சரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை (25.12.2012)  நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தகவலை அமைச்சர் கூறினார்.
மேற்படி கலந்துரையாடலில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் ஏறாவூர் பிரதேச அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு அமைச்சர் ஹாபிஸ் நஸீர் மேலும் தெரிவிக்கையில்
கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை மாலை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் தலைமையில் திருகோணமலையில் கூடியது. இதன்போது கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு, உடனடியாக 20,000 ரூபா நஷ்ட ஈடு வழங்குவதற்கான மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சரவைக்கு பத்திரமொன்றை நான் தாக்கல் செய்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முதலமைச்சர் நிதியிதிலிருந்து, நிதி வழங்கப்பட்டமையை மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தில் சுட்டிக் காட்டியிருந்தேன்.
வெள்ளத்தால் 20 ஆயிரம் ரூபாவுக்குக் குறைவான பாதிப்புகளை எதிர்கொண்டோருக்கு அவர்களின் வீடுகளை தற்காலிகமாக புனர்நிர்மாணம் செய்யும் வகையில் இந்த உதவித் தொகையை வழங்குவதெனவும், மேலதிக பாதிப்புக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் நிதி உதவிகளை பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சுகாதாரத்துறையில் பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடுகள் வழங்கப்படும் என்றார்.
»»  (மேலும்)

| |

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொப்பிகலை மக்களுக்கு படையினர் உதவி

சீரற்ற காலநிலையினால்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுப்போயிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான தொப்பிகலை மற்றும் வடமுனைப் பகுதி மக்களுக்கு படையினர் தொடர்ச்சியாக உதவி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக நேற்று (25.12.2012) பொது மக்களுக்கு சமைத்த உணவுப் பொதியும், உலர் உணவும், இடம் பெயர் வைத்திய முகாமும் நடத்தப்பட்டது. இந்த ஏற்பாடுகளை தொப்பிகலை இராணுவப் பகுதியின் கட்டளை அதிகாரி கேணல் எஸ்.சேனவடு மேற்கொண்டிருந்தார்.
»»  (மேலும்)

| |

சுனாமி நினைவு தினத்தில் முன்னாள் முதல்வரின் இரஙகல் செய்தி

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் கடற்பரப்பில் ஏற்பட்ட பாரிய புவிநடுக்கம் சுனாமி அனர்த்தத்தை தோற்றுவித்திருந்தது. இச்சுனாமி அனர்த்தத்தில் இங்கை உட்பட பல நாடுகள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்திருந்தன. உயிரிழப்புகள், சொத்து இழப்புக்கள், அவயங்களை இழத்தல் என பல பாதிப்புக்களை எமது இலங்கை நாடும் சந்தித்திருந்தது.
இயற்கையாக ஏற்படுகின்ற அனர்த்தம் என்பது எவராலும் முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியாது என்பதுடன், அதனுடைய பாதிப்புக்களினால் எதிர்பார்க்காத மிகவும்மோசமான நிலைகளும் ஏற்படுவதுண்டு. அந்தவகையில்  சுனாமிப் பேரலையின் கோரப் பிடியில் சிக்குண்டு உரிழந்த, உறுப்புக்களை இழந்த, சொத்துக்களை இழந்த உறவுகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சுனாமி ஏற்பட்டு எட்டாவது வருட நினைவு நாளான இன்று எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.
சிவநேசதுரை – சந்திரகாந்தன்
(முன்னாள் கிழக்கு மாகாண சபை முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகரும்)

 
»»  (மேலும்)

12/25/2012

| |

விளாடிமிர் புடின் இந்தியா விஜயம்: ஆயுத ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் இராணுவ மற்றும் ஆயுத பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் குறித்த சில முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகிப்போரில் ரஷ்யாவானது மிக முக்கியமான இடத்தில் உள்ளது. இதில் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வியாபாரம் இவ்விரு நாடுகளுக்குமிடையில் இருந்து வந்துள்ள நிலையில் இந்த வியாபாரம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த எண்ணியுள்ளதாக கூறியுள்ளார்.
எனினும், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருத்தி ஓடும் பஸ்ஸில் வைத்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தலை நகர் டெல்லியில் நடத்தப்படும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக இந்திய பிரதமர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. எனினும் திட்டமிட்டபடி இருதலைவர்களது சந்திப்பும் நிகழும் என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து வெளியாகும். 'இந்து' செய்தித்தாள் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் 2000 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தந்திரோபாய பங்குதாரர் பிரகடனம் இரு நாடுகளுக்கு மிடையில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என புடின் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு உயர்ந்த நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, இந்தியாவின் ஆயுத தளபாட கொள்வன வில் 70% ரஷ்யாவிடம் இருந்து வரும் நிலையில் இந்தியா அண்மையில் ஆயுத கொள்வனவு தொடர்பில் அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளது.
இதனால் ரஷ்யாவின் ஆயுத வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்திய விஜயம் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது
»»  (மேலும்)

| |

தமிழர்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனையக் கூடாது: சந்திரகாந்தன்

'ஆயிரம் பாடசாலைகளைப் பற்றிய விளக்கம் பெற்றோருக்கு எட்ட வேண்டும். எல்லா வசதிகளையும் கொண்ட பாடசாலையாக கிராமங்களில் இது அமையவிருக்கின்றது. முன்னர் சிறந்த கல்வியைத் தேடி நகரப்புறங்களுக்குப் போக வேண்டிய சூழல் இருந்தது.இந்தத் திட்டங்களை உரிய முறையில் அமுல் படுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கினால் அதன் மூலம் மக்கள் பாடசாலைக் கல்வியிலே நம்பிக்கை வைப்பார்கள். அதன் பிரதிபலிப்பாக எல்லா சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய ஒரு சமுதாயம் உருவாகும். அடிப்படைக் கட்டுமானங்கள் இருந்து விட்டால் மாத்திரம் சீரான கல்வியைக் கொண்டு விட்டது மாதிரி இருந்து விடக் கூடாது.' என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் விஷேட ஆலோசகரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான சிவனேசதுரைதெரிவித்தார். 
 ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் ஆரம்பப் பாடசாலைக்கான அடிக்கல்லை  ஞாயிற்றுக்கிழமை பகல் நாட்டி வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் என்று எல்லோருடைய அர்ப்பணிப்பும் தேவை. இப்பொழுது கல்வி ஒரு மாயை போல மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது. 21 ஆம் திகதி உலகம் அழிந்து விடும் என்றார்கள். இதனைச் சிலர் நம்பி அஞ்சிப்பயந்தும் இருந்தார்கள்.
ஆனால், அதே தினத்தன்று பிள்ளைகள் சாவகாசமாக பிரத்தியேக வகுப்புக்களுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். உலக சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தன்னம்பிக்கையை பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு மேலதிகமான சுமையைக் கொடுக்காத வகையில் கல்வியிலே உயர்ச்சி வரவேண்டும்.
ஜனாதிபதியின் நோக்கத்திற்கமைய தொடர்ந்தும் இந்தப் பகுதியிலே எல்லாவகையான அபிவிருத்திப்பணிகளுக்கு நாம் உதவுவோம்.
அரசியல் ரீதியாக எங்களுடைய பகுதிகளில் ஒரு பாரிய பிரச்சினை இருந்து வருகின்றது. தான் மூன்று மில்லியன் ரூபாய் பணத்தை நிவாரண விநியோகத்திற்காக கச்சேரிக்குப் பெற்றுக் கொடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பி பொன் செல்வராசா சொல்லியிருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் காணி விசயங்களிலே அக்கறை காட்டுவதில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார். நாங்கள் கடந்த காலங்களிலும் எதிரிடையாகப் பேசிப் பேசித்தான் எல்லாவற்றையும் இழந்திருக்கின்றோம்.
எங்களுக்கும் மண் பற்று சமூகப் பற்று என்று தெளிவான சிந்தனைகள் உண்டு. ஆனால் எங்கள் மீது குறை கண்டு பிடிக்கும் எண்ணம் மாத்திரம்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உண்டு. தமிழ் சமூகம் இந்தளவு பின்னடைந்து இழப்புக்களைச் சந்தித்தமைக்கு வளர்ச்சியடையாத அரசியல் போராட்டங்களே காரணம். பயங்கரவாதம் காரணமாக நாம் அதிகமதிகம் இழந்து விட்டோம்.
இந்த நாட்டின் தேசிய வருமானத்திலே நாங்களும் எங்களுக்கு உரித்தான போதிய நிதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறான பெருந்தொகை நிதியை அரசிடமிருந்துதான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனைக் கொண்டு அபிவிருத்திகளையும் முதலீடுகளையும் செய்கின்ற போதுதான் எமது மக்களின் சமூக பொருளாதார கல்வி கலாசார வாழ்வியல் அம்சங்கள் மேம்பாடடையும்.
இதையெல்லாம் செய்யாமல் வெறுமனே ஒரு தொலைபேசி அழைப்பில் பதிலளிப்பதால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை முடிந்ததென்று அர்த்தமாகாது. நான் படையினருக்குக் காணிகளைக் கொடுத்தேனாம் என்று இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறித்திரிகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே சிங்கள மக்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்கும் சகல உரிமைகளும் உண்டு என்பது இங்குள்ள படித்த சமூகத்திற்குத் தெரியும். மங்கள கம என்பது எங்களது மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளடங்கும் சிங்கள மக்கள் வாழ்கின்ற ஒரு கிராமம்.
அது உன்னிச்சைக் குளத்திற்குப் பின்னாலே வருகின்ற ஒரு பகுதி. அந்த மக்களை நாங்கள் விரட்ட முடியாது. ஆனால் தெஹியத்த கண்டிப் பக்கமிருந்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அத்துமீறும் மக்களை வெளியேற்றுவதற்காக நாங்கள் குரல் கொடுத்திருந்தோம்.
இந்தப் புவியியல் அறிவு தெரியாமல் எங்களை விமர்சிக்கும் அறியாமையை நாங்கள் கண்டு கொள்ளத் தேவை இல்லை. மக்களாகிய நீங்கள் ஒன்றை உறுதியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்னமும் போராட்டம் வீர வரலாறு என்று கூறி தமிழ் உணர்வைக் கொண்டு அப்பாவித் தமிழ் மக்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனையக் கூடாது.
நமக்குக் கிடைக்கும் வாக்குகளுக்கூடாக மக்கள் நன்மையடையும் வழிவகைகளை நாம் காட்ட வேண்டும். தமிழ் மக்கள் அரசியல் அறிவில் தெளிவு பெற்றால் மாத்திரம்தான் தமிழ் சமூகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இப்பொழுதிருக்கின்ற சந்தோசத்தை இந்த பாடசாலையிலே கல்வி கற்கப் போகின்ற இளஞ் சிறார்களுக்கும் தக்க வைத்து அதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதனால் தொடர்ந்தும் ஆக்க பூர்வமான அறிவுபூர்வமான விடயங்களை முன்னெடுப்பதுதான் பொருத்தமானது' என்றார்.
»»  (மேலும்)

12/24/2012

| |

‘புத்தனின் பெயரால்’: வாசிப்பு மனநிலை விவாதம் -4

நன்றி 
http://www.thuuu.net














தில்லை நடேசன் அவர்கள்  நாடக, கூத்து போன்ற கலை வடிவங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர், கட்டுரைகள், கதைகள் போன்ற இலக்கியத்துறைகளிலும் தனது பதிவுகளை செய்து வருபவர். அவரது கூத்து நாடக மரபு பற்றிய ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பொன்றும் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது.‘புத்தனின் பெயரால்’எனும் நூல்பற்றிய தனது அனுபவத்தை கூறுகின்றார்.
தில்லை நடேசன்: இது ஒரு மேடைப்பேச்சாகவோ அல்லது ஒரு கருத்தரங்காகவோ இல்லாமல் ஒரு கலந்துரையாடலுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இதுபற்றி பேச வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நாவல்,சிறுகதை திரைப்படம் போன்றவற்றை விமர்சனம் செய்வது ஒருவகையாக இருக்கும். இந்த நூலானது திரைப்படங்களை ஒரு தத்துவார்த்த அரசியல் கோட்பாட்டுப் பின்புலத்தில் பார்த்த அனுபவத்தினூடாக எழுதப்பட்ட நூல் எனத்தெரிகின்றது. இவ்வாறான நூலை விமர்சிப்பதென்பது ஒரு வகைஅனுபவமே. இந்த நூலின்  முன்னுரையில் இந்த நூலை எழுதவேண்டும் என்பதற்கான உந்துதலுக்குரிய சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்கையில் நடந்த விடுதலைப்போராட்டம், அல்லது விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் திரைப்படம் எனும் ஊடகத்தின் ஊடாக அதை எப்படி ஒரு சாட்சியமாக வைக்கலாம் என்பதற்கான நீண்ட தேடல் இந்த நூல் ஆசிரியரிடம் இருக்கின்றது. இவ்வாறான தேடலை நாம் இலக்கியத்தில் அடங்குகின்ற சிறுகதை, நாவல், நாடகம், போன்ற துறைகள் ஊடாகவும் அணுகலாம்.  இந்தக் காலகட்டங்களிலே நிறைய சிறுகதைகள் வந்திருக்கின்றது. சில நாவல்கள் வந்திருக்கின்றன. இது குறித்த நாடகங்களும் வெளிவந்திருக்கின்றது. அதைப்போன்று திரைப்படங்களும் வந்திருக்கின்றது. திரைப்படம் என்பது மற்றைய எல்லா கலை வடிவங்களையும் விட தனித்துவமானது. நாடகம், கூத்து போன்ற கலைவடிவங்களில் பரீட்சயம் உள்ளவன் என்ற வகையில் திரைப்படம் என்பது அதனது ஆளுமை விரிவாக்கம் போன்றவற்றில் ஒரு தனித்துவமான கலைவடிவமே. பொதுவாகவே தமிழ் சினிமா என்று பார்த்தால் அநேகமாக ஜனரஞ்சக சினிமாவாகவே இருக்கின்றது. இந்த நூலாசிரியரின் கவனமும் மையமும் யதார்த்த சினிமா குறித்தே கவனம் கொள்வதாக இருக்கின்றது. இவ்வாறான சினிமாக்கள் ஐரோப்பா,அமெரிக்கா,ஆசியா போன்ற உலகளாவிய ரீதியில் எவ்வாறு அமைந்திருக்கின்றது போன்ற தகவல்களை மிக விரிவாக இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.
இந்த நூல் எனது கையில் கிடைத்ததும் நான் பார்த்த சில தமிழ் படங்களை திரும்பவும் பார்த்தேன் எனக்கு ஒரளவு சிங்களம் புரியும் என்ற வகையில் இந்த நூலில் பேசப்பட்ட சிங்கள சினிமாக்களையும் தேடிப்பார்த்தேன். இதில் அடங்கியுள்ள அனைத்துப்படங்களையும் நான் பார்க்கவில்லை. பார்த்த படங்களின் அடிப்படையில் வைத்துத்தான் பேசுகின்றேன். முக்கியமானது வந்து ஈழத்து தமிழ்தேசிய சினிமா என்ற கருத்தாக்கம் பற்றியது. ஈழத்து தமிழ் தேசிய இலக்கியம் என்ற கருத்தாக்கம் 1956களில் பேசப்பட்டடு வந்ததை நாம் அறிவோம். இந்தக் கருத்தாக்கம் வந்து கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. அதேபோன்று சிங்கள தேசியத்திற்கான  நாடக வடிவத்திற்கு எதிர்வீர சரச்சந்திர என்பவரை குறிப்பிடலாம். அவர் வந்து மனமே, சிங்கபாகு போன்ற நாடகங்களை அந்த கருத்தாடலில் முன்வைத்தவர்.  அவர் தனது நாடகத்திற்கான உத்திமுறைகளை பாரம்பரிய கலைவடிவங்களான நாடகம், கூத்து போன்ற கலைகளிலிருந்தே பெறுகின்றார். அது குறித்து அவர் பேசுகின்றபோது எனது இந்த நாடக கூத்து உத்திமுறைகளுக்கு தமிழர்களின் வடமோடி கூத்து நாடகமும் பின்புலமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் பிற்பாடுதான் எமது தமிழ் பேரறிஞர்களுக்கு உறைத்து; தமிழர்களுக்கான தேசியநாடக வடிவம் தேவை என்று உணரப்பட்டது. இதில் வந்து சு.வித்தியானந்தன்,தாசியஸ் போன்றவர்கள் கூத்தின் உத்திமுறைகளைக் கொண்டு புதியவகை நாடக முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக தமிழர்களுக்கான தேசிய நாடகம் ஒன்று உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதேபோன்று ஈழத் தமிழர்களுக்கான சிறுகதைகளும், நாவல்களும் இருக்கின்றது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கான சினிமா இருக்கா  என்று கேட்டால் அது கேள்வியோடு அடங்கிப் போவதாகவே இருக்கின்றது.
இருந்தாலும் அப்படி ஒரு முயற்சி இருந்திருக்கின்றது. அதை எப்படி நகர்த்த வேண்டும் என்பது குறித்த அபிப்பிராயத்தை இந்த ‘புத்தனின் பெயரால்’எனும் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். சிங்கள சினிமா குறித்து இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றபோது சிங்கள சினிமாவும் ஆரம்பத்தில் இந்தியா சினிமாவின் பாதிப்பாகவே இருந்து வந்தது. 1956 க்கு பிற்பாடு குறிப்பாக ஜேம் பீரீஸ் அவர்களின் வருகைக்குப் பிற்பாடே சிங்களத்திற்கான தனித்துவமான யதார்த்த சினிமாவின் வருகை நிகழ்ந்துள்ளது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஆதரவாக இருந்தது என்பதும் ஓர் உண்மை. இதனால் தான் சிங்கள சினிமா வளர்ச்சி பெற்றது இவ்வாறான அரச ஆதரவு இல்லாததால்தான் தமிழர்களின் தேசிய சினிமா வளர்ச்சி பெறவில்லை என்று கூறுகின்ற விமர்சகர்களும் இருக்கின்றார்கள். இந்திய தமிழ் சினிமாவின் தரம் குறித்தும் இதிலே பதிவு செய்திருக்கின்றார். அவை வெறும் மிகையதார்த்தமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மலயாள,வங்காள திரப்படங்கள் அதிகளவு  யதார்த்த திரைப்படங்களாக இருந்தபோதும் தமிழ் சினிமாவில் அதன் வளர்ச்சியின்மை பற்றியும் இந்நூல் பேசுகின்றது.
ஈழத்து தமிழ் சினிமா என்று வருகின்றபோது ஆரம்பமாக ‘பொன்மணி’’வாடைக்காற்று’’குத்துவிளக்கு’போன்றவை ஒரு வகையாகவும். பின்பு ‘நான் உங்கள் தோழன்’ போன்ற எம்.ஜி.ஆர். பாணியில் அமைந்த திரைப்படங்களையும் கணலாம். பின்பு பேராட்ட காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு நிதர்சனம் எனும் நிறுவனத்தின் ஊடாக பல குறும்படங்களையும், சில முழுநீளதிரைப்படங்களையும் தாயாரித்து வந்துள்ளது. அதேபோன்று புலம் பெயர்ந்த இடங்களிலும் இதே நிலைமைதான். புலம்பெயர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், போன்று புலம்பெயர் சினிமாவும் உருவாகி வந்திருக்கின்றது.
இந்த நூலாசிரியர் குறிப்பிடுகின்ற சிங்கள சினிமாக்கள் வந்து மிக முக்கியமான சினிமாக்கள். உண்மையில் சிங்கள சினிமாக்களும் 95 வீதமானவை கமார்சியல் சினிமாதான். அண்மையில் எதுவரையில் வந்த கட்டுரை ஒன்றை அதற்கு ஆதாரமாக நீங்கள் பார்க்கலாம். அங்கு விதிவிலக்காக சில யதார்த்த படங்களுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவே மிக ஆரோக்கியமான விடயம்தான். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில இயக்குனர்கள் உருவாகியிருக்கின்றார்கள்.  இவ்வாறானவர்களின் படைப்புக்கள் வந்து உண்மையிலேயே வீரியமானவைகளாக உள்ளது. இவ்வாறான படைப்புக்கள் தமிழில் வராததற்கான காரணங்கள் என்ன, அதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நடந்திருக்கின்றதே ஒழிய அவை ஏன் தொடர முடியாது போனது. இவ்வளவு சனத்தொகை கொண்ட தமிழகத்தில் ஏன் அது நடைபெறவில்லை என்ற கேள்விகளை இந்நூலாசிரியர் முன்வைத்து செல்கின்றார். அதற்கான காரணங்களையும் விவாதித்துக்கொண்டு செல்கின்றார் என்பதும் முக்கியமான விசயம்.
ஒரு சமூகவியல் நோக்கில் இந்த சினிமாக்கள் குறித்து இரண்டு விதமான பார்வையில் நாம் பார்க்க வேண்டியுள்ளது. அதிகமான மக்கள்தான்  ஜனரஞ்சகமான  சினிமாவில்  நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களால் யதார்த்த பூர்வமான சினமாவுடன் பரீட்சயம் கொள்ள முடியாதிருப்பதற்கான காரணம் என்ன. நாளாந்தம்  துன்பங்களையும் கஸ்டங்களையும் அனுபவித்துவரும் மக்கள் யதார்த்த பூர்வமான சினிமாக்களை பார்க்க அஞ்சுகின்றார்களா? இந்த மக்களை கவனத்தில் கொள்ளாது யதார்த்த பூர்வமான சினிமாக்கள் பற்றி பேசுவது சரியா போன்ற இரண்டு வித சமூகவியல் பார்வையிலும் நாம் நோக்க வேண்டியுள்ளது. யதார்த்த பூர்வமான, கலாபூர்வமான சினிமாக்கள் என்பது மிக அவசியமானது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எமது நாட்டில் இன ஒடுக்குமுறை ஒன்று நிகழ்ந்து வருகின்றது, சரிபிழை என்பதற்கு அப்பால் அதற்கு எதிரான ஒரு போராட்டமும் நிகழ்ந்துள்ளது. இந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கான நியாயமான காரணங்களும் இருக்கின்றது. அதற்காக போராடியவர்களின் வராலாறுகளும் இருக்கின்றது. அதேநேரம் எதிர் தரப்பான அரச இராணுவம் என்று பார்க்கின்றபோது சிங்கள மக்கள் மத்தியிலே உள்ள பொருளாதார நெருக்கடிகள், அவர்கள் இராணுவத்தில் இணைவதற்கான அடிப்படைக் காரணங்கள் பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாறுகின்ற சமூக பொருளாதார சூழல்களையெல்லாம் இந்த சிங்கள இயக்குனர்கள்  தமது சினிமாக்களில் மிக யதார்த்தபூர்வமாக சித்தரித்து வந்துள்ளனர்.
தீவிர தேசியவாத சிங்கள சினிமாக்களும் வெளிவந்துதான் இருக்கின்றது. இருப்பினும் யதார்த்தவாத சினிமாக்களை எடுத்த குறிப்பிட்ட சில இயக்குனர்கள் அடித்தட்டு மக்ளின் வாழ்க்கை முறை, அவர்கள் இராணுவத்தில் இணைவதற்கான பொருளாதாரத் தேவைகள் குறித்த அடிப்படை உண்மைகளை யதார்த்தபூர்வமாக திரைப்படங்கள் ஊடாக சித்தரித்து வந்துள்ளனர். இதேபோன்று தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்தக் கூடியவகையில் சமூவியல்பார்வையில் அமைந்த சினிமாக்கள் வந்திருக்கின்றதா என்றால் அவை கேள்விக்குரியதாகவே உள்ளது. இது வந்து சினிமாவில் மட்டும் அல்ல பொதுவாகவே சிங்கள சமூகத்திலிருந்து குமாரி ஜெயவர்த்தனா போன்ற வரிசையில் நாம் சில சமூகவியலாளர்களை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இருக்கின்றது. ஈழத் தமிழர்களிலிருந்து சமூகவியலாளர்கள் என்று நாம் யாரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இருக்கின்றது. தம்பையா என்று ஒருவர் தேசவழமை குறித்த ஒரு சமூக ஆய்வை செய்திருக்கின்றார்
குறுக்கீடு சோபாசக்தி: ஏன் சிவத்தம்பியை சொல்லமுடியாதா? சிவத்தம்பிக்கு என்ன குறை? அரசியல் கருத்துகளில் வேறுபாடு இருக்கலாம் ஆய்வாளர்தானே பேச்சு?
தில்லைநடேசன்: சிவத்தம்பியை ஒரு இலக்கிய ஆய்வாளர் என்றுதான் சொல்லலாம்.
சோபாசக்தி: ஏன் அவர் சமூகவியல் குறித்து எழுதியிருக்கிறார்.
தில்லைநடேசன்: சமூகவியலை தொட்டிருக்கின்றார். முறையான சமூகவியலாளர்கள் எம்மிடம் இல்லாததால் இலக்கியத்துறையில் ஈடுபட்ட கைலாசபதி,சிவத்தம்பி போன்றவர்கள் சமூகவியலுக்குள் சென்றிருக்கிறார்கள். ஆனால் அடிப்படை சமூகவியல் பார்வையில் வந்தவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாதிருக்கின்றது.
1937களில் உருவான சிங்கள சினமாக்களில் 1956களிலிருந்தே யதார்த்த சினிமாக்கள் வெளிவரத் தொடங்கியது. ஈழத்து தமிழ் சினிமாவில் இவ்வாறான ஒரு வளர்ச்சிமுறை ஏன் இல்லாது போனதென்றால் அதற்கு இந்திய தமிழ் சினிமாக்களே அடிப்படைக்காரணம் எனலாம். ஒரு ஆலமரத்துக்கடியில் புல்லு முளைக்காததுபோல் இந்திய தமிழ் சினிமாவின் தாக்கமே ஈழத்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்திருக்கின்றது. இந்த நூலில் ஒரு விசயத்தை குறிப்பிடுகின்றார். சிங்கள சினிமாவிலும் இந்திய தமிழ் சினிமாவின் தாக்கம் இருந்திருப்பதாக. அப்படியிருந்தும் சிங்கள சினிமா தனக்கான தனித்துவத்தை தக்கவைத்துள்ளதாக. அதற்கான அடிப்படையாக இருந்தது மொழி என்றே கூறவேண்டும். தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்த நிலைமை நிகழ்ந்ததென்று பார்த்தால் தமிழ் சினிமாவின் வரலாற்றை நாம் பார்க்கவேண்டும். தமிழ் சினிமாவின் ஆரம்பம் இசைநாடகங்களாகவே இருந்துள்ளது. இசைநாடகத்தில் போடப்பட்ட அல்லி அருச்சுனா, பவளக்கொடி, நந்தனார் போன்ற இசைநாடகங்களே திரைப்படங்களாக எடுக்கப்பட்டது. இதற்கடுத்த கட்டமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கில் நிகழ்ந்த வசனகாலகட்டம். இதற்கு அண்ணாத்துரை, கருணாநிதி போன்றவர்கள் பின்னணியாக விளங்கினார்கள். இவர்களது பிரதான அம்சமாக இருந்தது வசனம். இவர்களுக்கு காமெரா முக்கியமாக தெரியவில்லை. நடிப்பு, தொழில்நுட்பம், இசைஅமைப்பு போன்ற அனைத்து வகையிலும் தகுதியுள்ளவர்கள் இருந்தும் யதார்த்த சினிமா உருவாகாததற்கு  காரணமாக இருந்தது தி.மு.கா தான். தி.மு.காவின் அடிப்படை நோக்கமாக இருந்தது ஆரம்பகால புராணப்படங்களுக்கு எதிராக தங்களது கருத்து நிலையில் திரைப்படங்களை எடுக்கவேண்டும் என்று. இருந்தபோதும் நாடகத்தில் விட்ட அதே தவறை சினிமாவிலும் பின்பற்றினார்கள். தமிழுக்கான ஒரு தேசிய சினிமாவை அவர்கள் உருவாக்கவில்லை. இது தி.மு.கா மீது வைக்கப்படும் முக்கியமான ஒரு விமர்சனம். இருந்தாலும் அவர்கள்தான் வசனநாடகங்களை அறிமுகப்படுத்தியதும்,சமூக விமர்சனங்களையும் முன்வைத்தவர்கள். இதில் தி.கவிற்கும்,தி.மு.காவிற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளையும் நாம் பார்க்கவேண்டும். பெரியாருடைய கருத்துக்களை தி.மு.க சினிமாவிற்குள் கொண்டு வந்திருந்தால் அதனது விளைவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். பெரியாருடை பெண்ணியக் கருத்துக்கள் இன்றும் நவீனமானது. வடக்கில் சீதையை முன்னிறுத்தியபோது தி.மு.காவினர் கண்ணகியை முன்நிறுத்தினார்கள். அதற்கு மாறாக கற்பெனும் கருத்தியலை இவர்கள் கேள்விக்குள்ளாக்கவில்லை. யதார்த்தமான சூழலை முன்வைப்பதற்கு இவர்கள் முன்வரவில்லை. இந்தக் காலகட்டத்திற்கு பிற்பாடுதான் காமெராவினால் கதை சொல்லும் நவீன சினிமா தோன்றுகின்றது. எதார்த்தமாக கதை சொல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. பாலுமகேந்திரா,மகேந்திரன்,பாரதிராஜா போன்றவர்களின் முயற்சிகளை குறிப்பிடலாம். ஆனால் இந்த சினிமாகூட நிலைத்து நின்றதா என்றால் இல்லை.10வருடத்திற்கு பிற்பாடு வியாபாரா மசாலா திரைப்படங்களின் எழுச்சியின் காரணமாக இவ்வாறான முயற்சியும் தோல்வி அடைந்தது. இவைகளின் தாக்கமே ஈழத்து தரமான சினிமாவின் முயற்சிக்கும் தடையாக இருந்துள்ளது என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் வெளிவந்த பொன்மணி போன்ற திரைப்படங்களை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் அதற்கு எவ்வாறான ஆதரவு இருந்தது. ஏன் இவ்வாறான திரைப்படத்தை மக்கள் பார்க்க விரும்பவில்லை.
இந்த வகையில் ஈழத்து சிங்கள சினிமாவில் குறிப்பிட்ட சிலர் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.இந்த புத்தகம் படித்ததன் பிற்பாடே தேடிச் சில படங்களைப்பார்த்தேன்.இதில் கூறப்பட்டிருக்கும் அசோக ஹந்தகம வின் அக்ஸர்யா எனும் திரைப்படம், பிரசன்ன விதானகேயின் திரைப்படங்கள் யாவும் யதார்த்த பூர்வமான திரைப்படங்கள். ஆன்மாவின் உணர்வுகளை திரைப்பட மொழியூடாக எவ்வாறு தீண்ட முடியும் என்பதை இந்த சிங்கள இயக்குனர்கள் நிரூபித்து வருகின்றார்கள். இவ்வாறு வந்து இந்த நூல் பல்வேறு சிங்கள தமிழ் சினமாக்களின் அனைத்து அம்சங்களையும் விபரித்து செல்கின்றது. இந்தநூல் தற்போது கவனம் கொள்ளாது போனாலும் 50 வருடங்களுக்கு பிற்பாடு இதனது முக்கியத்துவம் கவனத்தில் கொள்ளப்படும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
உரையாடல்:
சோபாசக்தி: என்ன புத்தகத்துக்க வரமால் பேசுறீங்க…படிக்கேல்லையோ?
றூபன்: அதுதான் என்ர கேள்வியும்.
தில்லைநடேசன்: புத்தகம் படிச்சனான்.
றூபன்: உங்கட அனுபவத்தைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறீங்க.
அசுரா: தேவதாசுக்கு ஒரு வேலை இருக்கு இந்த தலைப்பை மாத்தி எழுதவேணும் திலலைநடேசனின் சினிமா,கூத்து, நாடக அனுபவம் என்று.
றமேஸ்: வாசிப்பு மனநிலை என்பதுதானே தலைப்பு. அதனால அவர் தன்ர மனநிலையில்  பேசியிருக்கிறார்.
சோபாசக்தி: அவர் எப்படி மதிப்பிட்டிருக்கின்றார். அது சரியா பிழையா.
தர்மினி: எழுத்தாளரின் மன நிலையையும், உங்கட மனநிலையையும் சொல்லுங்கோவன்.
தில்லைநடேசன்: கலந்துரையாடலில் கதைப்பம்.
தேவதாசன்: எழுத்தாளர் சொன்ன விசயத்தை தனது கருத்தாக முன்வைத்திருக்கிறார். இது அவரின்ர வாசிப்பு மனநிலைதானே.
ஜோய்: கடசியா இவர் வாசிச்ச விசயம் இருக்குத்தானே ‘வரலாறு எழுதுவதிலும் ஆவணங்களைத் திரட்டுவதிலும், 30ஆண்டுகால அனுபவங்களை தொகுப்பதிலும் ஈழத் தமிழர்களிடம் உள்ள அடிப்படைச் சிக்கல்’ என்று ஜமுனா  கூறுவது. அது ஒரு தப்பித்துச் செல்லும் முயற்சியாகவே தெரியுது. வரலாற்றை முழுமையாக பதிவதற்கு ஈழத்தமிழர்களுக்கு அடிப்படைச்சிக்கல் இருக்குது என்று சொல்லவாறார். இந்தப்புத்தகம் முழுமை அடையாது விட்டால் அதற்கும் காரணம் அடிப்படைச்சிக்கல்தான். அடிப்படைச்சிக்கல் என்பது என்ன என்பது கடசிவரை சொல்லப்படவேயில்லை. இதுதான் தப்பித்துப்போகும் முயற்சி என்பது.  அடிப்படைச் சிக்கல்கள் என்ன, அதிலிருந்து மீண்டெழுவது எப்படி என்பதை பதிவாக வைக்க வேண்டும். இல்லாதுபோனால் இது ஒரு முழுமையான நூலாக இருக்கமுடியாது. 2009க்கு முன்பு அடிப்படைச்சிக்கல் பற்றி நாம் கதைத்தனாங்கள் இண்டைக்கு அது இல்லை. இந்த புத்தகமும் 2009 க்கு பிற்பாடுதான் வெளிவந்திருக்கின்றது. எனவே அவருக்கான அடிப்படைச்சிக்கல் என்ன, அல்லது ஈழத் தமிழர்களுக்கான அடிப்படைச் சிக்கல்கள் என்ன?
தில்லைநடேசன்: ஓரளவிற்கு ஆவணங்கள் தொகுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. தனிப்படட ரீதியாகவோ குழுக்கல் சார்ந்தோ அந்த வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கு
சோபாசக்தி: டென்மார்க்கில கே.எஸ்.துரை என்டு ஒரு எழுத்தாளர் இருக்கிறார் அவர் சில குறும்படங்கள், திரைப்படங்கள் எல்லாம் எடுத்திருக்கின்றார். அவர் வந்து தனது கலையுலக வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். அதில வந்து சுவாரசியமான செய்தி ஒண்டு சொல்லுறார் எப்படியெண்டா, சிங்கள திரைப்படங்களின் வளர்ச்சிக்கு சிங்கள அரசாங்கம் உதவி செய்தது. மானியங்கள் போன்ற உதவிகள். அதேபோல தமிழ் திரைப்படங்களுக்கும் உதவிகள் பெறவேண்டும் எனக்  கருதி 60களில் சில தமிழ் கலைஞர்கள் போய்    அமிர்தலிங்கத்திடம் இதுபற்றி கதைத்திருக்கினம். அமிர்தலிங்கம் ஆக்கள் மிகத் தெளிவாக வந்து அதெல்லாம் இங்கவேணாம் எண்டு சொல்லிப்போட்டினமாம். அதுக்கு இவர் சொல்லற காரணம் என்னெண்டா: தமிழ் நாட்டில வந்து நடிகர்கள் அரசியல் கட்சிகளைதொடங்கி ஆட்சியை பிடித்தார்கள். அதுபோல சிங்களப் பகுதிகளிலும் காமினி பொன்சேகா,விஜயகுமாரணதுங்க போன்றவர்கள் அரசியலுக்கு வந்தார்கள. அதேபோல எங்கட கலைஞர்களும் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயத்திலதான் அமிர்தலிங்கம் ஆக்கள் இதெல்லாம் வேணாம் என்று கலைச்சுவிட்டார்கள் என்று அவர் எழுதுறார்.
யோகரட்ணம்: இல்ல அதில ஒரு உண்மை இருக்கு.
சோபாசக்தி: அப்ப விசயம் இருக்கு.
யோகரட்ணம்: இதில நாங்க கவனமாக பார்க்கவேண்டிய ஒரு விசயம் இலங்கை வானொலியில நடக்கும் அத்தனை தமிழ் நிகழ்ச்சிகளையும் இந்திய தமிழர்கள் வரவேற்றார்கள். தமிழகத்து தமிழர்கள் இலங்கைத் தமிழை வரவேற்றார்கள். இலங்கைத் தமிழில் எடுக்கப்படும் தமிழ் சினிமாக்கள் 6-7 நாட்களுக்குமேல்  ஓடுவதில்லை.  நீங்கள் சொன்ன ‘குத்துவிளக்கு’,கண்மணி’,ரக்சிறைவர்,’வாடைக்காற்று’இதெல்லாம் படுத்து தூங்கினதுக்கு காரணம் சாதாரணமான பேச்சுத் தமிழை ரசிக்கத் தவறியதால்தான். அது ஒண்டு. இரண்டாவது அவர் சொன்னது சிங்களசினமாவிற்கு அரசாங்கம் ஆதரவு கொடுத்ததென்பது அது பிழையான தகவல். இலங்கை திரைப்படக் கூட்டுஸ்தாபனம் தான் உதவிகளை செய்தது.ஆரம்பத்தில இந்தியாவில் இருந்து வரும் சினிமா சார்ந்த மஞ்சள் பத்திரிகைகளை தடைசெய்து உள்ளுர் இலக்கியத்தையும், கலைஞர்களையும் ஊக்குவிப்பதற்கான முயற்சிமேற்கொள்ளப்பட்டது. இதில சினிமாவும் அடங்குகின்றது. சினிமாவிற்கும் ஒரு குறிப்பிட்ட நிதியை இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனம்  வழங்கியது. ஆனால் இந்த விசயத்தை எமது தமிழ் அரசியல் தலைமைகள் தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பாதகமாக பார்த்தது. இப்ப இவர் சொன்ன கருத்து மாதிரி இங்க விஜயகுமாரணதுங்க…
சோபாசக்தி: நான் சொல்லேல்ல  கே.எஸ்.துரை சொன்னது.
தில்லைநடேசன்: எனக்கு இது புதுத் தகவல்
யோகரட்ணம்: இதை நீங்கள் பழைய ஆக்களிடமும் கேக்கலாம். இதற்கு யாழ்ப்பாண அரசியல் தலைமை சொன்னது என்னென்றால் எங்கட தொப்புள்கொடி உறவுகள் அறுக்கப்படுகின்றது, அங்கே இருந்து வருகின்ற இலக்கியங்கள் தடுக்கப்படுகின்றது என்றெல்லாம் அந்த முயற்சிக்கு தடையாக இருந்தார்கள். இருந்தபோதும் நீங்க பார்த்தீங்களென்றால் இலங்கை தமிழ்படைப்பாளிகளின் 100 புத்தகங்களுக்கு மேலாக வீரகேசரிபிரசுரமாக வெளிவந்தது. இந்த புத்தகங்களை நீங்கள் தற்போது பேசுகின்ற இந்திய பிரபல்யங்கள் வாசித்துவிட்டு யாழ்ப்பாணத் தமிழிற்கு அடிக்குறிப்பு எழுதுங்கோ என்று கேட்ட வரலாறுகளும் இருக்கு.
தில்லைநடேசன்: இந்திய தமிழ் சினிமாவில் பேசுகிற மொழிக்கும் அவர்கள் சாதாரணமாக பேசுகிறமொழிக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு.
சோபாசக்தி: இன்னொரு விசயத்தையும் நேர்மையாக ஒத்துக்கொள்ளவேணும் நான் வந்து இலங்கையில வெளிவந்த எல்லா தமிழ் படங்களும் பார்த்திருக்கிறன். ‘வாடைக்காற்று’ ‘பொன்மணி’போன்ற இந்த இரண்டு படத்தை தவிர மற்ற படங்கள் யாராலையும் பார்க்கமுடியாத படங்கள்தான். மிக மோசமான படங்கள் அது கருத்தியல் ரீதியாகவும் மிக மோசம். ஆனால் ‘வாடைக்காற்று’ வெற்றிப்படம். ‘பொன்மணி’ வந்து அது எடுத்துக்கொண்ட விசயம் சீரியஸ். வசனம் எல்லாம் வந்து ‘அவள் ஒரு வெள்ளாடிச்சி’என்று பேசும் வசனங்கள். சாதிப்பிரச்சைனையை மையமாக வைத்து எடுத்த படம் பொன்மணி. அதை ஓடாமல் செய்யுறதுக்கு பலர் பலவிதமான வேலை பார்த்திருப்பார்கள். அந்தப்படம் ஒரு சிங்களவர் இயக்கியது. எழுதியது காவலூர் இராசதுரை எனும் ஒரு இடதுசாரி. சில்லையூர் செல்வராசன் போன்றவர்கள் பங்களிப்பு செய்த படம் அது.
யோகரட்ணம்: மற்றது சிங்கள சினிமாக்களை தயாரித்தவர்கள் அநேகமாக தமிழர்கள். கே.ஜி.குணரட்ணம், ஞானம்ஸ், ரொபின்தம்பு போன்றவர்கள். விஜயகுமாரணதுங்க அறிமுகமானதே ரொபின்தம்பு தயாரித்த படத்தின் மூலமாகவே. கேஜி.குணரட்ணத்திற்கு வத்தளையில மிகப்பெரிய படப்பிடிப்பு தியேட்டரே இருந்தது. ஜே.வி.பிக் கலவரத்தில் கொழுத்தப்பட்டது.
சோபாசக்தி: பிரசன்ன விதானகே வின் படமோ, அசோக ஹந்தகம வின் படமோ தியேட்டரில் ரிலீஸ் பண்ணுவதே பெரிய பிரச்சனையாக இருந்தது. அரசாங்கத்தாலும் பிரச்சனை வேற பல பிரச்சனைகளையும் எதிர்நோக்கியவர்கள் அவர்கள். அவர்களது படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகவும் ஓடுவதில்லை. அங்க இப்பவும் நன்றாக ஓடுற படங்கள் கமார்சியல் படங்கள்தான். அதையும் நாங்க யோசிக்க வேணும்.
யோகரட்ணம்: இந்திய சஞ்சிகைகளின் இறக்குமதி கொஞ்சம் தடைசெய்யப்பட்ட பிறகே இலங்கையில் பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மை வளர்த்துக்கொள்ளவும், பிரபல்யம் பெறவும் காரணமாக இருந்தது. இதற்கு தமிழ்த்தலைமை, குறிப்பாக அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் உள்ளுர பயந்தார்கள். எப்படியென்றால் தங்கட அரசியல இலக்கியத்தில கொண்டுவந்து விடுவார்கள், தங்கட அரசியலை நாடகத்தில கொண்டுவந்து விடுவார்கள், தங்கட அரசியல சினிமாவில கொண்டுவந்து விடுவார்கள் என்பது. இதைத்தான் கே.எஸ் துரை அவர்கள் சொல்லுவதில் ஞாயம் இருக்கு என்று சொன்னேன்.
தில்லை நடேசன்: இது ஒரு முக்கியமான விசயம். 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தபோதே தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்கள்.ஆனால் அதை எதிர்த்தது யார்? இவர்கள்தான்.ஆங்கிலக்கல்வி தொடரவேண்டும் என்பதுதான் தமிழ் தலைமைகளின் விருப்பமாக இருந்தது. உண்மையில் பண்டாரநாக்கா தான் தமிழ்க் கல்விக்கு அடித்தளம்.
யோகரட்ணம்: அடித்தளம் மட்டுமல்ல நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் சொல்லிவாற விசயம் இதுதான். அதாவது சிங்கள மொழிச்சட்டத்தை கொண்டுவந்தபோது தமிழ் மொழிக்கான விசேடவிதியும் இணைக்கப்பட்டிருந்தது. தமிழ் பேசுகிற ஒவ்வொருவரும் தங்களுடைய பாசையில் எந்தக் காரியமும் மேற்கொள்ளலாம் என்பது விலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த விசயம் மறைக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் சினிமா வளர்ச்சிக்காக இலங்கை அரசாங்கம் பல உதவிகளை செய்தது. ஆனால் அதால தமிழ் அரசியல் தலைமைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை உணர்ந்து அதற்காக அவர்கள் கூறிய காரணம், ஐயோ இந்தியாவிலிருக்கும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளை இது பாதிக்கும் என்று கூறினார்கள்.
சோபாசக்தி: கே.எஸ்.துரை எழுதிய புத்தகத்தில் முக்கியமான விசயம் ஒன்றை அவர்குறிப்பிடுகிறார். தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாடகம் நடித்ததாகவும் அந்த நாடகத்தின் பெயர் ‘மர்ம மனிதன்’என்பதாகவும், அந்த நாடகத்தை இயக்கியவர் வே.பிராபகரன் என்பதாகவும். இரண்டு பேரும் கிளாஸ் மெட். அப்ப பிரபாகரன் எட்டாம் வகுப்பிலேயே நாடகம் போட்டிருக்கிறார் அந்தநாடகத்திற்கு மர்ம மனிதன் என்றும் பெயர்வைத்திருக்கிறார். நோட் தட் பொயின்ட்.
ரமேஸ்: ’மர்ம மனிதனா ‘ ‘மர்ம சிரிப்பா’?
தேவதாசன்: மற்றது வந்து இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனம்  என்பது சிங்களவர்களுக்கானது மட்டுமல்ல. தமிழ் சினமாக்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்தது. தமிழ் அரசியல் தலைமைகள் தலையிட்டதால் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அவை தடையாக இருந்ததே ஒழிய இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனம் என்பது சிங்களவர்களுக்கு மட்டுமானதாக இருக்கவில்லை.
யோகரட்ணம்: அதோட மிக குப்பையான படங்களை தவிர்க்கவேண்டும் என்றும் அரசாங்கம் கருதியது. கீத் என்கின்ற ஒரு ஹிந்திப்படம் மருதானையில் 3வருசம் தொடர்ச்சியாக ஓடியது. தமிழ் மக்கள் ரசித்து பார்க்கின்ற எம்.ஜி.ஆர். சிவாஜி யின் படங்களை சிங்கள மக்களும் மிக ரசித்து பார்த்தார்கள்.
அரவிந் அப்பாத்துரை: இப்ப நான் தமிழ் படங்கள் அதிகம் பார்ப்பதில்லை என்ன காரணம் என்றால் தமிழ் படத்தில வரும் மிகை நடிப்புகள் பிடிப்பதில்லை. ஒப்பனையும் அவர்கள் கதைசொல்லும் விதமும் எனக்கு பிடிப்பதில்லை. அதனால்தான் நான் அதிகம் தமிழ் படங்கள் பார்ப்தில்லை. நான் எழுதின ‘திரு மாயைகளின் சதிர்’ என்ற நாவல் இருக்கில்லையா அது வந்து தமிழ்சினமாக்கள் பற்றிய கதைதான். இப்ப தமிழில் வந்த யதார்த்த சினிமாபற்றி பேசிநீங்க அதற்கு உதாரணமாக பாலுமகேந்திரா போன்றவர்களை குறிப்பிட்டிருந்தீர்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று வந்து சடங்கு வகை, இன்னொன்று பிரச்சார வகை. ஆனால் கலை என்ற பக்கத்திற்கே தமிழ் சினிமா என்னும் வரவில்லை. சடங்கு,பிரச்சாரம்  இதுக்குள்ளதான் தமிழ் சினிமா மூழ்கிக் கிடக்குது. ஆரம்பத்தில் நினைத்தேன் இது காதலைப்பற்றிய ஒரு சடங்காக இருப்பதாக. எப்போதும் இந்த சினிமா காதலைப்பற்றித்தானே பேசுகிறது என்று. இப்படி இருக்கும்போது ஒரு படத்தை காட்சிகளை பார்க்காமல் வெறும் வசனங்களை மட்டும் கேட்டுப்ப்பார்த்தபோது அது காதலுக்கும் உரிய சடங்காக தெரியவில்லை. அது கல்யாணத்திற்கான சடங்காக தெரியுது.
இதில நான் தெரிந்து கொண்ட முக்கிய விசயம் என்னவென்றால் இதற்கு வந்து சிவில் அமைதியை காப்பாற்றுவதும் பழைய சடங்குகளை பேணுவதுமே அடிப்படை நோக்கமாக இருக்கின்றது. இதற்கான பின்பலம் எது என்று பார்த்தால் பணம். பணம் படைத்தவர்களே எவ்வாறான மாற்றத்திற்கும் உள்ளாகமல் சமுதாயம் அப்படியே இயங்கவேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டு வருகின்றார்கள். சமூகத்தில் எந்த விதமான மாற்றங்களும் நிகழ்ந்து விடக் கூடாதென்பது தமிழ் சினிமாவின் முக்கியமான பொலிசியாக இருக்கின்றது. பணத்தின் அதிகாரம் தான் இதற்கு காரணமாக இருக்கின்றது. என்னுமொரு உதாரணத்தை பாருங்க 60வயது கிழவன் 20 வயதுபாத்திரத்தை ஏற்று நடிப்பது. இது கலை கிடையாது என்னைப் பொறுத்தவரையில் இது சடங்கு. அது மாதிரி பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் 30 வயதை தாண்டிவிட்டால் அம்மா வேசம்தான் போட்டாகணும். அவர்40 வயது வரை மிக அழகாக இருந்தாலும் அவ அம்மா வேசம் தான் போட்டாகணும். அவ கதாநாயகியாக நடிக்க முடியாது. தமிழ் சினிமாவில் உருப்படியான விசயம் என்றால் பாடல்களை சொல்லலாம் படத்தை எவ்வளவுதான் வெறுத்தாலும் பாட்டை நாம் வெறுக்கமுடியாது காரணம் பாட்டு ஒரு அரசியல். பாட்டு என்பது நாம் உட்காந்திருந்துதான் கேட்க வேண்டும் என்பதில்லை. எமது காதுக்குள் எப்போதும் எங்கேயும் கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் அந்த பாடல்களிலும் சமுதாய விழுமியங்களில் பேணப்படுகின்ற விசயங்களை தாண்டவும் கூடாது என்கின்ற நிலைமையும் தமிழ் பாடல்களில் பேணப்பட்டுவருகிறது. புரட்சிகரமான சிந்தனைகள் வரவே கூடாது. தமிழ் சினிமாவென்பது கலை என்ற அம்சத்திற்குள் நுழையவில்லை. ஒன்றிரண்டு படங்கள் வந்தது உண்மைதான்.
சோபாசக்தி: கலை சார்ந்து, வாழ்வியல் சார்ந்து ஒரு படத்தை எடுத்து அதை மக்கள் பார்க்கிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்க. உண்மையில் அப்படி ஒரு படத்தை எடுத்து தியேட்டருக்கு அனுப்பமுடியாது. படத்தில ஒரு சாதியின்ர பெயர் வந்தா கட், அரசியல் பிரச்சனைகளை வெளிப்படையா சொல்லேலாது இப்படி பல்வேறு பிரச்சனைகள் இருக்கு. செங்கடலில் வந்து ஆரம்பத்தில்  கட்டே கிடையாது ஒரு வருச தடைக்கு பிற்பாடு சிறு மாற்றங்களோடு வந்தது ஆனால் தியேட்டர்களில் ஓடவில்லை. காரணம் நேரடி அரசியலை பேசுகின்ற படம் என்பதால் யாரும் வேண்ட மாட்டார்கள். அந்த ஒரு பிரச்சனை இருக்கு. இது மட்டுமல்ல  சென்சாரில் இருந்து மீட்டெடுத்தாலும் எ சான்றிதழ் கிடைத்தால் வரிவிலக்கு இருக்கின்றது. இது கிடைத்தால் தயாரிப்பில் 30வீதத்தை எடுக்கலாம். இந்த பிரச்சனைகளையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் படங்கள் எடுக்கிறார்கள். சென்சார் என்பது மிகப்பெரிய தடை. உதாரணத்திற்கு பாமாவின் கருக்கு நாவலை படமா எடுக்கேலாது. பாமாவின் நாவலை பறையன, தேவர் என்ற வார்த்தையில்லாமல் எப்படி படமாக எடுகக்க முடியும். சிங்களப்படங்களில் உடல் உறவுக்காட்சிகளெல்லாம் காட்டப்படுகின்றது சில கதைகளுக்கு அவை காட்டப்படவேண்டியது அவசியமாக இருக்கு தமிழ் சினிமாக்களில் இது சாத்தியமேயில்லை.
அரவிந் அப்பாத்துரை: தமிழ் நாட்டில மட்டுமல்ல இந்தியா பூராவுமே கலைப் படைப்புகளுக்கான ஆதரவு இல்லை என்று தான் சொல்லலாம். உலகத்திலேயே வருடத்தில் அதிகமான சினிமா எடுக்கப்படுவது இந்தியாவில்தான் ஆனால் பிரான்சில் நடைபெறும் கான் திரைப்படவிழாவிற்கு எந்த இந்தியப்படமும் தெரிவாவதில்லை.
சோபாசக்தி: அது சரி நீங்க ஜமுனா இராஜேந்திரனின் புத்தகம்பற்றி கதைக்கிற யோசனையில்லையோ?
அசுரா: இவ்வளவு ஒரு முக்கியமான புத்தகம் பற்றி கதைக்காமல் நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கின்றோம். இதில வந்து எவ்வளவு முக்கியமான சிங்களப்படங்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் அடங்கியிருக்கு. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உண்மையில வந்து இவ்வாறான சிங்களப் படங்களையும், தமிழ் குறும்படங்களையும், குறிப்பாக சிங்களப் படங்களை தமிழிற்கு அறிமுகப்படுத்திய வகையில் ஜமுனா இராஜேந்திரனுக்கு நாம் இங்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். இந்த நூலில் அடங்கியுள்ள  சில சிங்களப் படங்களை நான் பார்த்திருக்கின்றேன். உண்மையில் ஜமுனா இராஜேந்திரனின் திரைப்படங்கள் குறித்த அறிமுகம் என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியவிசயம் தான் மிக அழகாக அறிமுகப்படுத்துவார். ஆனால் அவருடைய விமர்சனங்கள் என்று வரும்போதுதான் சிக்கலாகவும், எனக்கு மிக எரிச்சலாகவும் இருக்கும். ஒரு கலைப்படைப்பு என்று வருகின்றபோது ஒரு கலைஞனுக்குரிய பன்முகப்பார்வை முக்கியம் என்று கருதுகின்றேன். விமர்சனம் என்று வருகின்றபோது ஜமுனா இராஜேந்திரன் அவர்கள் தான் பற்றுக்கொண்ட கருத்தியலில், கோட்பாடுகளில் வசப்பட்ட நிலையில் கலைப்படைப்புகளை விமர்ச்சிக்கும் தன்மை ஒரு உண்மையான கலைஞனுக்கு உகந்ததாக எனக்கு தெரியவில்லை. இவரது விமர்சனத்தில் நிறைய முரண்பாடுகளை என்னால் காணக் கூடியதாக இருக்கின்றது.
சோபாசக்தி:  கோட்பாட்டுப் பார்வை பார்க்கிறார் என்று சொல்லுறீங்களா?
அசுரா: பொறுங்கோ நான் அந்த முரண்பாடுகளையும், வேறபாடுகளையும் இந்த நூலில் இருந்து சில பகுதிகளை வாசித்து காட்டி எனது முடிவுக்கு வாறன். இதில மூன்று படங்கள் குறித்த இவரது விமர்சனங்களின் ஆதாரத்தின் அடிப்படையில் இந்த விசயத்தை சொல்லுறன். ஒன்று மோஹன் நியாசின் ‘களு சுது மல்’ எனும் படம், மற்றது அசோக ஹந்தகமவின் ‘கனல் தகிக்கும் சொல்’மூன்றாவது புதியவனின் ‘மண்’ எனும் திரைப்படம். ‘களு சுது மல் ‘எனும் படம் தவிர மற்றைய இரண்டு படமும் நான் பார்த்தனான்.
‘களு சுது மல்’ படத்தில் ஆண் பெண் எனும் இரண்டு தற்கொலைப் போரளிகள் அமைச்சர் ஒருவரை கொல்லும் திட்டத்திற்காக அனுப்பப்ட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக தங்கியிருக்கும்போது. பெண் தற்கொலைப்போராளி உடல் தெரியும் ஆடை அணிந்தபடி ஆண் தற்கொலைப்போராளியை வசப்படுத்தி உடல் உறவு கொள்கிறார். பக்கத்து கடைக்காரன் ஒருவனுடனும் அந்த தற்கொலை பெண் போராளி உடலுறவு கொள்கிறாள். பெண்தற்கொலைப்போராளி கற்பமானதால் தாங்கள் உயிர் வாழ ஆசைப்பட்டு பின்பு அந்தக்கடைக்காரனையே தற்கொலையாளியாக பயன் படுத்துகிறார்கள். இவர்கள் தப்பி வாழ்ந்தபோதும் தலைமை இவர்களை கொல்வதோடு படம் முடிகிறதாம்.
இதற்கு இந்த நூலில் ஜமுனா முன்வைக்கும் விமர்சனம்: ‘இந்தத் திரைப்படத்தின் பாலுறவுக் காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதேயாகும். தற்கொலையாளிப் பெண்ணும் போராளியும் பதுங்குகுழியில் பாலுறவு கொள்ளும் காட்சியை சந்தோஸ் சிவன் டெர்ரரிஸ்ட் படத்தில் காட்சிப்படுத்தவில்லை. மணிரத்தினம் கூட உயிரே படத்தில் இவ்வாறான விகாரமான சித்தரிப்புகளை மேற்கொள்ளவில்லை. ஒரு மூன்றாம் தரப்படத்தினைப் போல காமக் கணைவீசும் காட்சிகளை, இரவு விடுதி நடன மாதின் மெல்லிய உடைகளுடன் இப்படத்தின் இயக்குனர் பாவித்திருக்கிறார். மேலாகக் கர்ப்பம் பெறாத பெண் தற்கொலையாளிகள், காதல் போன்றவற்றையும் மீறிய அவர்களது கடப்பாட்டு உணர்வுகளை இதுபோன்ற இயக்குனர்களால் தீண்டிப்பார்க்கவும் கூட முடிவதில்லை. என்பது இங்கு குறித்துக் கொள்ளத்தக்கதாகும்.’(ப.ம்48) இவ்வாறு இந்த உடல் உறவு, விகாரம், காமக்கணை வீசப்படுவது குறித்து மூன்றாம் தர சினிமா எனக்குறிப்பிடும் ஜமுனா. அசோக ஹந்தகம வின் ‘கனல் தகிக்கும் சொல்’எனும் திரைப்படத்தை புகழ்ந்து பேசுகிறார். இந்தத் திரைப்படக் கதையானது மகளையே தகப்பன் திருமணம் செய்வதும்  அது பிற்பாடு மகளுக்கு தெரிய வருகின்றபோது அப்பெண்ணின் மனநிலை குறித்த சித்தரிப்பாக விரிகின்றது. இந்தப்படம் பற்றிய ஜமுனாவின் விபரிப்பு இப்படியிருக்கிறது: ‘….ஆடைகலைந்த நிலையில் தனது இருகைகளையும் விரித்தபடி வா வந்து என் மீது படு. இப்படித்தான் என் மீது நீ படுத்திருப்பாய் என்றபடி தன் கால்களுக்கிடையில் அவனை அழுந்தப் புதைக்கிறாள். (ப.ம்.63)   ‘…கனல் தகிக்கும் சொல் இலங்கை மேட்டுக்குடியினரின் பாலுறவு அதிகாரம் முறைசாரா பாலுறவுகள், வன்புணர்ச்சி போன்றவற்றை சித்தரித்ததற்காகவும், புத்தமதக் கலாச்சாரத்தை அவமானப்படுத்துகிறது எனும் காரணத்திற்காகவும் தடைசெய்யப்பட்டது….. திரைப்படத்தில் தாய்க்கும் அவளது பன்னிரெண்டு வயதுச் சிறுவனுக்கும் இடையிலான ஒரு குளியலறைக் காட்சியில், சிறுவனுக்கு முன்பாக அவனது தாய் ஆடைகளைந்து முற்றிலும் அம்மணமான நிலையில் குளியலறைத் தொட்டிக்குள் இறங்கும் காட்சியால் படம் குழந்தைத் துஸ்பிரயோகம் கொண்டது என இலங்கை அரசு வாதிக்கிறது.’ (ப.ம்65)  இது வந்து உளவியல் சார்ந்த அதிர்ச்சி மனோவேதனைக் கதை என்பதாக இயக்குனரும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கலாச்சார அமைச்சு அரசு போன்ற அதிகாரங்கள் இப்படைத்தை தடைசெய்திருக்கின்றது எனவே இப்படத்தை ஜமுனா பாராட்டியுள்ளார்.
அடுத்தது புதியவனின் ‘மண்’ எனும் திரைப்படம் குறித்து இவ்வாறு ஜமுனா எழுதுகிறார்: ‘மண் படத்தின் சொல்நெறி என்பது யதார்த்தமும் மனோரதியமும் கலந்த கலவையாக நிற்கிறது. படத்தில் நாயகன் நாயகிக்கு இடையிலான கதைக்கும் மிக மிக மையமான கலவிக் காட்சி, உக்கிரமான யதார்த்தமாக ஆகியிருக்கவேண்டும். மாறாக. உருண்டு புரண்டு, மரத்தைச் சுற்றி ஓடிய பாடல் காட்சியாக அது ஆகியிருக்கிறது. யதார்த்தத்திற்கும் மனோரதியத்திற்கும் இடையில் தீர்மானிக்கவியலாத வகையில் இயக்குனர் பயணம் செய்திருப்பது படம் நெடுகத் தெரிகிறது’(ப.ம்129)
இவ்வாறு ‘மண்’படத்தில் கலவிக் காட்சியின் குறைபாட்டையும், ‘கனல் தகிக்கும் சொல்’ படத்திற்கு ஜமுனா இராஜேந்திரன் விளக்கும் நியாயங்களுக்கும் ‘களு சுது மல்’ திரைப்படத்தில் ஜமுனா முரண்படுவதற்கும் உள்ள நியாயத்தை நாம்பார்ப்போம். ‘களு சுது மல் ‘திரைப்படம் அரச, இராணுவ ஒத்துளைப்புடன் எடுக்கப்பட்ட படம் ஒரு போராட்டத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரம் எனும் ஒரு கோட்பாட்டு நியாயங்களுடன் அப்படைத்தை விமர்சித்திருந்தால் அதில் ஏதாவது நியாயம் இருந்திருக்கலாம்.
‘மண்’ படத்தில் கலவிக் காட்சி உக்கிரமாக காட்டப்படவில்லை என்பது குறையாக தெரியும் ஜமுனாவிற்கு தற்கொலைப் போராளிகளின்  உடலுறவு கொள்வது ஏன் விகாரமாக தெரிகின்றது. அதில மணிரத்தினம் கூட இப்படியெல்லாம் செய்யவில்லை என்று வேற நியாம். தற்கொலைப் போராளிகள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு உடல் மொழி இல்லையா? அவர்களுக்கு மனப் பிறழ்வு ஏற்படாதா? அவர்களுக்கு வெடித்துச் சிதறுவதைத் தவிர வேறு நோக்கம் இருக்கமுடியாதா?
ஜமுனா இராஜேந்திரனால் எழுதப்பட்ட ‘புத்தனின் பெயரால்’எனும் நூலில் அவரது விமர்சனங்கள் வெறும் இயந்திரத்தனமானது ஒரு கலைஞனுக்குரிய நுண்ணிய தளங்களுக்கூடாக அவரது விமர்சனம் இயங்கவில்லை. மிக ஆழமாக அவதானித்தீர்களாயின். அரச ஆதரவான படங்களை நிராகரிப்பவராகவும், அரசு தடைசெய்த படங்களை ஆதரிப்பவராகவும் காணப்படுவதை வாசகர்கள் உணரலாம். இருந்தபோதும் ஜமுனா திரைப்படங்களை அறிமுகம் செய்யும் பாணி அலாதியானது. வரவேற்கப்படவேண்டிய விடயம். (நூலிலிருந்து மேற்கோள்கள் உரையாடலில் பேசப்படாதது)
ஜோய்: இங்கு சொல்லப்பட்ட விசயத்திலிருந்தும், நான் வாசித்த வகையிலும் சினிமாவைப் பற்றிய அறிமுகத்தை மட்டும் சொல்லப்பட்டிருந்தால் மிக நல்லாக இருந்திருக்கும் என்றுதான் நினைக்கின்றேன். அதைத்தாண்டி சினிமா பேசுகின்ற அரசியலை சொல்ல வராமல் தான் கொண்ட அரசியலை மட்டுமே பேசுவதாக இருக்கு.
அரவிந் அப்பாத்துரை: ஜமுனா இராஜேந்திரன் அறிமுகம் செய்து வைப்பதில் மிக ரலண்ட் ஆனவர். பெரிய பெரிய தத்துவ ஞானிகளையும் அறிமுகம் செய்து வைப்பார் அது தமிழுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். அது தவிர்த்து அவரது விமர்சனப்பார்வை என்று போனால் வந்து கொஞ்சம்.. நீங்க சொன்ன மாதிரி சிக்கல்தான். அவர் வந்து ஒரு மார்க்சிய கோட்பாட்டில….
சோபாசக்தி: யாரு ஜமுனா இராஜேந்திரனோ!! மார்க்சிசோ!! ஒரு மார்க்சிய கோட்பாட்டாளன் என்றால் அவர் எப்படியுஙகோ விடுதலைப்
புலிகளை ஆதரிப்பார்.
»»  (மேலும்)